சவுதி வாழ் இந்தியர்கள் பயன் பெற, வாட்ஸ்அப்; ஸ்கைப் மீதான தடை நீக்கம்

உலகம்

வாட்ஸ் அப்; ஸ்கைப் போன்ற செயலிகள் ஊடாக உரையாடிக் கொள்ளும் வாய்ப்புகளின் மீதான தடையை சவுதி அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம்,சவுதி தொலைத்தொடர்பு துறை; மிக அதிகமான வணிக வாய்ப்புகளை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இச்செயலிகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ள போதிலும், இவை உண்ணிப்பாக கண்காணிக்கப்படும் என்றும்; சவுதி அரசின் சட்ட திட்டங்களுக்கு முரணானவை தடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இச்செயலிகள் எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பது குறித்து விளக்கப்படவில்லை.


2011 இல் மேற்கு ஆசிய பகுதிகளில் உருவான அரபு வசந்தத்தைத் தொடர்ந்து 2013 இல் இவை தடை செய்யப்பட்டன.தற்போதய நிலவரப்படி சவுதியில் 4,100,000 க்கும் அதிகமான இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் அதிகமானோர் குடும்பங்களை விட்டு தனியாக இருந்து வருவதால், குடும்பத்தினருடன் உரையாட அதிக செலவு செய்யும் கட்டாயத்தில் உள்ளனர். அத்தைகையோருக்கு இத்தடை நீக்கம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.


இத்தடை நீக்கம், சவுதி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மின்னணு உலகில் புதிய முதலீடு களுக்கான வாய்ப்பு களை உருவாக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.தகவல் தொடர்பு அமைச்சு வெளியிட்டுள்ள குறிப்பில் "சவுதியின் பொருளாதாரத்தைப் பொறுத்த அளவில், மின்னணு தகவல் பரிமாற்றம் முதன்மையான தொடக்கமாகும்.இது இணைய வழி வர்த்தகமான ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக அளவில் ஸ்மார்ட் தொலைபேசிகள் உபயோகத்தில் சவுதி முதலிடம் வகிப்பதும்; அதே வேளையில்,சமூக ஊடகங்களின் கட்டண விகிதம் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.