மோடி நண்பர் அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வெடிக்கும் போராட்டங்கள்

உலகம்

சிட்னி , பிரிஸ்பேன் மெல்பர்ன், தி கோல்டு கோஸ்ட், வடக்கு குயீன்ஸ்லாந்தின் போர்ட் டக்லஸ் , உள்ளிட்ட பகுதிகளில் ஆஸ்திரேலிய மக்கள் ஆயிரக்கணக்கில் அணி வகுத்து மோடியின் கூட்டாளி அதானியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதானியே திரும்பி போ! நிறுத்து அதானியே! உள்ளிட்ட பதாகைகள் உயர்த்தி பிடிக்கப்பட்டன.

16.5 பில்லியன் டாலர் முதலீட்டில் கார்மைக்கேல் சுரங்க திட்டம் சுற்றுசூழல் , மற்றும் நிதி பிரச்னையால் தாமதப்பட்டு வருகிறது அத்துடன் இந்த திட்டத்திற்கு ஆஸ்திரேலிய நாடெங்கும் கடும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.


எங்கள் எதிர்காலம் மிகவும் அவலமாக இருக்கப்போகிறது இதை அனுமதித்தால் என் 2 வயது மகள் நாளை 10 வயதாகும் போது தந்தையே ஏன் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டீர்களே? சுரங்கம் செயல்படும் போது எதாவது செய்து இருக்கலாமே என என் மகள் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும் என கேட்கிறார் சைமன் போஸ்ட்டலின்க் என்ற போராட்டக்காரர் கூறுகிறார் அதானியை நிறுத்து என்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிட்னியில் 2000 பேர் திரண்டதாக் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் கூறுகிறது.


இது சரவதேச பிரச்னை எங்கள் தெற்கு ஹார்ம்ஸ் பெயர்ல் ல் உள்ள மிகப்பெரிய சுரங்க தோண்டுதல் நடந்தால் எங்கள் சீதோஷ்ண நிலை முற்றிலும் சீர் குலைந்து போகும் என ஸ்டாப் அதானி போராட்டக்காரர் ஐசக் ஆஸ்டில் கூறுகிறார்.


அதே போல் மெல்பர்ன் பிரின்சஸ் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர் எதிர்காலத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தப்பட்டது இது நடவடிக்கைக்கான மாபெரும் நாள் என ஆஸ்திரேலிய உரையாடலுக்கான அறக்கட்டளை நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கெல்லி ஓஸான்ஸ் சே தெரிவித்தார்.


தங்களின் பணத்தை நாசகார திட்டத்திற்கு செலவிட சம்மதிக்க மாட்டோம் என வரி செலுத்தும் மக்கள் உறுதி எடுக்கும் விதமாக இந்த போராட்டங்கள் நடப்பதாக கூறினார். இந்த திட்டம் பூமியில் வாழும் ஒவ்வொரு ஒற்றை உயிரினத்தையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


200ல் இருந்து 300 ஆர்ப்பாட் டக்காரர்கள் பெர்த் கோட்டெஸ்லோ கடற் கரையில் திரண்டு அதானியை நிறுத்துமாறும் அதானி திரும்பி போகவேண்டும் என்றும் முழங்கினர்.


ஹோபர்ட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர். நடவடிக்கைக்கான தேசிய தினத்தில் அதானி வகையறாக்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா குலுங்கியது. ஆஸ்திரேலிய அதானி குடும்பத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெயக்குமார் ஜனகராஜ் நாங்கள் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்துடன் இருப்பதால் எங்களுக்கு ஆஸ்திரேலியாவின் பிராந்தியங்களில் ஆதரவு உள்ளது என சப்பை கட்டுகிறார் . இந்தியாவில் மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வந்து விட்டு எங்களுக்கு ஆதரவு உள்ளது என சொன்ன அதே பொய்யை ஆஸ்திரேலியாவிலும் அவிழ்த்து விடுகிறார்கள். மானம் கப்பல் கப்பலாக ஏறுகிறது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.