அகதிகள் நிலமை எப்படி இருக்கிறது?

உலகம்

டிசம்பர் 18ஆம் நாள், சர்வதேச அகதிகள் தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் ஒன்றும் (45/158) ஐக்கிய நாடுகள் சபையில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

அகதிகள் புலம் பெயர்ந்தவர்கள் என்ற சொல்லால் மதிக்கப்படுவதால் அச்சொல்லை நாம் பயன்படுத்துவது தகுந்ததாகும். இந்த புலம் பெயர்ந்தவர்களுக்காக சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு ஒன்று  (மி.ளி.வி) 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது 2ஆம் உலகப் போர் உருவாக்கிய விளைவுகளில் இருந்து தான் உருவானது. போரினால் புலம்  பெயர்ந்து சென்றவர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்தும் பணியை இந்த அமைப்பு செய்கிறது. இயற்கை பேரிடர்கள் காரணமாக புலம் பெயர்ந்த மக்களையும் இந்த அமைப்பு மீள் குடியமர்வு செய்து வருகிறது. அவர்களுக்காக இடவசதி, அடிப்படை தேவைகள், பாதுகாப்பு அம்சங்களிலும் இவ்வமைப்பு கவனம் செலுத்துகிறது.  உலகில் 7மனிதர்களில் ஒருவர் புலம் பெயர்ந்தவர்களாக இருப்பதாக சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு கூறுகிறது. இவ்வமைப்பில் 165 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

 

ஐக்கிய நாடுகள் சபை,1990ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான முதல் சர்வதேச மாநாட்டை நடத்தியது. பிலிம்பைன்ஸ் மற்றும் ஆசியாவின் நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களுக்காக செயல்படும் அமைப்புகள் பலவும் ஒன்றாக இணைந்து 1997ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் புலம் பெயர்ந்தவர்களுக்கான ஒற்றுமைதினத்தை முதன் முதலாக கொண்டாடியது.

 

புலம் பெயர்ந்த இந்தியர்கள்:

 

1970களின் ஆரம்ப நாட்களில் இருந்து தான் இந்தியர்கள் மிக அதிகமாக புலம் பெயரத் தொடங்கினார்கள் எனலாம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், மலேயா,அந்தமான், ஃபிஜி போன்ற காலனி நாடுகளில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்கும், காடுகளை அழித்து ஊர்கட்டுவதற்கும் ஆங்கிலேய அரசால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதனை திட்டமிட்ட புலம் பெயர்வாக கருதலாம். 1947ஆம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, தேசப்பிரிவினை காரணமாக ஒரு புலம் பெயர்தல் நடந்தது. அதன் பின்னர் 1970களில் இந்தியர்கள் கீழ்மட்ட ஊழியர்களாக வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றார்கள். குறிப்பாக, அமெரிக்கா,கனடா,பிரிட்டன்,ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் வாரிசுகள் இன்று அந்நாடுகளின் பல்வேறு துறைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளார்கள்.

 

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக, மாகாணங்களில் கவர்னர்களாக, மாவட்ட நீதிபதிகளாக, அதிபர் மாளிகை பணியாளர்களாக, வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளாக அதிபர்களின் பல்வேறு துறைகளில் ஆலோசகர்களாக செயலாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவ்வாறான உயரத்தை அடைந்திருப்பவர்கள் புலம் பெயர்ந்தவர்களில் உயர்ந்த சாதியினராக இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலோம் மதம் மாறியிருக்கின்றனர். அதிகார துறைகளில் உயர் பதவிக்கு வருவதற்கு இந்த மதமாற்றமும் ஒரு காரணம். தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருக்கும் ரிச்சர்ட்வெர்ரே அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து சென்ற குடும்பத்தின் வாரிசு ஆவார். அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில் இந்தியாவுக்கான பரிந்துரையாளர்களாக இவர்கள் இருப்பது கூடுதல் மதிப்பு, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் இரும்பு தொழிலில் சிறந்து விளங்கும் லட்சுமி மிட்டல், ஒரு இந்தியர்தான் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், அறிவியல் சாதனைக்காக நோபல் பரிசு பெற்ற வெங்கட் ராமன், சந்திர சேகர், கோவிந்த் குரானா வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான்.

 

2016ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம் வெளியான ஒரு கணக்கெடுப்பு உலகின் 146 நாடுகளில் 2கோடி 68லட்சத்து  67ஆயிரத்து 136 இந்தியர்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறது. அவர்களில் 1 கோடியே 14லட்சத்து 22ஆயிரத்து 45பேர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருக்கிறார்கள். 1கோடியே 54லட்சத்து 54ஆயிரத்து 11பேர் இந்திய வம்சா வழியினர். இதில் அதிகபட்சமாக 50லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் தான் வசிக்கிறார்கள். அடுத்ததாக இந்தியர்கள் அதிகம் பேர் அரபு நாடுகளில் வசிக்கிறார்கள். 

