இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 08

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

இரக்கத்தைத் தூண்டி திரட்டிய பணம் இந்துத்துவ அமைப்புகளுக்கு வினியோகம்

இந்துத்துவ அமைப்புகள் அவை தோன்றிய காலத்திலிருந்தே ஒருவகையான “உலகளாவிய” தன்மையுடன் செயல்படுகின்றன என்றேன். உலக அளவில் மக்களைப் பிளவுறுத்தி வன்முறையை விதைக்கும் பாசிச / இனவாத / சியோனிச அமைப்புகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்படுவது என்பது இதன் ஒரு அம்சம் எனில் இதன் இன்னொரு அம்சம் தங்களை ஏழை எளிய இந்தியர்கள் மத்தியில் அறப்பணி செய்யும் இயக்கங்களாக வெளிநாட்டு மக்கள் முன் காட்டிக் கொண்டு, இரக்க குணமும் அற உணர்வும் கொண்ட மேலை நாட்டு மக்களிடமிருந்து பெரிய அளவில் நிதி வசூலிப்பது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க எனச் சொல்லி வசூலித்த பணத்தை அவர்கள் அதற்குப் பயன்படுத்துவதில்லை. மாறாக. இந்தியாவிலிருந்து செயல்படும் இந்துத்துவ அமைப்புகளுக்கு அதைப் பிரித்து அளிக்கின்றனர்.


இவ்வாறு நிதி பகிர்ந்தளிக்கப்படும் அமைப்புகளில் சில இந்திய மண்ணுக்குள் நேரடியான வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுவன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அமைப்புகளின் ஊடாக ஏதேனும் சிற்சில நிவாரணப் பணிகளை அவர்கள் செய்தாலும் அதை இந்த வன்முறை அமைப்புகள் தாங்களே செய்வது போலக் காட்டித் தம் வன்முறைச் செயல்பாடுகளுக்கு ஒரு முகமூடியாய் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
நிவாரண நிதி முறைகேடு


இந்திய மண்ணில் ஏதாவது பூகம்பம், பெரு வெள்ளம், புயல்.. எனப் பிரளயங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டால் இவர்கள் உடனே நிதி சேகரிக்கக் களத்தில் இறங்கிவிடுவார்கள். இந்த நிதி எப்படிப் பிரித்தளிக்கப்படுகிறது, இவை யாருக்குப் போய்ச் சேருகின்றன என்பதெல்லாம் கொடை அளித்த நல் மனங்களுக்குத் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேரும் என அவர்கள் நம்பிக் கொண்டிருப்பர்.அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் “லாப நோக்கில்லாத குழுக்களின்” செயல்பாடுகள் குறித்துச் சென்ற இதழில் பார்த்தோம். இப்போது பிரிட்டனில் இருந்து சில தகவல்கள்.


1998 -2004 கால கட்டத்தில் இங்கு வாஜ்பேயி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (ழிஞிகி 1) செயல்பட்டதை அறிவோம். இக் காலகட்டத்தில்தான் (2002) குஜராத்தில் மிகப் பெரிய வன்முறைகள் அரங்கேறின என்பதையும் அறிவோம். இது நடந்த இரண்டாம் ஆண்டு நிறைவிற்குச் சற்று முன்பாக, பிப்ரவரி 26, 2004 அன்று “ஆவாஸ்” எனச் சுருக்கமாக அழைக்கப்படும் “தென் ஆசியக் கண்காணிப்பு நிறுவனம்” (கிஷ்ணீணீக்ஷ் - ஷிஷீutலீ கிsவீணீ கீணீtநீலீ லிtபீ) எனும் மதச் சார்பற்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் (House of Lords) தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு,: “பிரிட்டிஷ் பொதுமக்கள் மனிதநேய நோக்கில் தந்த ஏராளமான நிதி சங்கப்பரிவாரங்களுக்கு அளிக்கப்பட்டது” என்பதுதான்.


“பிரிட்டிஷ் மக்களின் இரக்கமும் இந்துத் தீவிரவாதமும்” (In Bad Faith? British Charity and Hindu Extremism) என்கிற தலைப்பில் அமைந்த அந்த அறிக்கை, “பிரிட்டனில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை ஒடிஷா பெரும்புயல் (1999) மற்றும் குஜராத் பூகம்பம் (2001) ஆகிய இயற்கைப் பேரழிவுகளின் பெயரால் பிரிட்டிஷ் மக்களின் இரக்கத்தைத் தூண்டித் திரட்டிய நிதி அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போகாமல் சங்கப் பரிவார அமைப்புகளுக்கே போய்ச் சேர்ந்தன” என்பதை வெளிப்படுத்தியது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட அமைப்புகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை மேற்கொள்ளும் அமைப்புகளும் அடக்கம் என்பதையும் சுட்டிக்காட்டியது.


“மனித நேய உதவி என்கிற பெயரால் கடல் கடந்த நாடுகளில் திரட்டப்பட்ட நிதி இவ்வாறு இந்துத்துவ வலைப்பின்னலுக்குப் பிரித்தளிக்கப்பட்டதற்கும், இந்த மாநிலங்களில் வெறுப்பும் வன்முறைகளும் சமீப காலங்களில் அதிகரித்து உள்ளதற்குமான தொடர்பு எதேச்சையானது என நாங்கள் நினைக்கவில்லை” என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.


