சிங்கப்பூர் புதிய அதிபர் ஹலீமாயாகூப்

உலகம்

ஹலீமா யாகூப் முறைப்படி சிங்கப் பூரில் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற சபாநாயகராக பணியாற்றிய ஹலீமா பின்த் யாகூப் போட்டியிட்ட வேட்பாளர்களில் தகுதி படைத்த வேட்பாளர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

பன்முக கலாச்சாரத்தை கொண்ட இந்நகர அரசை அனைவரையும் உள்ளடக்கி வலுப்பெற செய்வதே எமது குறிக்கோள் என கூறினார் ஹலீமா இந்த முறை அதிபர் பொறுப்பு சிறுபான்மை சமூகமான மலாய் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகார வட்டம் முடிவெடுத்துள்ளது. அதன்படி மலாய் சமூகத்தை சேர்ந்த ஹலீமா அதிபராகியுள்ளார். இது முன்பதிவு தேர்தல் அல்லது ஒதுக்கீடு தேர்தல் என கொள்ளலாம். இது முன்பதிவு தேர்தலாக இருக்கலாம். ஆனால் நான் எல்லோருக்குமான அதிபர் என தேர்தல் அலுவலகத்தில் பேசும்போது ஹலீமா தெரிவித்தார். 63 வயதான ஹலிமாவின் நீண்ட நாடாளுமன்ற அனுபவம் அவரை தேர்வுக்குழுவின் விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவராக அறிவித்தது. நான்கு விண்ணப்பதாரர்களில் இருவர் இவர்கள் மலாய்க்காரர்கள் அல்ல. என்றும் மற்றும் ஒருவர் போதுமான தகுதி சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்து ஹலீமா யாக்கூப் போட்டியின்றி அறிவிக்கப்பட்டார். முன்னதாக மலாய் சமூகத்தில் யூசுப் இஸ்ஹாக் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார் .

அவரது புகைப்படம் சிங்கப்பூர் ரூபாய் நோட்டுகளை அலங்கரித்து வருகிறது. யூசுப் 1965 முதல் 1970 வரை சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய அரசு நியமனங்கள் மற்றும் நாட்டின் நிதி கையிருப்பு தொடர்பான வரம்பற்ற அதிகாரங்கள் வீட்டோ அதிகாரம் அதிபருக்கு உண்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். 55லட்சம் மலாய் சிறுபான்மை சமூகத்தில் இருந்து அதிபரை தேர்ந்தெடுத்து சக்திவாய்ந்தவராக ஒரு மலாய் முஸ்லிம் ஐ தென்கிழக்காசிய அரசியல் அரங்கில் முன் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தகுந்த நிகழ்வாக கருதப்படுகிறது. . இதில் வாய்பேச்சில் மட்டும் ஜனநாயகம் என முழங்கும் சில நாடுகளின் கபட வேடதாரிகள் கற்க பல பாடங்கள் உண்டு .

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.