 

அரபு நாடுகளில் புலம் பெயர்ந்தோருக்கான குடியுரிமைகள் கிடையாது. அந்நாடுகளின் அரசு துறைகளில் பொறுப்புக்கு போக முடியாது. அரசியல் நிர்வாகத்திலும், இடம் பெற முடியாது. இவர்கள் வேலை நிமித்தமாக சென்றிருப்பவர்கள். திரும்பி வந்து விடுவார்கள். ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத மக்களாக இந்தியாவில் 37லட்சம் பேரும், சீனாவில் 36லட்சம் பேரும் நேபாளத்தில் 26 லட்சம் பேரும் அகதிகளாக உள்ளனர் என்று புலம் பெயர்ந்தவர்களுக்கான கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது.

 

இந்த புலம் பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் ஜெனிவாவில் இயங்குகிறது. இந்த மையம் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக இவ்வாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 4கோடியே 8லட்சமாக அதிகாரித்திருக்கிறது. ஈராக்,சிரியா, ஏமன் நாடுகளில் உள்நாட்டு போர்கள் காரணமாக 2015ஆம் ஆண்டில் மட்டும் 86லட்சம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள் என்கிறது அந்த அறிக்கை.

 

மத்திய கிழக்கு அரபு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்காவில் இருந்து 48 லட்சம் பேரும்,ஏமன் நாட்டில் இருந்து 22லட்சம் பேரும்,ஈராக்கில் இருந்து 11லட்சம் பேருமாக மொத்தம் 86லட்சம் பேர் 2015&ல் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். சிரியாவில் 2011 முதல் 5ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் காரணங்களால் மட்டும் 2லட்சத்து 70ஆயிரம் மக்கள் (2,70,000) கொலை செய்யப்பட்டுள்ளார்கள். போர் மற்றும் இயற்கை பேரழிவு காரணமாக 2015ஆம் ஆண்டில் 2கோடியே 78லட்சம் பேர் புலம் பெயர்ந்தவர்களாக உள்ளார்கள்.

 

மத்திய பாஜக அரசு, பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம், ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தவர்களாக வந்திருக்கும் இந்து மக்களுக்கு மட்டும் குடியுரிமை வாங்ப்போவதாக அறிவிப்புச் செய்திருந்தது. டிசம்பர் 24ஆம் நாள், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பால், புலம் பெயர்ந்தவர்களை நடத்தும் விதத்தில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது. திபெத், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து  2லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் இந்தியாவில் வந்துள்ளனர். திபெத்தியர்கள் 1955க்கும் 1962க்கும் இடைப்பட்ட காலத்தில் புலம் பெயர்ந்து இந்தியாவுக்குள் வந்தனர். அவர்கள் 38 இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். வாக்குரிமை தவிர இந்தியர்களுக்கு அளிக்கபபடும் அனைத்து உரிமைகளும் அளிக்கப்பட்டது. 

 

ஆப்கானிஸ்தானில் 1980களில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, புலம் பெயர்ந்த மக்கள் இந்தியாவின் தலைநகர் தில்லிக்கு வந்தனர். தில்லையை சுற்றியுள்ள சேரிகளில் குடியமர்ந்தனர். அவர்களின் வாழ்க்கை சூழல் மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு சட்டப்படியான குடியுரிமை தகுதி கிடையாது. அவர்கள் வேலை செய்யவோ,தொழில் தொடங்கவோ முறையான ஆவணங்கள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை.

 

அகதி என்பதற்கான சான்றிதழ் கொடுத்த பின்னர் இந்திய அரசு வேறு விசயங்களை கவனிக்கப் போய்விடுகிறது. 1947ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் ஒடிசா, தண்டகாரன்யாவில் தங்கினர். இவர்கள் சமதளத்தில் வேளாண்மை செய்து பழகிவந்தவர்கள். தண்ட காரண்யாவில் மேடுபள்ளமான நிலம். அங்கு அவர்கள் வேளாண்மை செய்வதில்  சிரமம் கண்டனர். அகதிகளுக்கு நிலப்பரப்பை பங்கிட்டு கொடுத்த போதும், உதவிகள் கொடுக்கப்பட்ட போதும் மோதல்கள் நடந்ததுண்டு. பல்வேறு துன்பங்களை அனுபவித்த பிறகு அவர்கள் சுந்தர்பன்சில் உள்ள மரிச்சாபி தீவில் குடியேறினார். அரசே வலுக்கட்டாயமாக அவர்களை அப்புறப்படுத்தியது.

