சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெற தகுதிகள் விபரம் 

திசைவழி

இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை

60 வயதிற்கு மேற்பட்டிருக்க வேண்டும். பயனாளியின் பெயர்,வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும். பயனாளி உழைக்கும் திறன் உள்ளவராக இருக்கக் கூடாது. பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.


2. இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

பயனாளியின் வயது 18லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 55% க்கு அதிகமாக இருக்க வேண்டும். பயனாளியின் பெயர் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும். பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.


3. இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை

பயனாளியின் வயது 40லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும். மறுமணம் செய்திருத்தல் கூடாது. எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும். பயனாளியின் பெயர் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

4. ஆதரவற்ற விதவை உதவித் தொகை

பயனாளியின் வயது 18 மற்றும் 18க்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். மறுமணம் செய்திருத்தல் கூடாது. வருமானம் ஏதுமின்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம். வருமானம் ஏதுமின்றி வாழ்பவராக இருக்க வேண்டும்

5. மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

பயனாளியின் வயது 18 மற்றும் 18க்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். ஊனத்தின் தன்மை 60% க்கு மேல் இருத்தல் வேண்டும். வருமானம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்
6. கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற மனைவியருக்கான

உதவித் தொகை

பயனாளியின் வயது 30 மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் நிலையான முகவரியை உள்ளவராக இருத்தல் வேண்டும். முறையான திருமணம் ஆனவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 5 வருடங்கள் பிரிந்து வாழ்பவராக இருத்தல் வேண்டும். எவ்வகையிலும் வருமானம் பெற வழியில்லாதிருக்க வேண்டும்.
7. திருமணமாகாத ஏழை மகளிர் உதவித் தொகை

பயனாளி 50 வயதை நிறைவு செய்து திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும். எவ்வித வருமானமோ அல்லது பிழைப்பூதியத்திற்கான ஆதரவு வழியோ பெற்றிருத்தல் கூடாது. பிச்சைஎடுப்பதை தொழிலாக கொண்டிருக்க கூடாது.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

இத்திட்டத்தில் ஐந்து வழிகளில் நிதி உதவிகள் பெற வழிவகை உள்ளன.

1. உறுப்பினர்களின் திருமணம்,
2. உறுப்பினர்களின் குழந்தைகள் திருமணம்
3. முதியோர் உதவித் தொகை,
4. கல்வி உதவித் தொகை
5.இயற்கை மரணம் - ஈமச்சடங்கிற்கான நிதி யுதவி, விபத்து மரணம் -ஈமச்சடங்கிற்கான நிதியுதவி

அனைத்து திட்டங்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.