15வது ஆண்டில் குவாண்டனாமோ பே சித்ரவதை சிறை

உலகம்

2001ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ், ஆப்கானிஸ்தான் மீது போர்த் தொடுத்தார். ஆப்கானில் தலிபான் ஆட்சியின் கீழ் தங்கியிருந்த வெளிநாடுகள் சார்ந்த போராளிகள் அல்காயிதாவினர் மற்றும் தலிபான்களையும் மிருகங்களைப் போன்று வேட்டையாடி பிடித்துக்கொண்டு போய் அடைத்து வைத்தார் புஷ்.

இந்த குவாண்டனாமோ பே தீவானது கியூபாவின் பக்கத்தில் இருக்கிறது. வெயிலிலும், மழையிலும், குளிரிலும் பாதுகாப்பின்றி வதைபடும் திறந்த வெளி சிறை. அமெரிக்கா உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் கட்டுப்பாட்டில் இந்த சிறை இருந்து வருகிறது. பல்வேறு மர்ம மரணங்களின் கதைகளைக் கொண்ட இந்த சிறையில் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட விசாரணை முறைகளை சி.ஐ.ஏ. செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

 

குறிப்பாக, ‘வாட்டர் வெட்’ என்ற விசாரணை முறை. அதாவது விசாரணைக் கைதியை இரும்பு சங்கிலியால் பிணைத்து தரையில் படுக்கவைத்து மேலிருந்து மூக்கின் மீது தண்ணீரை சொட்டு சொட்டாக பாய்ச்சி கைதிக்கு மூச்சுத் திணறல் உண்டாக்குவது. இரண்டாம் உலகப் போரில் ராணுவக் கைதிகளிடம் இந்த விசாரணை முறை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இம்முறை தடை செய்யப்பட்டது.

 

இச்சிறையில் மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்ட போதும், உலக நாடுகள் அமெரிக்காவைக் கண்டிக்கவில்லை. மனித உரிமைகள் சட்டங்கள் குவாண்டனாமோ கைதிகளுக்குப் பொருந்தாது என்று டபிள்யு புஷ் கூறினார். புஷ் ஆட்சியின் இறுதிக் காலத்தில், குவாண்டனாமோ பே&யை மூடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. பின்னர் 2008ல் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அதிபராக பாரக் ஒபாமா வந்தார். 2009, ஜனவரி 22ஆம் நாள் ஒபாமா விடுத்த ஒரு ஆணையில், "இந்த உத்தரவு இடப்பட்ட ஓராண்டுக்குள் குவாண்டனாமோ சிறை இழுத்து மூடப்படும்" என்று கூறியிருந்தார். இவ்வாண்டு (2017) ஜனவரி 22ஆம் நாளுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. 8 ஆண்டுகள் 2 முறை அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவும் பதவிக் காலத்தை முடித்துக் கொண்டார். 

 

ஆனால் குவாண்டனாமோ சிறை மூடப்படவில்லை. குவாண்டனாமோ கைதிகளை அவரவர் நாட்டு சிறைகளுக்கு அனுப்பிவிடலாம் என்றொரு முடிவும் பேசப்பட்டது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டு விட்டது. அமெரிக்காவின் புதிய அதிபராக வந்திருக்கும் டொனால்ட் டிரம்ப் 2017, ஜனவரி 3ஆம் நாள் விடுத்த அறிக்கையில், குவாண்டனாமோ சிறையில் இருந்து ஒருவரையும் விடுதலை செய்ய முடியாது. அவர்கள் அனைவரும் மிகவும் பயங்கரமானவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

 

குவாண்டனாமோ கைதிகளில் முக்கால்வாசி பேர் வழக்கு முடிந்து விடுதலை ஆகியிருக்கிறார்கள். கைதிகளுக்கு எதிரான குற்ற ஆவணங்கள வகைப்படுத்த முடியாமல் அமெரிக்க நீதிமன்றங்களில் சி.ஐ.ஏ. திணறியது. அமெரிக்க நிர்வாகம், நீதிபதிகளின் கண்டனங்களை சந்தித்தது. இதுவரையில் மொத்தம் 780 பேர் குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 500 பேர் டபிள்யு புஷ் ஆட்சிக் காலத்தில் அடைக்கப்பட்டார்கள். 2009, ஜனவரி 22ல் குவாண்டனாமோ சிறையை மூடப்போகிறேன் என்று சொன்ன ஒபாமா, தனது ஆட்சிக் காலத்தில் 242 பேரை புதிதாகப் பிடித்து அடைத்து வைத்தார். 

