வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் கூடுதலான பணி சம்மந்தப்பட்ட மன உளைச்சல் ஆகிய காரணங்களால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குடும்ப ஆலோசனை மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் "சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இந்த பொது சேவை மையம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் (இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகை விபரம்)

வறுமையில் வாழும் ஏழைக் குடும்பத்தில், உழைத்து பொருளீட்டும் நபர் இறந்து போய்விட்டால் அந்தக் குடும்பத்துக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சமூகப்பாதுகாப்பு திட்டம் வாயிலாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்க மற்றும் வளர்க்க அரசு பல உதவிகளை செய்கிறது. தொழில்கள் முன்னேற்றுவதற்கான உதவி களை வழங்குவதற்காக அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வழியாக வழங்கப்பட்டு வரும் கடன் மற்றும் உதவி திட்ட விபரங்கள்

கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேடுவது எளிதான செயலாக மாற்றம் பெற்று வருகிறது. நாளிதழ்கள், இணையதளங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள், கல்வி கண்காட்சிகள் என கல்விக்கான தேடலுக்கு விடை காணக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பணம் செலவழிக்க முடிபவர்களுக்கே தரமான கல்வி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், பொருளாதாரவசதி மிகமுக்கியமான ஒன்றாகிவிட்டது. ‘ஸ்காலர்ஷிப் பெறுவது எப்படி?’ எனப் பல பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் படித் திருப்பீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். சிலர் சிலவித உதவித்தொகைகளை பெற்றும் இருப்பீர்கள்.