கல்வியை மாநிலப் பட்டியலுக்கே முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தில் பேரெழுச்சியோடு தொடங்கியுள்ளது. மாநில உரிமைகளை அணுவளவும் மதிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து வந்த அத்துமீறல்கள், மாநிலத்தின் கல்வி நிலையைச் சிக்கலாக்கி, சிதிலமாக்கி வந்தன.

கார் திருடர்கள் தங்களின் செயல்பாட்டுக்கு உகந்ததாக இரவு நேரத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். மத்தியில் ஆளும் மதவாத மோடி அரசின் மிக முக்கிய செயல்பாடுகளும் கூட இரவு நேரத்திலேயே அறிவிக்கப்பட்டன.ஓர் அரசின் நடவடிக்கையை கொள்ளைக்காரர்களின் நடவடிக்கையோடு எப்படி ஒப்பிட முடியும்... முடியாதுதான். அந்த முடிவு ஜனநாயகப் பண்புகளோடும், அரசு நெறிகளோடும் எடுக்கப்பட்டிருந்தால்... ஆனால்....மோடி அரசின் ஜிஎஸ்டி கொள்கைக்காக நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மணியடிக்கப்பட்டது. அதுதான் சாதாரண வணிகர்களின் நிம்மதிக்கு சாவுமணியானது. அதானி, அம்பானி கும்பலுக்கு அது சங்கீதமாய் இருந்திருக்கலாம்.

காமுகச் சாமியார் குர்மீத் ராமைக் குற்றவாளி என்றது நீதிமன்றம். ஊரையே கொளுத்துகிறார்கள் சாமியாரின் அடியார்(ட்)களும், சங்பரிவார ஃபாசிஸ்டுகளும்.

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி"என்று பாரதியார் எழுதிய வரிகள் பலருக்கும் பொருந்தும் என்றாலும், மிகக் கச்சிதமாகப் பொருந்துவது பிரதமர் மோடிக்குத்தான். அதை அவரது உரைகள் என்ற பெயரிலான உளறல்களும், செயல்பாடுகள் என்ற பெயரிலான சித்ரவதைகளும் நாள்தோறும் நிரூபித்து வருகின்றன.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.