புர்கா, முக கவசம் அணிந்தால் அபராதம் அபராத தொகையை கட்டி பிரெஞ்சு தொழிலதிபர் அதிரடி

உலகம்

ரஷீத் நெக்காஸ் இவர் அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சு தொழிலதிபர். அவர் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிவிப்பு ஐரோப்பாவையே கலக்கி இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்ததற்காக விதிக்கப்படும் அபராத தொகையை தாமே செலுத்த தயாராக இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய முஸ்லிம் பெண்களுக்கு குறிப்பாக ஆஸ்திரிய பெண்களுக்கு தானாக விரும்பி புர்கா அணிவதற்கு அபராதம் விதிக்கப்பட்டால் அவர்களுடன் நான் இருக்கிறேன் என்கிறார் ரஷீத் . நானே அபராதத்தை செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். இவர் இது பற்றி ஆஸ்த்திரிய சேர்வஸ் தொலைக்காட்சியில் கூறியதை ராய்ட்டரும் குறிப்பிட்டுள்ளது. ஒருவர் சமய சுதந்திரத்தை பேணும் நேரம் அதன் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறும் ரஷீத் மக்களின் உரிமைகளை சமய நம்பிக்கைகளை காக்க பகிரங்கமாக போராட தயாராக இருப்பதாக கூறி னார். இதனை ஆஸ்திரிய ஏ பி ஏ நியூஸ் ஏஜன்சி ஒளிபரப்பியுள்ளது. அபராதம் செலுத்தி தன்மானம் காக்க பிரான்ஸ் பெல்ஜியம், நெதர்லாந்து , சுவிச்சர்லாந்து நாடுகளில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை, புர்கா அணிந்து தோன்றி யதற்காக விதிக்கப்பட்ட அபராத தொகையை ரஷீத் நெக்காஸ் கட்டினார்.


கடுப்பில் ஐரோப்பா: நான் சட்டத்தை மதிப்பவன். எமது அரசியல் சாசனத்தை தொட்டு பார்க்கக்கூடாது. எனவே எல்லா அபராத தொகையையும் முறைப்படி கட்டிவிட்டேன். இதுவரை 3 லட்சம் யூரோக்களை செலுத்தி இருக்கிறார். இவரது இந்த அதிரடி செயல்பாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக ஆஸ்திரியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழிலதிபர் தவறுகள் செய்ய தூண்டுகிறார் என ஆஸ்திரிய வெளி விவகார அமைச்சர் செபாஸ்டைன் கர்ஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரஷீத் நெக்காஸ் எதனையும். சட்டை செய்வதாகவே தெரியவில்லை. அவர் தம் முஸ்லிம் சகோதரிகளுக்காக அபராதம் செலுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.