துருக்கி: டார்வின் பரிணாமவியல் தத்துவம் நீக்கம்

உலகம்

துருக்கி நாட்டின் பள்ளிக்கூடங்களில் டார்வினுடைய பரிணாமவியல் பாடம் செப்டம்பர் 18 ஆம் நாள் நடக்கும் உயிரியல் வகுப்புகளில் இறுதிவகுப்பாக நடத்தப்படும் என்று துருக்கி நாடு தெரிவித்து இருக்கிறது.இதன் பின்னர் அந்நாட்டு பாடநூல்களில் இருந்து டார்வினும் அவரது பரிணாம கொள்கையும் விடைபெறுகிறது. சுமார் 70 ஆண்டுகளுக்குப்பின் பரிணாமவியல் பாடம் துருக்கியின் பாடநூல்களில் இருந்து நீக்கப்படுகிறது.உயர்நிலை பள்ளிகளின் பாடநூல்களில் இருந்து பரிணாமவியல் பற்றிப் பேசும் நேரடியான குறிப்புகள் உட்பட 170 தலைப்புகளில் உள்ள பாடங்கள் நீக்கப்படுவதாக துருக்கி அரசு அறிவித்து இருக்கிறது.


இதன் மூலம் துருக்கி தனது கல்வி கொள்கையை மறு சீரமைக்கிறது.அதற்குள்ளாகவே இந்த முயற்சிக்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.துருக்கி நாட்டின் பிரதமராக இருப்பவர் ரிசப் தையிப் எர்த்தோகன்.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கி இஸ்லாமிய நாடாக இருந்தது.முதல் உலகப்போரில் துருக்கி தோற்றுப்போக ஆட்சி மாற்றம் வந்தது.முஸ்தஃபா கமால் பாட்சா என்பவர் தலைமையில் மதச்சார்பற்ற ஆட்சி அமைந்தது.அதன் தொடர்ச்சியாக வந்த அரசுகள் தான் துருக்கி நாட்டின் பாட நூல்களில் டார்வினின் பரிணாமவியல் கொள்கை சேர்த்துக் கொண்டன.


மனிதனை இறைவன் தான் படைத்தான் என்று இறைமறை திரு குர்ஆன் கூறுகிறது.மற்ற மத நூல்களும் அவ்வாறே கூறுகிறது.அதற்கு மாறாக டார்வினின் பரிணாம கொள்கை குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கூறுகிறது.டார்வினின் கருத்து அறிவியல் அடிப்படையில் அமைந்தது என்று சொல்லித் தரப்படுகிறது.இதுதான் இப்போது இந்த பாடங்களை நீக்குவதற்கு காரணமாக இருந்துள்ளது.பிரதமர் எர்த்தோகன் பள்ளிப்பாடங்களை இஸ்லாமிய மயம் செய்கிறார் என்று துருக்கி நாட்டின் மதச்சார்பற்ற சக்திகள் கூச்சலிட தொடங்கிவிட்டன. ஆனால் பாடங் களை எளிமைப்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக துருக்கி நாட்டு கல்வித்துறை அமைச்சர் இஸ்மத் இல்மாஸ் கூறுகிறார். பரிணாமவியல் கொள்கை பள்ளி மாணவர்களுக்கு தேவை இல்லை. பல்கலைக்கழக மட்டத்தில் இன்னும் கற்றுக் கொடுக்கப்படுவதாக இஸ்மத் இல்மாஸ் கூறுகிறார்.


அதுபோல்,சமய பாடநூல்களில் இருந்து ஜிகாத்,மற்றும் தேசப்பற்று போன்ற பாடங்களும் நீக்கப்படுகின்றன.துருக்கி நாட்டின் அதிபராக இருந்தவரும் துருக்கியின் தந்தை என்று வரலாற்றில் கூறப்படுகிற முஸ்தஃபா கமால் பாட்சா பற்றிய பாடங்களும் வெளியேறப்போகிறது.துருக்கி நாட்டில் 2016,ஜூலை 15 அன்று ஆட்சி கவிழ்ப்புக்கான முயற்சி நடந்தது.ரிசப் தையிப் எர்த்தோகன் ஆதரவாளர்களால் அந்த கவிழ்ப்பு முறியடிக்கப்பட்டது.இந்த சம்பவத்துக்குப் பின்னர்,ஆட்சி கவிழ்ப்புக்கு சதி செய்தவர்களின் ஆதரவாளர்கள் என்று 33000 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மொத்த ஆசிரியர்களில் இது 4 விழுக்காடு.5,600 கல்வியாளர்களும் நீக்கப்பட்டனர்,880 பள்ளிகள் மூடப்பட்டன.


