மாணவர்களுக்கான உதவிதொகை

திசைவழி

பணம் செலவழிக்க முடிபவர்களுக்கே தரமான கல்வி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், பொருளாதாரவசதி மிகமுக்கியமான ஒன்றாகிவிட்டது. ‘ஸ்காலர்ஷிப் பெறுவது எப்படி?’ எனப் பல பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் படித் திருப்பீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். சிலர் சிலவித உதவித்தொகைகளை பெற்றும் இருப்பீர்கள்.


ஆனால், தமிழ்நாட்டில் படித்துவரும் (உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி படிப்புகள்) மொத்த மாணவர்களில் அதிக சதவீதத்தினர் தங்களுக்கு என இருக்கும் உதவித்தொகைகளை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.


அதேபோல் இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டுக்கு கல்வி (ஸ்காலர்ஷிப் பெற்றும்/பெறாமலும்) பயில மாணவர்கள் செல்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் மாணவர்கள் பல நாடுகளுக்குச் செல்கின்றனர்.


இம்மாணவர்களில் வெளிநாட்டு உதவித்தொகை பெறுவோர் பட்டியலில் 10% கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். காரணம், தமிழக பெற்றோர் பலருக்கு மாணவர்களுக்கான உதவித்தொகைகள் இத்தனை உள்ளனவா? எப்படி? எப்போது? விண்ணப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.


ஒவ்வொரு பள்ளியிலும் 1ம் வகுப்பு முதல் +2 வரையிலும், அனைத்துக் கல்லூரிகளிலும் பிற்பட்டோருக்குப் பிற்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், சிறுபான்மையினருக்கு சிறுபான் மையினர் நலத்துறையும் உதவித்தொகை வழங்குகின்றன. தனியார் பள்ளியில் படித்தாலும் இந்த உதவித்தொகைகள் வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையைப் பெற பள்ளி அலுவலகம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவற்றுக்கு எந்த மதிப்பெண் அளவீடும் தேவை இல்லை.


இதேபோல் தனியார் நிறுவனங்கள், அரசின் வாரியங்கள், மத்திய அரசு, அகில இந்திய அளவில் உள்ள ழி.நி.ளி-க்கள் பெரிய அளவில் செயல்படும் ழி.நி.ளி-க்கள், வெளிநாட்டுத் தூதர்கள், ஆசிய வங்கி, உலக வங்கி, காமன்வெல்த் நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, பல வெளிநாட்டு அரசுகள் உதவுகின்றன.


இந்த அனைத்து உதவித் தொகைகளையும் பெற விரும்பும் மாணவர்களும், பெற்றோர்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களைப் பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு கல்வி உதவித் தொகைகளைப் பெற்று பயனடையலாம்.


அனைத்து கல்வி உதவித் தொகைகளைப் பெற


· www.scholarshipsinindia.com,
· www.mhrd.gov.in


குறிப்பிட்ட பிரிவினருக்கான உதவி பெற


· www.tahdco.tn.gov.in
· www.tn.gov.in/adidravider welfare
· www.nsfdc.nic.in
· www.india.gov.in/citizen/study


பிற்பட்டோர் உதவி பெற


· www.tn.gov.in/backward
· www.tn.vog.in/schemes/bcmbcw


சிறுபான்மையினர் உதவி பெற


· www.tn.gov.in/minorities


முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை


www.tn.gov.in/exservicemenwalfare


UGC (பல்கலைக்கழக மானியக் குழு)


· www.ugc.ac.in


உலக வங்கி உதவி பெற


· www.worldbank.org


காமன்வெல்த் நாடுகள் உதவி பெற


· www.commonwealth.com


மேலும் கீழ்க்கண்ட வலைத்தளங்களிலும் பல பொதுவான உதவிகள்/கடன்கள் பற்றி அறியலாம். (வெளிநாட்டு உதவிகளுக்கு சென்னையில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களை நேரில் அணுகியும் விவரம் பெறலாம்)


· www.studyguideindia.com
· www.national
· www.scholarshipsexam.com
· www.unicef.org.in
· www.unesco.org

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.