 

பொருளாதார ரீதியிலும் அவர்களை வளரவிடாமல் தடுத்தனர். அவ்வப்போது காவல்துறையை கொண்டு துப்பாக்கி சூடும் நடத்தி அச்சுறுத்தப்பட்டனர். அகதிகளின் மக்கள் பெருக்கம் பற்றி அச்சம் கொண்ட பூட்டான் அரசு நேபாளி மொழி பேசும் மக்களை 1990ஆம் ஆண்டில் வெளியேற்றியது. இதன் காரணமாக 1லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவை கடந்து நேபாளத்துக்குப் போனார்கள். அங்கும் அவர்களுக்கு சட்டப்படியான தகுதியோ குடியுரிமையோ கிடைக்கவில்லை. இன்றளவும் நாடற்ற மக்களாக இருக்கிறார்கள்.

 

1951ஆம் ஆண்டு,ஐக்கிய நாடுகள் சபை புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக சட்டம் கொண்டு வந்தது. இதுவரையிலும் இந்தியா இந்த சட்டத்தில் கையெழுத்திடவில்லை. புலம் பெயர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை அரசுகளுக்கு சட்டப்படியான கடமையாக்கும் ஒரு சட்டத்தை வரையறை செய்வதற்கு உதவி செய்யும் ஒரு உடன்படிக்கை கொண்டு வரப்பட்டது. 

 

அதிலும் இந்தியா கையெழுத்து இடவில்லை. புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்களில் தெளிவில்லை. இதில் சர்வதேச விதிமுறைகளை பேணுவதிலும் ஒரு ஒழுங்கில்லை. சுருக்கமாக சொன்னால் புலம் பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் நம்மிடம் தேசிய அளவில் ஒரு கொள்கையே இல்லை. ஆதரவற்றவர்களாக திரியும் மக்களை இரு கரம் நீட்டி வரவேற்பது ஒரு நாட்டின் கடமையாகும் அதுவும் இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டிற்கு கூடுதல் பொறுப்பாகும். புலம் பெயர்ந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பட்டால் அது முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆணோ, பெண்ணோ,அவர்களுக்கு அடையாள ஆவணமும் பயணம் செய்வதற்கான ஆணமும் வழங்ப்பட்டு அது சட்டப்படி ஏற்கப்பட வேண்டும். குடியிருப்பு கேட்டு விண்ணப்பம் செய்யும் உரிமை இருக்க வேண்டும்.

 

இந்தியாவில் குடியிருக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்யும் உரிமை வேண்டும். தனியார் துறைகளிலும் வேலைவாய்புப் பெற அவர்களது ஆவணம் அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு தொடக்க கல்வி கட்டணமில்லாமல் அரசுப் பள்ளிகளில் வழங்க வேண்டும். அதேபோல் இந்திய குடிமக்களுக்கு கிடைப்பது போக்று ஆரம்மப சுகாதார சேவை அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

 

இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவில் புலம்பெயர்ந்தவாக்ளுக்கு அரசியல் சட்ட பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. 1996ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் தான் புலம் பெயர்ந்தவர்க்கு இந்தியாவில் சட்ட பாதுகாப்பு கிடைத்து. இந்திய குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகளை இணையாக பெறவும் (சட்ட பிரிவு 14) வாழ்வு மற்றும் தனிநபர் சுதந்திரம் (பிரிவு21) பெறவும் வழி எற்பட்டது.

 

இந்தியாவில் 1939ஆம் ஆண்டு வெளிநாட்டினர் பதிவு சட்டமும், 1946ஆம் ஆண்டு வெளிநாட்டின் சட்டம் உன்றும் இயற்றப்பட்டது. இன்றும் புலம் பெயாந்தவர்கள் இந்தியாவின் உள்ளே நுழைவதும் வெளியேறுவதும் இந்த இரண்டு சட்டங்களின்படிதான் அனுகப்படுகிறது. அவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவர்களை வெளிநாட்டவர்களாக  நடத்துகிறது. குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுக்கென்று சட்டம் ஏதும் உருவாக்கப்படாத ஜனநாயக நாடாக இந்தியா இருந்து வருகிறது. புலம் பெயர்ந்தவர்களுக்கு நன்கு வரையறை செய்து ஒரு சட்டம் உருவாக்கப் பட்டால், புலம் பெயர்ந்து வந்தவர்களில் போர் குற்றவாளிகள், கடும் குற்றம் புரிந்து தப்பித்து வந்தவர்களை நீக்கி விட்டு மற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் முறையை ஒழுங்கு படுத்தலாம்.

