கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேடுவது எளிதான செயலாக மாற்றம் பெற்று வருகிறது. நாளிதழ்கள், இணையதளங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள், கல்வி கண்காட்சிகள் என கல்விக்கான தேடலுக்கு விடை காணக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பணம் செலவழிக்க முடிபவர்களுக்கே தரமான கல்வி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், பொருளாதாரவசதி மிகமுக்கியமான ஒன்றாகிவிட்டது. ‘ஸ்காலர்ஷிப் பெறுவது எப்படி?’ எனப் பல பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் படித் திருப்பீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். சிலர் சிலவித உதவித்தொகைகளை பெற்றும் இருப்பீர்கள்.

தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள்.

கல்வியில் சிறந்து விளங்கும், கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு பேகம் ஹஜ்ரத் மஹல் (மௌலானா ஆசாத்) தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையில் ‘‘முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்’’ என்ற அமைப்பு தமிழகம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிலிருக்கும் ஏழைப் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்து, சத்தான உணவு கிடைக்கச் செய்திட தமிழக அரசு டாக்டர். முத்துலட்சுமி  ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம். 

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.