ஃபாசிசப் பொய்மை வீழட்டும்... இந்திய தேசம் மீளட்டும்...

தலையங்கம்

திரு.நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக பொறுப்பேற்று மே 25வுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை மோடியின் மூன்றாண்டு ஆட்சி இந்தியாவுக்குத் தந்திருக்கிறது.


புரட்சி, வளர்ச்சி, மலர்ச்சி, எழுச்சி எல்லாம் பிரதமர் மோடி ஆற்றும் உரைகளில் உறைந்திருக்கின்றன. ஆனால் தேசத்தின் வீதிகளிலோ பஞ்சம், பசி, லஞ்சம், விரக்தி, விரோதம், வெறுப்பரசியல் எனதீமைகளின் பேரணிகள் திகைப்பூட்டும் வகையில் நீள்கின்றன.


சுடுகாட்டிலிருந்து இரவுகளில் யாத்திரை தொடங்கும் குடுகுடுப்பைக்காரன் "நல்லகாலம் பொறக்குது... நல்ல காலம்பொறக்குது..’’ என உடுக்கை அடித்துஉரக்கச் சொல்வதுபோல, தேர்தலின் போது மோடியும் "அச்சே தின் ஆகயா’’ (நல்லகாலம் வருது) என்று ஒவ்வொரு கூட்டத்திலும்ஓங்கி முழங்கினார்.


மோடியின் அரசு ஒவ்வொரு முனையிலும் படுதோல்வியைசந்தித்துள்ளது. அதை மதவாதப்படுதாவால் மறைக்கவும் முயல்கிறது.கடந்த பத்தாண்டுகளில் மிகமிகக்குறைவான வேலைவாய்ப்புகளே மோடிஆண்டுள்ள மூன்றாண்டுகளில்உருவாக்கப்பட்டுள்ளன.


‘கடலளவு பேச்சும், கடுகளவு செய லும்’என்பதை தனது சூத்திரமாகக்கொண்டுள்ள, சூழ்ச்சிகளின் சூத்ரதாரியான மோடி ஆட்சியோ, ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசு 3.5 சதவீதத்தில் விட்டுப் போன விவசாய வளர்ச்சியை 1.9சதவீதம் அளவுக்கு வீழச் செய்துள்ளது.


இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயத்தில் வளர்ச்சிஇல்லையென்றாலே வேறெந்த வளர்ச்சியும் இருக்காது. இதில் விவசாயத்தில் வீழ்ச்சியும்ஏற்பட்டால் என்னாகும்? மாண்பான தேசம் மண்ணாகும், புதுமையும் வளர்ச்சியும் புண்ணாகும். ஏழைக்கும் செல்வந்தருக்குமான இடைவெளி மிகவேகமாக அதிகரித்து வருகிறது.


‘இந்தியாவில் தயாரிப்போம்’ (விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ)என்பது மோடியின் கித்தாப்பு காட்டும்மத்தாப்பு வாசகம். ஆனால் உண்மையில்நடப்பது என்ன? கடந்தஇரண்டாண்டுகளில் 60 லட்சம் டன்கோதுமை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்தியை இந்தக் கொலை முதலாளிகள் கொள்முதல் செய்ய வில்லை. மேலும் 50 லட்சம் டன்உணவு தானியங்களை மோடி அரசுஇறக்குமதி செய்துள்ளது. நிலையில்லா வாழ்க்கை வாழும் இந்திய விவசாயிக்கு செய்த உற்பத்திக்கோ இந்த ஆட்சியில் விலையில்லை.


சாகுபடி செய்பவனை சாகும்படிசெய்வதும், விவசாய உற்பத்திப்பொருட்களை உற்நாட்டில் கொள்முதல் செய்யாமல், வெளிநாடுகளிலிருந்துஇறக்குமதி செய்து விவசாயிகளைஇறக்கும் படி செய்வதும் தான் மோடிஅரசின் முதன்மைச் செயல்திட்டம்போலும்.


45 ரூபாய்க்கு இறக்குமதி செய்த தானியத்தை 250 ரூபாய்க்கு சில்லறைச் சந்தையில் விற்றதில் மிகப்பெரிய ஊழல்செய்துள்ளது மோடி அரசு என்கிறார் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ஜெய்ராம் ரமேஷ்.


பிரதமரின் ‘ஃபசல்பிமா யோஜனா’ என்றகாப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயிர்க்காப்பீடாக விவசாயிகளிடம் மோடி அரசு 16 ஆயிரம் கோடி வசூலித்தது. இரண்டாண்டுகளில் விவசாயிகள் பெற்றுள்ள இழப்பீடோ வெறும் 7 ஆயிரம்கோடி.


2014 தேர்தலின் போது மோடி வாக்களித்த, குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய விளை பொருட்களுக்கு 50 சதவீதம் லாபம் ஆகியவை காற்றில் பறக்க விடப்பட்டன என்கிறது காங்கிரஸ் கட்சி.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயரை சூட்டுவதில் புரட்சி(?) செய்யும் அளவுக்கு அவற்றை செயல்படுத்துவதில் மோடிஅரசு ஒரு சிறிதும் அக்கறை காட்டுவதில்லை. ஆண்டுதோறும் 2 கோடி பேருக்குவேலைவாய்ப்பு தரப்போவதாக வாக்களித்துத்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மோடியின் கேடுகால ஆட்சிதொடங்கிய பிறகு 2016ம் ஆண்டு 2 லட்சம்வேலை வாய்ப்பு கூட இல்லை. 2015ம்ஆண்டு உருவான வேலை வாய்ப்பு 1.5லட்சத்திற்குள் தான்.


500 ரூபாய், 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தேசத்தைப் பெரும்பாதாளத்தில் தள்ளிய பாதகத்தையும் இந்தஅரசு செய்தது. கறுப்புப் பணத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கே இந்த நடவடிக்கை என்றார் மோடி. அவரது ஆட்சியில் இரண்டும் ஒழியவில்லை, ஓங்கி வளர்கிறது.


பொருளாதார வளர்ச்சியில் மோடி அரசுஅடைந்துள்ள தோல்வியை முதன்மைப்பொருளாதார ஆலோசகரான டாக்டர்அரவிந்த் சுப்ரமணியமே கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் மோடி அரசு சந்தித்துள்ள பெரும் வீழ்ச்சிகளை டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் புள்ளி விவரங்களுடன் தோலுரித்துள்ளார்.


தன்னால் தேசத்துக்கு நன்னாள் வரும்என்ற மோடியின் வாக்குறுதியை நம்பியோரின் வாழ்வு, புண்ணால் நிறைந்து புரை யோடி நிற்கிறது. கெட்டுவரும் தேசத்தைக் கேட்டிலிருந்து மீட்க, இந்தியாவின் எட்டுத்திக்கும் எழுந்திட வேண்டிய நேரமிது.