 

கொள்கைகளை தட்டையாள் அறிவிப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அரசு உருவாக்கும் கொள்கைகளில் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் அம்சங்கள் நிச்சயமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.புலம் பெயர்ந்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை (ஹிழிபிசிஸி) வழங்கும் ஆவணத்தை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஏற்க வேண்டும். வெளி நாடுகளில் பட்டங்கள், பட்டயங்கள் பெறவும் வகை செய்யும் சட்டம் வேண்டும். புலம்  பெயர்ந்தவர்கள் குடியிருப்புக்கு அருகில் குடியிருப்பவர்கள் அமைந்திருக்கும் கட்டிடங்களில் கட்டணம் செலுத்த தகுதியுடைய புலம் பெயர்ந்தவர்களை சேர்த்துக் கொள்ளும் படி,உள்ளூர் ஆட்சி நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

 

 அரசு இதற்கான உத்தரவை உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களில் ஆண்களும்,பெண்களும் ஆளுமை பெறுவதற்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்க வேண்டும்.

 

புலம் பெயர்ந்து இந்தியா வந்துள்ளவர்கள் குறித்த போதுமான தகவல்கள் நம்மிடம் இல்லை. இதனால் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பிரச்சனைகள், துயரங்கள் சம்பந்தமான எந்த ஆய்வும் செய்யப்படவில்லை. 

 

புலம் பெயர்ந்து வந்தவர்கள் பலரும் பதிவு செய்யப்படாமல் இருப்பதால் இவர்களுக்கான மறுவாழ்வு, மீள் குடியேற்றம் போன்ற பல்வேறு அம்சங்களில் இந்திய அரசு தோல்வி அடைந்திருக்கிறது. இவ்வாறான தகவல் பற்றாக்குறை காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு ஊடகங்கள் அவர்களின் எண்ணிக்கை பற்றி கூடுதலாகவோ,குறைவாகவோ கூற காரணமாகிறது. ஆதார் போன்ற ஆவணம் ஒன்றை அவர்களுக்கும் கொடுப்பதால மூலம் அவர்களின் எண்ணிக்கையை எளிதில் கணக்கிட்டு விடலாம். அதன் வழியாகவே நலத்திட்டங்களையும் சேர்பிக்கலாம்.

 

புலம் பெயர்ந்து வந்தவர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பு புலம் பெயர்ந்து வந்துள்ளவர்கள் மீது தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கும் அமைப்பை கலைத்து விட்டு விரட்டப்பட்டு, துயருற்று, உரிமை கள் இழந்து ஏதமற்றவர்களாக வரும் இவர்களுக்கு அதிக பொறுப்புடனும், மிகுதியான வெளிப்படையாகவும் செயல்படும் நிர்வாகம் ஒன்று புதிதாக உருவாக்க வேண்டும்.

 

இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சமாக இருக்கும் போது புலம் பெயர்ந்து வருபவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுவது நேர்மையான கடமையாகும். புலம் பெயர்ந்து வந்துள்ளோர் விசயத்தில் தற்போதுள்ள பாஜக அரசு எடுக்கும் முடிவுகள் கவலையளிப்பதாகும். 

 

புலம் பெயர்ந்து வந்துள்ளோர் குடியுரிமை பெறும் விண்ணப்பக் கட்டணத்தை 1500&ல் இருந்து 100ரூபாயாக குறைத்திருப்பது மகிழ்ச்சியே என்றாலும், வங்கதேசம், நேபானம்,மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வந்துள்ள இந்துகளுக்கு மட்டுதான் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது. மேலும் அடைக்கலம் தேடி வந்துள்ள வங்கதேச முஸ்லிம்களை திருப்பு அனுப்புவோம் என்று அவ்வப்போது கூறவருகிறது.

 

இது, அடைக்கலம் தேடுவோம் தொடர்பாக, சர்வதேச உடன்படிக்கைகள், தீர்மானங்களுக்கு எதிரான செயல் மத்திய அரசு இந்த முடிவினை மாற்றிக் கொண்டு இன,மத, அடிப்படையில் பாழுபாடு காட்டாமல் அடைக்கலம் கேட்போர் அனைவரையும் ஒரே விதமாக நடத்த வேண்டும். அதுதான் ஜனநாயகம் வளர்ச்சி அடைந்திருப்பதை உலகிற்கு உணர்த்தும் செயலாகும்.