நவம்பரில் கமல் புதுக்கட்சி தொடங்கப்போகிறாராம்.டிசம்பரில் ரஜினி அரசியலில் குதிக்கப்போகிறாராம் இதனால் ஏதும் மாற்றம் நிகழுமா? கள யதார்த்தம் என்ன?

வட மரைக்காயர் பதில்கள்

நவம்பரில் கமல் புதுக்கட்சி தொடங்கப்போகிறாராம்.டிசம்பரில் ரஜினி அரசியலில் குதிக்கப்போகிறாராம் இதனால் ஏதும் மாற்றம் நிகழுமா? கள யதார்த்தம் எப்படி உள்ளது மரைக்காயரே? ஆரிப்கான்,பம்மல். 

நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.கால் நூற்றாண்டுகாலமாக முன்னணிஸ்டார்களாக இருந்த இருவரும் தற்போது அரசவை விதூஷகர்கள் போல் உலாவருகிறார்கள். ஹீரோக்களே கோமாளிகளாக மாறிய வினோதம் நடக்கிறது.அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் அந்த அடிப்படையில் கமலையும்ரஜினியையும் வரவேற்போம் வருக வருக சிரிப்புக்கொத்துக்களை அள்ளி வழங்கி தமிழக மக்களை கிச்சு கிச்சு மூட்டுக.

2019ம் ஆண்டு தேர்தல் யாருக்கும் யாருக்கும் இடையிலான தேர்தலாக இருக்கும் என நினைக்கிறீர்கள் ? அல்தாப் அஹ்மது,வாணியம்பாடி.


நாடுபோகும் போக்கை பார்த்தால் வெகுஜனமக்களுக்கும் வெகுஜன விரோதிகளுக்கும் இடையிலான தேர்தலாக இருக்கப்போகிறது.டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சொல்வதைப்போல மோடிக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இடையேயான தேர்தலாக இருக்கும் என்கிறார். அது தான் நாளை நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த ஆட்சி குறித்த அச்சம் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் வியாபித்துள்ளது. மக்களின் அச்சத்தை போக்கும் விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது.


2019ல் மக்கள் போருக்கு புறப்படுவார்கள் மக்களுக்கும் ஆள்வோருக்கும் இடையிலான போராக இருக்கும் மக்கள் உண்ணும் உணவை கைவிட்டாலும் விடுவார்களே தவிர சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் ஆட்சி குறித்த அச்சம் முஸ்லிம்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.


நாடு முழுவதும் வணிகர்கள்,தொழிலதிபர்கள்,பங்குசந்தை என ஒவ்வொரு துறையிலும் இந்த அச்சம் படர்ந்துள்ளது.முழுநாடும் இப்போது கண்காணிப்பு வளையத்தில் இதுவரை இல்லாத அளவு ரெய்டு ராஜ்ஜியம் வர்த்தகர்களிடையே அச்சத்தை விதைத்துள்ளது என்றார்அர்விந்த் கெஜ்ரிவால்.இந்த கனல் உரையை கெஜ்ரிவால் ஆற்றிய இடம் எது தெரியுமா ? டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி எழுதிய டைடிங்ஸ் ஆப்ட்ரபிள் டைம்ஸ் என்ற நூல் வெளியீட்டுவிழாவில் காங்கிரசின் மணீஷ் திவாரி,மற்றும் மோடியை அண்மைக்காலமாக வறுத்தெடுக்கும் பாஜக மூத்த தலைவரும் வாஜ்பாய் காலத்திய நிதி அமைச்சருமான யஷ் வந் சின்ஹா வும் கலந்து கொண்ட விழாவில் நம்ப கெஜ்ரி எகிறி அடித்திருக்கிறார்.சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் அணி சேர்ந்தால் மகிழ்ச்சி தான்.


உண்மையில் உங்களை ரத்தம் கொதிக்க வைத்த சம்பவம் என்ன? எம்.இப்ராஹீம், சதுரங்கபட்டணம்

சில மாதங்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் வறட்சியினால், வறுமையினால் வாடிய விவசாய பெருமக்கள் தமது கோரிக்கைகளுக்காக போராடியபோது பாஜக அரசின் துப்பாக்கிகள் அந்த அப்பாவிகளின் இதயங்களை குறிவைத்தது.

