மோடியையும் அவர் வகையறாக்களையும் கவிஞர் வைரமுத்து வகை தொகையில்லாமல் புகழ்ந்திருக்கிறாரே?

வட மரைக்காயர் பதில்கள்

மோடியையும் அவர் வகையறாக்களையும் கவிஞர் வைரமுத்து வகை தொகையில்லாமல் புகழ்ந்திருக்கிறாரே? ஜோசப் அமலன், தூத்துக்குடி.

வகை இல்லாமல் புகழ்ந்திருப்பார். தொகையில்லாமல்? சந்தேகம் தான். வைரமுத்து இனி எல்லோராலும் வையிர முத்து வாகி மொத்து வாங்குகிறாரே பரிதாபம் தான். வடுகப்பட்டியார் கவுரவம் பார்க்காமல் புதல்வர் கபிலன் வைரமுத்துவிடம் பாடம் படிக்கட்டும்.

கொஞ்சம் கூட நம்பமுடியாத முட்டாள் தனமான கருத்தை சொல்பவரை என்ன சொல்லி தீட்டுவீர்கள்? அக்பர் அலி,பல்லாவரம்.

போடா நியூஸ் செவென் டிவி என்று அழைத்து திட்டுகிறார்கள் சிலர் நானும் நீங்களும் அதைப்போன்றுதான் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது. மோடிக்கு தமிழ் நாட்டில் 95 சதவீத ஆதரவு இருக்கிறது என சற்றும் இரக்கமில்லாமல் புளுகிய கருத்துக்கணிப்பை பரப்புரையாக செய்த அந்த சானல் புகழ் மாலைகளால் (!) புளகாங்கிதப்பட்டு கிடக்கிறதாம்.

ஆளுநரின் தன்னிச்சையான ஆய்வு குறித்து? ஆர்.எம்.முத்துமீரான்,தென்காசி.

குள்ள நரிக்கூட்டத்தின் புதிய சேட்டை தொடங்கிவிட்டது ஆய்வு செய்கிறது ஆளு நரி. ஆனால் தமிழ்நாடு இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது காரணம் அது பனங்காட்டு நரி.

போயஸ் கார்டனில் வருமான வரித்துறை புகுந்தது குறித்து ? புகாரி,வில்லிவாக்கம்.

ஜி.எஸ்.டி போன்ற அறிவிப்பாக இருந்தாலும் சரி செல்லா நோட்டு அறிவிப்பாக இருந்தாலும், போயஸ் தோட்ட வருமான வரி ரெய்டாக இருந்தாலும் சரி இவர்கள் இரவை தேர்ந்தெடுப்பது ஏன்?


இன்று திப்புவுக்கு விழா எடுப்பவர்கள் நாளை கசாபுக்கும் விழா எடுப்பார்கள் என சித்தராமையாவை கடுமையாக தாக்கி இருக்கிறாரே மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார்? இப்ராஹீம், மைசூர்.


கர்நாடகா காங்கிரஸ் அரசு மீது கடுமையாக பாய்ந்து பிராண்டி வருகிறார்கள் அனந்த குமார் வகையறாக்கள்.திப்புவை தனது பெருமைமிகு முன்னோராக நினைத்து பெருமிதப்படும் உரிமை சித்தராமையாவுக்கு உண்டு. உண்மையான தேசப்பற்றாளனுக்கு அது போன்ற சிந்தனையிலேயே நாட்டுக்காக உழைப்பார்கள்.எந்த பாரமபரிய சிறப்போ நாட்டுக்கு பாடுபட்ட பின்னணியோ தியாக வரலாறோ இல்லாத கூட்டம் ஆத்திரப்படத்தான் செய்வார்கள். தேசப்பற்றுள்ள வீர மிக்க இந்திய குடிமகன்கள் திப்புவை தான் தம் ஆதர்ச நாயகனாக மனதில் வரித்துக்கொள்வார்கள். கோல்வல்கரையோ, கோட்ஸே வையோ அல்ல. இவர்களை பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்


நிர்மலா சீதாராமன்? பாத்திமா கனி, கோவை.

ராகுல் காந்தியின் ஸ்லீப்பர் செல்லோ என என்னும் அளவுக்கு அவரது கருத்துக்கள் பாஜகவை தரையோடு தரையாக தரைமட்டமாக்கும் அளவுக்கு உள்ளது. நிர்மலா அம்மையார் பேச பேச பாரதீய ஜனதா பரிதாப ஜனதாவாக மாறிக்கொண்டே வருகிறது.