வெறுப்பு அரசியலுக்கு நிவாரண நிதி


பூகம்ப நிவாரணத்திற்கெனத் திரட்டப்பட்ட நிதி குஜராத் சங்கப் பரிவாரங்களுக்கு 2001 ல் பிரித்தளிக்கப்பட்டது. அடுத்த ஓராண்டில், 2002 ல், அங்கு 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; 2,00,000 பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர். 1999 ல் குஜராத் பெரும்புயல் அழிவுக்கெனத் திரட்டப்பட்ட நிதி அங்குள்ள இந்துத்துவ அமைப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டன என்றால் அதே ஆண்டில்தான் அங்கு எளிய மக்கள் மத்தியில் தொழுநோய் சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் ஸ்டெய்ன்சும் அவரது இரு பிள்ளைகளும் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த தாராசிங் கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு ஊதி ஊதி வளர்க்கப்பட்ட வெறுப்பு 2007ல் கந்தமால் மலைப் பகுதியில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களின் மீது பெருந்தாக்குதலாய் விடிந்தது.


உண்மைகளை அம்பலப்படுத்தும் ஆவாஸ்


‘ஆவாஸ்’ அறிக்கை மேலும் சொல்வது: பிரிட்டனிலிருந்து செயல்படும் ‘சேவா இன்டெர்னேஷனல்’ அமைப்பு குஜராத் பூகம்பத்திற்கெனத் திரட்டப்பட்ட 2 மில்லியன் பவுண்ட் நிதியை இந்தியாவில் இருக்கும் அதன் தாய் அமைப்பான ‘சேவா பாரதி’ க்கு அனுப்பியது. சங்கப் பரிவாரங்களில் தானும் ஒன்று எனச் சொல்லிக் கொள்வதற்கும், ஆர்.எஸ்.எஸ் சைத் தன் ‘குரு’ வாக முன்வைப்பதற்கும் தயங்காத ஒரு அமைப்பு. இவ்வாறு அதற்கு வந்து சேர்ந்த பூகம்ப நிதியை சேவா பாரதி நடத்தும் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கெனத் திரட்டப்பட்ட அந்த நிதி அவர்களுக்குப் போய்ச்சேரவில்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த நிதி சின்னக் குழந்தைகள் மனதில் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை விதைக்கும் அரசியலுக்குத் திருப்பி விடப்பட்டது. இது மட்டுமின்றி ஆதிவாசிகள் மத்தியில் செயல்பட்டு அவர்களைச் சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் திருப்பும் ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ எனும் அமைப்புக்கும் நிவாரண நிதிகள் பிரித்தளிக்கப்பட்டதையும் ஆவாஸ் அறிக்கை சுட்டிக் காட்டியது.


“பாசிசத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சுடன் நெருக்கமாக உள்ள ஒரு அமைப்புதான் இப்படி பூகம்பத்தின் பெயரைச் சொல்லி நிதி திரட்டியது என்பதையும் அதன் வரலாற்றையும் கொள்கைகளையும் நிதி அளித்த மக்கள் அறிந்திருப்பார்களேயானால் அச்சத்திலும் வெறுப்பிலும் உறைந்திருப்பர்” என்கிறது ‘ஆவாஸ்’ அறிக்கை. இப்படிப் பொய் சொல்லி வேடமிட்டு நிதி திரட்டும் ‘சேவா இன்டெர்னேஷனல்’ அமைப்பு ஒரு ‘அறக் கொடை’ நிறுவனமாகத் (நீலீணீக்ஷீவீtஹ்) தன்னைப் பதிந்து கொள்ளவில்லை. இந்திய ஆர்.எஸ்.எஸ்சின் பிரிட்டிஷ் கிளையான ‘ஹிந்து ஸ்வயம் சேவக் சங் (ஹிரி)’ மற்றும் ‘விஸ்வ ஹிந்து பரிஷத் (ஹிரி)’ ’கல்யாண் ஆஸ்ரம் ட்ரஸ்ட் (ஹிரி)’ என்கிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிதி சேகரிப்புக் கிளையாக சேவா இன்டெர்னேஷனல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்கிடையேயான இரகசிய மற்றும் வெளிப்படையான உறவுகளையும் இவை இந்தியாவில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்பாடுகளையும் ஆவாஸ் அமைப்பின் ‘பேச்சாளர்’ (sஜீஷீளீமீsஜீமீக்ஷீsஷீஸீ) சுரேஷ் குரோவெர் பத்திரிகைகளில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.


2015 டிசம்பரில் நரேந்திர மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது இந்த ‘ஹிந்து சுயம் சேவக் சங்’ மற்றும் ‘பா.ஜ.க வின் கடல் கடந்த நண்பர்கள்’ முதலான மேற்கூறிய அமைப்புகள் 70,000 இந்தியர்களைத் திரட்டி மோடிக்கு ஒரு ‘மெகா’ வரவேற்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டன. இதற்கு எதிராக ஆவாஸ் அமைப்பு ‘மோடி திரும்பிப் போ’ (விஷீபீவீ ழிஷீt கீமீறீநீஷீனீமீ) என்றொரு பிரச்சாரத்தை மேற்கொண்டது. மோடியின் வருகையை எதிர்த்து பெரிய அளவில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


மோடி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருந்ததை ஒட்டி நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆவாஸ் அமைப்பு எழுப்பியிருந்த மிகப் பெரிய விளம்பர வரைவு இந்துத்துவத்தின் ‘ஓம்’ எனும் குறி கரைந்து பாசிசத்தின் ‘ஸ்வஸ்திகா’ வாக உருப்பெறுவதாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


(அடுத்த இதழில் இந்திய நலனை விற்று சியோனிசத்துடன் இழையும் இந்துத்துவம்)

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.