தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நலநிதி உதவித் திட்டம்

திசைவழி

வறுமையில் வாழும் ஏழைக் குடும்பத்தில், உழைத்து பொருளீட்டும் நபர் இறந்து போய்விட்டால் அந்தக் குடும்பத்துக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சமூகப்பாதுகாப்பு திட்டம் வாயிலாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிபந்தனைகள்


இயற்கையான மரணமாக இருக்க வேண்டும். விபத்து, தற்கொலை செய்து கொண்டவர் குடும்பம் இந்த உதவியைக் கோர முடியாது.
மரணமடைந்தவர் குடும்பத் தலைவராக, அவர் மட்டுமே குடும்பத்தில் வருமானம் தேடித் தரும் நபராக இருந்திருக்க வேண்டும்.
மரணமடைந்தவரின் வயது 60-க்குள் இருக்க வேண்டும்.
குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளை சம்பாதிக்க முடியாத நிலையில் (உடல் ஊனமுற்றவர் அல்லது படித்துக் கொண்டிருப்பவராக இருத்தல்) இருந்தால் இவ்வுதவியைப் பெற இயலும்.

குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்குள் இருக்க வேண்டும்.
சாதி, மதம் போன்ற பிற கட்டுப்பாடுகள் இல்லை.


விண்ணப்பப் படிவம்


தாலுகா அலுவலகம் அருகில் உள்ள கடைகளில் இந்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும்.
 தேவையான ஆவணங்கள் குடும்பத் தலைவர் இறப்புச் சான்றிதழ் மற்றும்
வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றில் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியவர்களிடம் கையப்பம் பெற்றிருக்க வேண்டும்.


அதிகாரிகள் ஆய்வு


விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வட்டாட்சியரின் முறையான விசாரணைக்குப் பின் அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் குடும்ப தலைவர் இறந்து ஆறு மாதங்களுக்குள் இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.


உதவித் தொகை


இத்திட்டத்தில் உதவி பெறுபவர்களுக்கு ரூபாய் 12,500 உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும், நமது கைபேசி தொடர்பு எண் விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.


குறிப்பு


குடும்பத்தை பொருளீட்டிக் காப்பாற்றுபவர் என்றுதான் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் என்கிற பேதமில்லை. எனவே ஒரு குடும்பத்தில் பெண்தான் குடும்பத்துக்கு நிதி ஆதாரமாக இருந்தார் என்பது உண்மை எனில் உரிய சான்றுகளுடன் அக்குடும்பம் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன் பெற முடியும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.