5விவசாயிகள் காவல்துறைனரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடே அதிர்ச்சியில் மூழ்கிய இந்த சம்பவம் குறித்த விசாரணையில் அரசும் காவல்துறையும் சரமாரியாக பொய்யுரைத்தன. திகம்கர் காவல்நிலையத்திற்கு இழுத்து சென்று கடுமையாக உதைத்து மூர்க்கத்தனமாக தாக்கினர். எங்கள்ஆடைகளை கழற்றவிடமாட்டோம் எனது உள்ளாடையில் ஓட்டை உள்ளது என கெஞ்சியும் அந்த 40 வயது விவசாயியை நிர்வாணமாக ஓடுடா என விரட்டியும் தீவிரவாதிகள் என ஏசியும் இருக்கின்றனர். பலரை போராட்டத்தில் கலந்து கொள்ளாதவராக இருந்தும் அடித்து உதைத்து உள்ளனர்.

11 உயிர்களுக்காக உழைக்கும் 33வயது அமோல்சிங் நாங்கள் கட்டியிருந்த சமயம் தொடர்பான கயிறுகளைக்கூட அறுத்து எறிந்துள்ளனர். எல்லோரையும் கடுமையாக தாக்கியுள்ளனர் அத்தனையும் செய்துவிட்டு விவசாயிகளை நாடகம் ஆடுகின்றனர் என்று களங்கப்படுத்துகின்றனர் எங்கள் துயரங்களை எங்கள் காயங்கள் பேசும் என்கிறார் பால்வான் என்ற விவசாயி மனசு வெறுத்துப்போன நிகழ்வு.

டெங்கு நோயின் தீவிரம் தமிழகத்தை பாடாய்படுத்துகிறதே இதற்கு தீர்வே இல்லையா ? எம்.சலீம்கான்,பல்லாவரம்.

தமிழக மக்களை கொசுக்களை போல் நடத்தும் மத்திய பாஜகவின் பினாமி ஆட்சியில் டெங்கு நோயின் கோர தாண்டவம் மக்களை வதைக்கிறது. ஏடிஎம்கே மோடிஎம்கே யாக மாறியதில் இருந்து தமிழக மக்களின் நிலைமை யோகியின் உபியை போல மாறி விட்டது கோரக்பூரில் உயிர் காற்று பற்றாக்குறையால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கையை தமிழக டெங்கு நோயின் பலிகள் தாண்டிவிட்டன.

டெங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து அரசின்புள்ளிவிபரமும் உண்மை நிலவரத்திற்கும் உள்ள வித்தியாசம் மலைக்க வைக்கிறது.முதல் அமைச்சரின் மாவட்டமான சேலம் டெங்கு மயான பூமியாக மாறி விட்டது மேற்கு மாவட்டங்ககளும் டெல்டா மாவட்டங்களும் என்ன செய்வது என தெரியாமல் கதிகலங்கி தவிக்கின்றன. ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் மத்திய அரசால் கோடிக்கணக்கில் நிதி வழங்கப்படும் திட்டமாகும் ஆனால் அதனை முழுமையாக அரசு செயல்படுத்தவில்லை.. 5000 மக்கள் தொகைக்கு ஒருசுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்று 25000 பேருக்கு கூட ஒரு சுகாதாரா ஆய்வாளர் கூட இல்லை.

சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களை நிரப்பாமல் நோயின் கொடூரத்தை எதிர்த்து எப்படி போராட முடியும்.உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் ஆண்டுதோறும் வரவேண்டிய 4000 கோடி ரூபாய் மத்திய நிதி கோட்டை விடப்படுகிறது.உள்ளாட்சி கட்டமைப்புகள் செயல்படாமல்,குக்கிராமங்கள் வரை அரசின் நடவடிக்கை எப்படி செயல்பட முடியும்.இவர்கள் பதவி சண்டைக்கு நடுவே பலியாவது அப்பாவி மக்களின் உயிர்கள் தான்.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமுமுக உடனடியாக களத்தில் இறங்கி மக்களின் துயர் நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசுக்கு பதிலாக தமுமுக செய்யும் பணிகள் மக்களின் துயரத்தை நீக்கி சற்றே ஆறுதலை வழங்கி வருவதை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டி வருகிறார்கள் டெங்கு பலிகளை தவிர்க்க மருத்துவ அவசர நிலையை அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும்.மெடிக்கல் எமெர்ஜென்சியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தக்கூடாது.