கிருஷ்ணசாமி பாஜக உறவால் அதிக நன்மை யாருக்கு கிட்டுவுக்கா, டவுசர் பார்ட்டிக்கா ?

வட மரைக்காயர் பதில்கள்

கிருஷ்ணசாமி பாஜக உறவால் அதிக நன்மை யாருக்கு கிட்டுவுக்கா, டவுசர் பார்ட்டிக்கா ? அ.தேவேந்திரன், கீழக்கரை.


உடனடி பலன் மருத்துவருக்கு, நீண்டகால லாபம் பாஜகவுக்கு, பின்னடைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலுக்கு.

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் அனிதா மறைவையட்டி வெறும் பொதுக் கூட்டத்துடன் முடித்துக் கொண்டுவிட்டதே இது சரியா? அஸ்மத்பாஷா, வாணியம்பாடி.


நீட் என்னும் சமூக அநீத அரக்கனுக்கு எதிராக பல்வேறு வடிவிலான போராட்டங்களை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நடத்தி விட்டன. அனிதாவின் உயிரிழப்பை தொடர்ந்து திமுக செயல்தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அனிதாவின் உயிரிழப்பிற்கு பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடியுமே பொறுப்பு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சாதாரண நிகழ்வாக கருதக் கூடாது.

மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அனிதா உயிரிழப்பிற்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசுகளை கண்டித்தும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரியும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும் தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் முதல் படியாக தான் திருச்சியில் மாநில தழுவிய அளவிலான பொதுக் கூட்டத்தை திருச்சியில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. திருச்சி பொதுக் கூட்டம் ஒரு தொடக்கம் தான். நிரந்தர விலக்கு வரும் வரையில் அடுத்தடுத்து போராட்டங்கள். மோடி எடப்பாடி அரசுகளை சூழும்.

நீட் உள்ளிட்ட இம்சை களுக்கு நிரந்தர தீர்வு என்ன? சப்ரீன் பாத்திமா, தேனி.

கல்வியை மத்தியபட்டியலில் இருந்து நீக்கி மாநில பட்டியலில் சேர்ப்பது மட்டுமே நிரந்தர தீர்வு. நீட் மட்டுமல்ல அது போன்ற எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்தும் விடுபட அதுதான் ஒரே வழி. 

அனிதா தற்கொலை உடனடி விளைவு? அ. சிராஜுதீன் நெய்வேலி

பாஜக அரசியல் எதிர்காலத்துக்கு வெட்டப்பட்ட சவக்குழி

ஆத்திரமடைய செய்த நிகழ்ச்சியாக எதனை குறிப்பிடுவீர்கள்? எம்.பஹீமுத்தீன், ஆம்பூர்.

பாலியல் குற்றங்கள் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாஜகவினருக்கு தான் முதலிடம் இரண்டாவது இடம் சிவசேனாவுக்கு ஒழுக்க மாண்புகளில் இவர்களது லட்சணம் சந்திசிரிக்க வைக்கிறது ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஒன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்கள். பாலியல் குற்றங்களில் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டால் சாதாரண தொண்டர்கள் என்ன செய்வார்கள் வன்முறைகள் வரம்பற்ற முறையில் ஈடுபடுகிறார்கள் இவர்கள் சாலைகளில் நடந்து சென்றாலே பிரியாணி அண்டாக்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை தொடர்ந்து ஒலிக்கிறது.