மாவட்டத் தொழில் மையம் சேவைகள்

திசைவழி

தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்க மற்றும் வளர்க்க அரசு பல உதவிகளை செய்கிறது. தொழில்கள் முன்னேற்றுவதற்கான உதவி களை வழங்குவதற்காக அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

இதில் மாவட்ட வாரியாக தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் மேம்படுத்த மாவட்டத் தொழில் மையம் என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத் தொழில் மையம் எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது. மாவட்டத் தொழில் மையங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழில்களை வளர்ப்பதற்கும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.


சிறு,குறு தொழிற் சாலைகள் மூலம், வேலைவாய்ப்பினை அதிகரிப் பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கமாகும். தற்பொழுது, தொழிற்சாலைகளை நவீனப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் அதிக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மையம் பல்நோக்கு அடிப்படையில் தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருகிறது.


மாவட்ட தொழில் மையமானது, பொது மேலாளர் தலைமையின் கீழ், செயலாளர் மற்றும் தொழில்நுட்ப அலுவலரின் உதவியோடு இயங்கி வருகிறது. இம்மையத்தில் பொது மேலாளர் புதிய தொழில் முனைவோருக்கு தேவையான வசதிகளோடு ஆலோசனையும் வழங்கி வருகிறார். மேலும் தற்போது இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் தர மேம்பாட்டுக்கான உதவிகளையும் செய்து வருகிறார்.


மாவட்டத் தொழில் மையத்தின் பணிகள்

· தொழில் முனை வோர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குகிறது.
· நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை புனரமைக்க ஏற்பாடு செய்கிறது.
· மத்திய, மாநில அரசுகளின் குறு,சிறு மற்றும் நடுத்தர கொள்கையின் படி தொழில் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
· குடிசை தொழில் மற்றும் கைவினை சம்மந்தப்பட்ட தொழில்கள் வளர்வதற்கு உதவுகிறது மற்றும் அதற்கான சான்றுகளை வழங்குகிறது.
· தொழில் முனைவோர்களுக்கு குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றிடம் சான்றிதழ்களை பெற உதவுகிறது.
· மின்சாரம் சம்மந்தப்பட்ட மானியங் களை வழங்குகிறது.


செயல்பாடுகள்

· இணைய தளம் மூலம் பதிவு செய்தல்
· குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்
· கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்.
· தொழில் வளர்ச்சி முகமை
· வேலை வாய்ப்பினை அதிகரித்தல்
· தொழில் முனைவோரை ஊக்குவித்து வழிகாட்டுதல்
· உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்
· ஏற்றுமதி வழிகாட்டி மையம்
· தரக்கட்டுப்பாடு ஆணையை செயல்முறைப்படுத்துதல்.


மத்திய, மாநில அரசின் பெரும்பாலான தொழில் திட்டங்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலமே செயல்படுத்தப்படுகின்றன. தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பல்வேறு உதவிகளை பெறலாம். இணையதள முகவரி http://www.indcom.tn.gov.in

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.