 

தற்போது 55 கைதிகள் தான் அங்கு இருக்கிறார்கள். குவாண்டனாமோ சிறையில் ஒவ்வொரு கைதிக்கும் ஆண்டுக்கு 8 மில்லியன் டாலர்கள் செலவானதாம். ஆண்டுக்கு சிறை பராமரிப்பின் மொத்த செலவு 445 மில்லியன் டாலர்கள் என்று அமெரிக்க கணக்கு சொல்கிறது.

 

குவாண்டனாமோ பே, கியூபாவுக்குச் சொந்தமான தீவு. ஆனால் அமெரிக்காவின் பிடிக்குள் இருந்து வருகிறது. 1903ஆம் ஆண்டில் லிமீரீணீறீ ஙிறீணீநீளீ பிஷீறீமீ’ என்ற பெயரில் அமெரிக்க கப்பல் படைத் தளமாக இருந்தது. அமெரிக்கா மற்றும் கியூபா என இரண்டு நாட்டுச் சட்டங்களும் அங்கு பொருந்துவதில்லை.

 

நவம்பர் 13, 2001

 

வெளிநாட்டவர்களை எந்தக் குற்றச்சாட்டு இல்லாமலும் சிறைப்பிடித்து வைக்க குவாண்டனாமோ நிர்வாகத்துக்கு டபிள்யு புஷ் அரசு அதிகாரம் வழங்கியது.

 

மார்ச் 11, 2003

 

குவாண்டனாமோ கைதிகளுக்கு அமெரிக்க நாட்டின் சட்ட உரிமைகளைக் கொடுக்க முடியாது என்று டபிள்யு புஷ் நிர்வாகம் 

 

அமெரிக்க நீதிமன்றத்திடம் தெரிவித்தது.

 

நவம்பர் 16, 2008

 

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா, குவாண்டனாமோ சிறையை மூடப்போகும்...

 

ஜனவரி 22, 2009

 

அதிபர் ஒபாமா மூன்று அரசாணைகளை இட்டார்.

 

1) ஓராண்டில் சிறை மூடப்படும்

 

2) சி.ஐ.ஏ. பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட விசாரணை முறைகள் தடை செய்யப்படும்

 

3) சிறை வைப்பு கொள்கை மீளாய்வு செய்யப்படும்

 

ஜனவரி 7, 2011

 

2011ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பாதுகாப்புக்காக சட்டத்தோடு அதிகாரம் வழங்கும் மசோதாவில் (ஞிமீயீமீஸீநீமீ கிutலீஷீக்ஷீவீsணீtவீஷீஸீ ஙிவீறீறீ) ஒபாமா கையெழுத்திட்டார். அந்த சட்டத்தில், குவாண்டனாமோ கைதிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்பட்டிருந்தது.

 

ஆகஸ்ட் 15, 2016

 

இந்த நாளில் 15 சிறைக் கைதிகளை குவாண்டனாமோவில் இருந்து இடம் மாற்றினார். ஒபாமா அதிபரான நாள் முதல் ஒரே நாளில் அதிகபட்சமானோர் வெளியேற்றப்ப்டடது இம்முறை தான்.

 

ஜனவரி 3, 2017

 

குவாண்டனாமோ கைதிகளில் ஒருவரையும் இனிமேல் விடுவிக்கப் போவதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.தாங்களே சட்டம் போட்டுக் கொண்டு தாங்களே மீறும் புத்தி கொண்டவர்கள் தான் அமெரிக்க அதிபர்கள்.

 

-ஜி.அத்தேஷ்