இந்துத்துவமும், சியோனிசமும் "இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 07

இந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்

இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆண்டு தோறும் வந்து குவியும் வெளிநாட்டு நிதிகள்

அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘செட்டில்’ ஆகியுள்ள, பெரும்பாலும் உயர் சாதிகளைச் சேர்ந்த இந்தியர்களின் “தொலைதூரத் தேசிய” உணர்வு பற்றி இந்தத் தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். இவர்கள் தமது இந்தத் தேசியத்தைச் சும்மா அவ்வப்போது பேசியும், முகநூல் போன்றவற்றில் எழுதியும் தீர்ப்பதோடு நிறுத்தி விடுவதில்லை. அவர்களின் செயல்பாடுகளை ஒரு அகன்ற நோக்கில் இவ்வாறு பிரிக்கலாம்:


இந்தியாவில் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இணையாக தாம் பணி செய்யும் நாடுகளில் அமைப்புகளை உருவாக்குவது, “சாகா’ க்கள் உட்பட அமைப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வது, குழந்தைகளுக்குக் கலாச்சாரப் பயிற்சி என்னும் பெயரில் இந்துத்துவ பால பாடம் புகட்டுவது, இந்தியாவில் இவர்கள் செய்து வரும் வலதுசாரி/ இந்துத்துவச் செயல்பாடுகளுக்கு ஆதரவாகக் கருத்துப் பிரச்சாரம் செய்வது, முதலியன.பெரிய அளவு நிதி திரட்டி இந்தியாவிலுள்ள இந்துத்துவ அமைப்புகளுக்கு அனுப்புவது.


தமது கருத்துக்கள் மற்றும் நோக்கங்களுடன் முற்றிலும் எல்லாவகைகளிலும் ஒத்துப்போகிற சியோனிச அமைப்புகளுடன் இரண்டற இணைந்து அமெரிக்க அரசியல்வாதிகள் மத்தியில் பா.ஜ.க வின் அரசியலுக்கும் செயற்பாடுகளுக்கும் ஆதரவாக “லாபியிங்” (றீஷீதீதீஹ்வீஸீரீ) செய்வது, அதாவது கருத்துருவாக்கி ஆதரவு திரட்டுவது


‘பா.ஜ.க வின் கடல் கடந்த நண்பர்கள்’ ((Overseas Friends of BJP), ஹிண்டு ஸ்வயம் சேவக் சங், ‘அமெரிக்க விசுவ இந்து பரிஷத்’ முதலான இத்தகைய இவர்களின் அமைப்புகள் குறித்து நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன். இவையும், இவை போன்ற வேறு சில அமைப்புகளும் அமெரிக்காவில் பெரிய அளவில் நிதி திரட்டி இந்தியாவிலும், வேறு சில பிற நாடுகளிலும் உள்ள சங் பரிவார வன்முறை அமைப்புகளுக்குப் பெருந் தொகைகளை அனுப்பி வருகின்றன. இது பற்றி “தென் ஆசிய குடிமக்கள் தளம்” (ஷிஷீutலீ கிsவீணீ சிவீtவீக்ஷ்மீஸீs கீமீதீ - ஷிகிசிகீ) சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையிலிருந்து சில செய்திகளை இப்போது பார்ப்போம். அத்ற்கு முன் ஒரு நினைவூட்டல். மோடி அரசு பதவி ஏற்ற கையோடு உடனடியாகச் செய்த வேலைகளில் ஒன்று இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகளை இதுகாறும் தோலுரித்துக் கொண்டிருந்த பல்வேறு தொண்டு நிறுவனங்களையும் முடக்கியதுதான்.


மோடியின் குஜராத் கொடூரங்களை வெளிக் கொணர்ந்த டீஸ்டா செடல்வாட் போன்றோர் மீது இந்த அடிப்படையில் வழக்குகளைத் தொடுத்து அவர்களைச் சொல்லொணாத் துயர்களுக்கும் ஆளாக்கினர். ‘கிரீன் பீஸ்’. ‘ஆம்னெஸ்டி இன்டெர்னேஷனல்’, ‘ஆக்‌ஷன் எய்ட்’ போன்ற தொண்டு நிறுவனங்கள் பெற்று வரும் தொகைளால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2 முதல் 3 சதம் வரை குறைந்துள்ளதாக மோடி அரசு குற்றம் சாட்டியதும் நினைவிருக்கலாம். இந்தச் சூழலில்தான் இங்குள்ள இந்துத்துவ வன்முறை அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் எவ்வளவு வெளிநாட்டு நிதிகள் வந்து குவிகின்றன என்கிற இந்த அறிக்கை வெளி வந்தது.


“அமெரிக்காவில் செயல்படும் இந்து தேசியம்: லாப நோக்கில்லாமல் செயல்படும் குழுக்கள் பற்றிய ஒரு அறிக்கை” என்பது இதன் தலைப்பு. ‘லாப நோக்கில்லாத குழுக்கள்” (ழிஷீஸீஜீக்ஷீஷீயீவீt ரீக்ஷீஷீuஜீs) என்பது சட்ட பூர்வமான ஒரு வாசகம். மற்றபடி இவர்கள் பல்வேறு கோடூரமான நோக்கங்களை உடையவர்கள் என்பது ஊரறிந்த இரகசியம். அமெரிக்க விசுவ இந்து பரிஷத், அமெரிக்க ஆர்.எஸ்.எஸ் எல்லாம் இத்தகைய ‘லாப நோக்கில்லாத’ குழுக்களில் அடக்கம்.


