இந்தியா கோவிந்தாவா...??

தலையங்கம்

நாட்டின் 14வது குடியரசுத் தலைவராகஆர்எஸ்எஸ் ஊழியர் ராம்நாத் கோவிந்தைஅமர்த்தியதில் தனது சாமர்த்தியத்தைக்காட்டி, அதற்கு சமூக நீதியின் சாயம்பூசப்பார்க்கிறது சங்பரிவாரத்தின் அரசியல்பிரிவான பாஜக.


ராம்நாத் கோவிந்த் ஒரு தலித். அவரைமுன்மொழிந்ததோ பாஜக. எனவே தலித்துகள்மீது உண்மையான அக்கறை தங்களுக்கேஇருப்பது போல தம்பட்டம் அடிக்கப்பார்க்கிறது பாஜக. இதில் அவர்கள் சிறிதும்வெட்கப்படுவதில்லை.


"பிறக்கும் போது இந்துவாகப் பிறந்தேன்.ஆனால் இறக்கும்போது நிச்சயம் ஓர்இந்துவாக இறக்க மாட்டேன்" என்றுசூளுரைத்து தனது ஆதரவாளர்களுடன்பவுத்தம் தழுவிய, சங்கிகளின் முதல்எதிர்ப்பாளரான பாபாசாகேப் அம்பேத்கரையேதனது குருமார்களில் ஒருவராய் வர்ணித்து, பூசை செய்து, அவரது மக்களை அழிக்கும்சங்பரிவார சாகசம், குடியரசுத் தலைவர்தேர்தல் விவகாரத்திலும் வெளிப்படுவதில்வியப்பொன்றும் இல்லை.


முதன்முதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்தடாக்டர் கே.ஆர்.நாராயணனை காங்கிரசுதான் குடியரசுத் தலைவராக்கியது. மேலும்தலித் சமுதாயத்தைச் சார்ந்த பலரையும்உயர்பதவிகளில் காங்கிரசு அமர்த்தியதுண்டு.ஆனால் பாஜக போல அருவறுப்பானஅடையாள அரசியல் செய்ததில்லை. கட்சியில்உழைத்த தகுதி அடிப்படையிலேயே தலித்சமூகத்தினர் உயர்ந்த நிலையை எட்டினர்என்பதே உண்மை. ஆனால், உயர் பதவிகளில்தலித்கள் இருந்த காரணத்தால்அம்மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும்அநீதிகளும், கொடுமைகளும் குறைந்தனவா?என்றால் நிச்சயமாக இல்லை. மதவாதமும், இனவெறுப்பும் அடிப்படைக்கோட்பாடுகளாய் இல்லாத காங்கிரசிலேயேஇதுதான் நிலை என்னும் போது, மதவெறியையும், ஃபாசிசத்தையும் தனதுகொள்கைக் கோட்பாடாகக் கொண்டு‘ஆரியத்துவ ராஷ்ட்ரா’ அமைப்பதற்காக இரவுபகலாய் துடிதுடித்து வரும் சங்பரிவாரத்தின்அரசியல் உத்தியோ சாக்கடையில் மிதக்கும் மலத்தை விடவும் அருவறுப்பானது.


குஜராத்தில் இவர்கள் நிகழ்த்திய முஸ்லிம்இனப்படுகொலையின் ரத்தக் கறையைத்துடைப்பதற்கு டாக்டர் அப்துல் கலாமின்தொப்பியைப்(?) பயன்படுத்திய அசகாயசூரத்தனம் கொண்ட அயோக்கியத்தனம்இவர்களுக்குரியது.


அடிப்படையில் சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டிற்கும் எதிரான ஒரே இயக்கம்சங்பரிவாரம் ஆகும். மேலும், சமூக நீதியைஅழிப்பதே இவர்களது சாசுவத லட்சியம். மண்டல் கமிஷன் பரிந்துரைகளைத் தூசு தட்டிஎடுத்த வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்க்க, பாபரி மஸ்ஜித் பிரச்சினையைக்கையிலெடுத்து, ரத யாத்திரை என்ற பெயரில்ரத்த யாத்திரை நடத்தி, வி.பி.சிங் அரசைக்கவிழ்த்தது பாஜக. அதன்மூலம்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களின்கல்வி, சமூக, பொருளாதாரமுன்னேற்றங்களுக்கு சமாதி கட்ட முயன்றதுபாஜக. ஏன்? வாடும் மக்களின்வாழ்வுரிமையைப் பறிப்பது வர்ணாசிரமத்தைவாழவைக்கத் தானே?


மண்டல் கமிஷனுக்கு எதிராக ஒரு மாணவரைஉயிரோடு கொளுத்தி நாடகமாடியது இந்தநரவேட்டைக் கும்பலல்லவா? காமராஜர், மாட்டரசியலுக்கு மசியவில்லை என்றதும்அவரை உயிரோடு கொளுத்த முயன்றகொடியவர்கள் இவர்கள் தானே...?


குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக்களமிறங்கிய மீரா குமாரின் தந்தை பாபுஜெகஜீவன் ராம், இந்தியாவில் அதிக காலம்உயர் பதவி வகித்த பெருமைக்குரியவர்.நாட்டின் துணைப் பிரதமர், ராணுவ அமைச்சர்என்ற உயர் பதவிகளில் ஒருசேர அவர்வீற்றிருந்த காலத்தில், காசியில் ஒரு தலைவர்சிலையை அவர் திறந்து வைத்தார். இதைஎதிர்த்து பெரும் போராட்டம் நடத்தியஇன்றைய பாஜகவின் அன்றையமுன்னோடிகள், அந்தச் சிலையின் தலையில்கங்கை நீரை ஊற்றி தீட்டுக் கழித்தனர்.காரணம், ஜெகஜீவன்ராம் ஒரு தலித் என்பதே.


மீராகுமாரைத் தோற்கடித்ததும் அதேகாரணத்திற்குத்தான். எனவே, அறியாசனங்களை மதிமயக்கி, அரியாசனங்களைவெல்லும் சங்பரிவார சதி குறித்தவிழிப்புணர்வை மக்களிடம் பரப்ப வேண்டும்.
பிரதமரும் ஆர்எஸ்எஸ், குடியரசுத் தலைவரும்ஆர்எஸ்எஸ். எனவே இந்தியா, இந்துயா?வாக மாறிவிடும் என்று அச்சப்படத்தேவையில்லை.


நாளுக்கு நாள் மக்களிடம் இவர்களின்முகமூடி கிழிந்து வருகிறது. மந்திரம் சொல்லிமணியாட்டி மயக்கியவர்கள் இப்போது தந்திரம்செய்து விஷீஸீமீஹ் யால் ஆட்டியே வெல்கின்றனர்.
ஒரு மதம், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்றஃபாசிசக் கொள்கை, பதவி என்ற பாடையில்ஏறிய பிறகுதான் இடுகாட்டுக்குப் போகும்.இந்தியா என்றால் எங்கள் மீதுதிணிக்கப்படுவது ‘இந்தி’‘யா? என்றுதென்மாநிலங்கள் கொதிக்கின்றன. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., நீட், விவசாயவிரோதம் எனப் பல்வேறு எரிமலைகள்ஆவேசத்தோடு வெடிக்கக் காத்திருக்கின்றன.


ராம்நாத் கோவிந்தாவா இந்தியா? இல்லை.தேசம் விழிக்கத் தொடங்கி விட்டது. காவிக்கனவுகள் கலையத் தொடங்கி விட்டன.