பிரதமர் எர்த்தோகன் சில மாதங்கள் முன்னர் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தி அதிக அதிகாரங்களை பெற்றார்.அந்த அதிகாரத்தின் மூலமாகத்தான் தான் இதனை செய்கிறார்.துருக்கிய மக்களை இஸ்லாமிய நெறிகளை பேணக்கூடிய பயபக்தி உடைய மக்களாக மாற்ற பல்வேறு முயற்சிகள் செய்துவருகிறார்.அதற்கு தடையாக இருக்கும் பரிணாமம் கொள்கையை நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.பாடநூல்களில் இருந்து டார்வினின் கொள்கையை எடுக்கும் முதல் நாடு துருக்கி.இதன் பின்னர் பிற நாடுகளும் தங்கள் பாடநூல்களில் இருந்து பரிணாம கொள்கையை நீக்க கூடும் என்று எதிர்பார்க்கலாம்.


பரிணாம கொள்கையை நீக்குவதால் அறிவியல் அறிவு மட்டுப் படாது. பரிணாம வளர்ச்சி வெறும் ஆய்வு நிலை கொள்கை தான். குரங்கில் இருந்து மனிதன் பரிணாம் அடைந்தான் என்று அறிவியல் கூறாக சொன்னாலும்,இன்றளவும் அது ஆய்வு நிலையில் தான் இருக்கிறது.இதுவரையில் ஒரு குரங்கு கூட மனிதனாக பரிணாமம் அடைந்து காணவில்லை. கடவுளை கண்ணால் கண்டதில்லை என்பதுபோல் குரங்கும் மனிதனாகி கண்டதில்லை.டார்வின் ஒரு ஊகமாகத்தான் இதனை சொன்னார்.பரிணாமவியல் கொள்கையில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பான கேள்விகளுக்கு எந்த ஒரு பரிணாமவியல் மாணவரும் பதில் அளிக்கவில்லை.யானைக்கு தும்பிக்கை எப்படி வந்தது,யானை மட்டும் இவ்வளவு பெரிய உருவமானது எப்படி என நிறைய கேள்விகளுக்கு பரிணாமவியல் கோட்பாட்டில் பதிலே இல்லை.ஆனால் டார்வினின் பரிணாமவியல் கொள்கையை ஐரோப்பிய சமய எதிர்ப்பு அரசுகள் தங்களது அரசியல் அதாயத்துக்கு பயன்படுத்தினர்கள்.மக்களிடம் உள்ள இறை நம்பிக்கையையும், சமய நெறிகள் படியான வாழ்க்கையையும் பறிக்கும் அவசியத்துக்குத் தான் பரிணாம கொள்கைக்கு அதிக விளம்பரம் கொடுத்தார்கள்.


இந்த பரிணாமவியல் கோட்பாட்டின் கூப்பாடு இறைமறுப்பு,சமய மறுப்பு ஆட்சியாளர்களின் கருவியாக பயன்பட்டது.அதற்கு அப்பால் மனித சமூகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.அது காலம் வரையில் பலநூறு ஆண்டுகளாக சமய நெறிகளால் செழுமையான பண்பாடுகளை வளர்த்துக் கொண்ட மக்கள் சமூகம் இந்த கொள்கையால் இறைமறுப்புக்கும் தொடர்ச்சி 15ம் பக்கம் நெறிமறுப்புக்கும் திரும்பினார் கள்.அதன் விளைவு இன்று இரக்கமற்ற உணர்ச்சியற்ற மக்கள் உலகம் முழுமைக்கும் பரவி இருக்கிறார்கள்.இறைமறுப்புக்கு மக்களை வழி நடத்தியவர்கள் தான் இன்று இரக்கமற்ற பொருளாதார சுரண்டல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.மக்களின் சொத்துகளை சூறையாடி, சூதாடுகிறார்கள். மனிதன் அதை எதிர்க்கும் தார்மீக நெறியோ, உணர்ச்சியோ இல்லாமல் ஆகிவிட்டான். மொத்தத்தில் நேர்மையற்ற மனித சமூகத்தை உருவாக்கியதில் இந்த பரிணாமவியல் கொள்கைக்கு முக்கியப் பங்குண்டு. மனித சமூகத்தை இந்த வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க அறிவியல் நிருபணம் இல்லாத இந்த பரிணாமவியல் கொள்கையை முதலில் விரட்ட வேண்டும்.ஒரு அரசு பரிணாமவியலை ஒரு அரசியல் காரணத்துக்காக கொண்டுவர முடியும் என்றால்,வேறு ஒரு அரசு ஒரு நல்ல நோக்கத்துக்காக அதை நீக்கிவிடவும் முடியும்.அதைத்தான் எர்த்தோகன் செய்து இருக்கிறார். மனிதன் எப்போது விலங்கானான்? விலங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்று கற்றுக்கொடுத்த போது! இப்போது குரங்கு புத்திக்கு திரும்பிவிட்ட மனிதனை மீண்டும் மனித புத்திக்கு திருப்பும் அவசியம் இருக்கிறது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.