பெரும்பாலும் இந்த அமைப்புகள் அனைத்தும் வரி விலக்கு பெற்ற அற நிறுவனங்களாக அமெரிக்காவில் பதிவு செய்துள்ளன. அதிகாரபூர்வமான வரி வசூல் ஆவணங்களிலிருந்து இவர்கள் எவ்வளவு தொகைகளுக்கு வரி விலக்கு பெற்றுள்ளனர், அந்தத் தொகைகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என இங்கே தொகுக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் வசூலிக்கப்பட்ட ஏறாளமான தொகைகளும் இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளுக்குப் பிரித்தனுப்பப் பட்டுள்ளன. இனி விவரங்களைப் பார்ப்போம்.


ஹிந்து சுயம் சேவக் சங் மற்றும் அமெரிக்க விசுவ இந்து பரிஷத்


ஆர்.எஸ்.எஸ், வி.இ.ப ஆகியவற்றின் அமெரிக்க அமைப்புகளான இவை இரண்டும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள அமைப்புகள்.


முன்னது 1989 லிருந்தும், பின்னது 1970 லிருந்தும் செயல்பட்டு வருகின்றன குழந்தைகள், இளைஞர்கள், குடும்பத்தவர்கள் ஆகிய எல்லோருக்கும் தனித்தனியே இந்துப் பண்பாடு, இந்து அடையாளம் ஆகியவை குறித்த பயிற்சிகளை இவை அளிக்க்கின்றன. அவற்றினூடாக அவை எத்தகைய அரசியலையும் ‘தேச பக்தி’யையும் பயிற்சியாளர்களுக்கு ஊட்டும் என்பதை விளக்க வேண்டியதில்லை.


2002 -2012 என்கிற பத்தாண்டுகளில் இந்து சுயம்சேவக் சங் 1.4 மில்லியன் டாலர்கள் செலவில் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளன. இதே காரணத்திற்காக இதே காலகட்டத்தில் அமெரிக்க விசுவ இந்து பரிஷத் 1 மில்லியம் டாலர் தொகையைச் செலவிட்டுள்ளது. இந்து சுயம்சேவக் சங் வாரந்தோறும் குழந்தைகளுக்கு ‘பாலகோகுலம்’ வகுப்புகள் நடத்துகின்றன. யோகா, மதிப்பீட்டுக் கல்வி, காவிக் கொடி வணக்கம் ஆகியன இந்த வகுப்புகளில் பயிற்றுவிக்கப் படுகின்றன. இந்த வகுப்புகள் அனைத்தும் அமெரிக்கா முழுவதும் 140 ஷாகாக்களில் (கிளைகளில்) நடத்தப்படுகின்றன.


இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதி, 1994-&2000 காலகட்டத்தில் இந்த நிதியின் 50 சதப் பங்கு இந்தியாவில் செயல்படும் சங்கப் பரிவார அமைப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. 2002 &- 2012 ஆகிய பத்தாண்டுகளில் மட்டும் 17.3 மில்லியன் டாலர் தொகை இந்தியாவிலுள்ள இத்தகைய அமைப்புகளுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளன. அகில பாரதீய வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், ஏகல் வித்யாலயா ஃபௌன்டேஷன் ஆஃப் இந்தியா, பரம் சக்தி பீடம், சேவா இன்டெர்னேஷனல் முதலானவை இவற்றில் அடக்கம். இவற்றில் பல பழங்குடி மக்கள் மத்தியில் செயல்படுபவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அமைப்பு 2007 ல் இந்தியாவில செயல்படும் 56 சங்கப் பரிவார அமைப்புகளுக்கு அளித்த மொத்த தொகை 1,483,445 டாலர்கள்.


2008ல் 43 அமைப்புகளுக்கு அளித்த தொகை 1,255,960 டாலர்கள்.
2009ல் 41 அமைப்புகளுக்கு அளித்த தொகை 2,473,252 டாலர்கள்.
2010ல் 50 அமைப்புகளுக்கு அளித்த தொகை 1,864,075 டாலர்கள்
2011 ல் அளித்த தொகை 1,039,780 டாலர்கள் (விவரங்கள் இல்லை)
2012ல் 33 அமைப்புகளுக்கு அளித்த தொகை 1,086,600 டாலர்கள்


இந்தத் தொகைகள் அளிக்கப்பட்ட அமைப்புகள் சிலவற்றின் பெயர்கள்: மகாராஜா அக்ரசன் சிக்‌ஷா சமிதி, (ஆக்ரா); விவேகாநந்தா யோக அனுசந்தான சம்ஸ்தானா, பெங்களூரு, (கர்நாடகம்): அகில் பாரதீய வன்வாசி கல்யாண் ஆஷ்ரமம், ஜஷ்பூர்நகர், (சட்டிஸ்கார்); சஹஜ் சேவா சமஸ்தான், ஹைதராபாத் (ஆந்திரம்); ஏகல் வித்யாலயா ஃபௌன்டேஷன் ஆஃப் இந்தியா, (டெல்லி); ராஜேஷ் கங்காதர் படேல் சாரிடபிள் ட்ரஸ்ட், (குஜராத்); பாரத் கல்யாண் ப்ரதிஷ்தான் (டெல்லி); பரம் சக்தி பீடம் (டெல்லி); சேவா இன்டெர்னேஷனல் (டெல்லி); மகாராஜா அக்ரசென் டெக்னிகல் எஜுகேஷன் சொசைட்டி (ஹிமாசல் பிரதேஷ்); சமர்த் சாரிடபிள் ட்ரஸ்ட், (குஜராத்) முதலியன.இவை சில அமைப்புகளின் பெயர்கள் மட்டும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட தொகைகளின் விவரங்கள் உள்ளன.


(தொடரும்).