ஆப்கானிஸ்தானில் 841 வான் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா

உலகம்

அமெரிக்க ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் 751 குண்டுகளை ஆப்கானிஸ்தானில் வீசியுள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் அந்நாட்டில் வீசியுள்ளதை விட அதிகம் என தெரியவந்துள்ளது. இத்தகவலை அமெரிக்க வான்படையின் மத்திய மண்டலம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் 503 குண்டுகள் வீசப்பட்டன. அது இரண்டு மடங்காக எகிறியுள்ளது. அதிபர் டானால்டு ட்ரம்ப் ன் கொள்கை வெறியே இத்தகைய தாக்குதலுக்கு அதிக காரண மாக விளங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


2010 ம் ஆண்டில் இருந்து ஏழு ஆண்டுகளில் அதிக அளவு போர் வெறி கொண்டு வெறித்தனமாக குண்டு வீசப்பட்டுள்ளது 2012 இல் 589 குண்டுகள் ஆப்கானிஸ்தான் மீது வீசப்பட்டது ஆனால் 2012 ஐ 2017ல் மிஞ்சி விட்டது. இரக்கமற்ற அரக்கத்தனத்தில் ட்ரம்ப் அரசு வெறியாட்டம் போடுகிறது. 2017 சனவரி முதல் செப்டம்பர் வரை 3238 குண்டுகள் அந்த போரில் சிதிலமடைந்த தேசத்தின் மீது வீசப்பட்டது எவ்வளவு கொடூரம். குதறப்பட்ட மக்களின் கதறல்கள் உலகின் காதுகளில் கேட்கவில்லையா? 2016ம் ஆண்டில்1337குண்டுகளை வீசி நாசப்படுத்தியுள்ளது. 2017ல் அதையே 2 மடங்காக்கிவிட்டனர். அதிபர் ட்ரம்பின் மூர்கத்தன கொள்கையால் ஆப்கான் நிலைமை அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. கடந்த ஆண்டு 615 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இவ்வாண்டு 841 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாம் அனைத்துமே வான் தாக்குதல்கள்தான் வான் தாக்குதல் மட்டுமா ? இது வீண் தாக்குதல் அல்லவா? ஏகாதிபத்தியமே உன் ரத்த தாகத்திற்கு முடிவே இல்லையா என்று கேட்க தோன்றுகிறதல்லவா?


2011ல் ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகள் திரும்ப பெறப்படும் என்ற ஒபாமாவின் வாக்குறுதிகள் காற்றில் கலந்து குண்டு வீச்சில் மாயமாகி மறைந்து விட்டது. அடிமைகளை வைத்துக்கொண்டு இன் னும் எத்தனைக்காலம் ஜனநாயக குரல்வளையை நசுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.