சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

திசைவழி

1. ஒரு பெண் குழந்தைக்கான திட்டம். 

2.  பெண் குழந்தைகளுக்கான திட்டம்


நோக்கம்

பெண் சிசு வதையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல்.
உதவித்தொகை விவரம்


திட்டம்-1


குடும்பத்தில் ஒரேயரு பெண் குழந்தை எனில், ரூ.50 ஆயிரத்திற்கான காலவரை வைப்புத்தொகை குழந்தையின் பெயரில் வழங்கப்படும்.
திட்டம்-2


குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிலைவைப்புத்தொகை வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் சேரும் குழந்தைக்கு வைப்புத்தொகை வழங்கப்பட்ட ஆறாம் ஆண்டில் இருந்து இருபதாம் ஆண்டு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்


ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆண் குழந்தை இருத்தல் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 பயனடையும் குழந்தை 3 வயது நிறைவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இணைக்க வேண்டிய சான்றுகள்


 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்.
 வருமானச்சான்று.
 இருப்பிடச்சான்று.
 சாதிச்சான்று.
 பெற்றோரின் வயதுச்சான்று.
ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று.
குடும்ப அட்டையின் நகல்.
 குடும்ப புகைப்படம்.


வழங்கப்படுவதற்கான கால அளவு:- நிலை வைப்புத் தொகையின்20-ம் ஆண்டின் முடிவில் முதிர்வுத்தொகை வழங்கப்படும்.


அணுக வேண்டிய அலுவலர்


மாவட்ட சமூகநல அலுவலர்
 மாவட்ட திட்ட அலுவலர்கள் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்).

விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்), ஊர்நல அலுவலர்கள். இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் பி.டீ.ஓ. அலுவலகங்களில் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை இ.சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.