ஜெயலலிதா மீண்டும் உயிரோடு வந்துவிட்டால் (ஒரு கற்பனைக்காக) என்னவாகும்

வட மரைக்காயர் பதில்கள்

ஜெயலலிதா மீண்டும் உயிரோடு வந்துவிட்டால் (ஒரு கற்பனைக்காக) என்னவாகும் மரைக்காயரே? அனஸ் ரஹ்மான்,பாடி.

மோடி முதல் (எட) பாடி வரை கப்சிப் ஆகிவிடுவார்கள் . ஓ பி எஸ் முதல் எல்லா ஒசீ பீஸ்களும் மீண்டும் கார் சக்கரத்தின் கீழ் வாசம் செய்ய தொடங்கி விடுவார்கள் . டிடிவி டிவி கேமராக்களை பார்த்தாலே மயக்கமடைந்து விடுவார். ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் துரோகம் செய்த புள்ளிகளுக்கு கஞ்சா கேஸ் கன்பார்ம்.

யார் கண்டது ? இதில் எத்தனைபேர் புழல் சிறையில் கரண்ட் கம்பி கடிப்பார்களோ தெரியவில்லை. கமல்ஹாசன் முழுக்க வெளிநாட்டு படப்பிடிப்புகளில் இருப்பார். கருத்தாவது ஒன்றாவது. ரஜினிகாந்த் இமயமலையிலேயே நிரந்தர வாசம் செய்வார், சிஸ்டம் சரியில்லே சிஸ்டர் சரியில்லை என்ற டயலாக் எல்லாம் பழைய கிராமபோன் தட்டாகி விடும்.

ஓபிஎஸ் தன் தர்மயுத்ததிற்கு முடிவுரை எழுதிவிட்டாரா? அல்லது மீண்டும் தொடருமா? அனஸ்ரஹ்மான், சென்னை-60.

தர்மத்திற்காக யுத்தம் என்றார். தர்மம் போட்டாச்சு. இனி இவர் யுத்தம் என்ன சும்மா சத்தம் கூட போடமுடியாது முடிவுரையை அவர்களே எழுதிவிடுவார்கள்.

ரேஷன் கடைகள் மூடப்படும் என்ற அபாய எச்சரிக்கையால் மக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள் இந்த நிலை மாறுவதற்கு ஏதாவது வாய்ப்புள்ளதா ? சுடலைமணி,திருச்செந்தூர்.

நீங்கவேறு. நிலைமை மேலும் மேலும் மோசமடைவதற்கே வாய்ப்புகள் அதிகம் . வீட்டைவிட்டு வெளியே வரவே , வாகனங்கள் ஓட்டுவதற்கே கடும் கெடுபிடிகள் வரப்போகிறது என்ற சேதி உங்களுக்கு தெரியுமா?
மோடி அரசால் அண்மையில் கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் நாட்டில் வாழும் எண்ணற்ற ஏழை இளைஞர்களின் வாழ்வாதாரத்தை காவு வாங்க அழித்தொழிக்க காத்து கொண்டிருக்கிறது. இது உங்களுக்கு தெரியுமா? பள்ளி இறுதி வகுப்பை முடித்தபின் வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டில் கால்டாக்சிகளில் ஓட்டுநராக பணிகளில் அமர்ந்து குடும்பத்தை காப்பாற்றலாம் என நினைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வோடு விளையாடுகிறது இந்த வெகுஜன விரோத சட்டம். இதன்படி பொதுமக்கள் ஆர் டி ஓ விடம் டிரைவிங் லைசென்ஸ் பெறமுடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தான் பெற முடியும். அதேபோல் ரேஷன் கடைகளுக்கு விரைவில் மூடுவிழா நடக்க இருப்பதைப்போல ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள் என்ற டிரைவிங் ஸ்கூல்கள் மூடுவிழா காணப்படும் . டிரைவிங் ஸ்கூல்களுக்கு 1000 சதுர அடி நிலம் இருந்தால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இனி 10 ஏக்கர் நிலம் இருந்தால் மட்டுமே அனுமதியாம்.
இனி கார்ப்பரேட் மட்டுமே டிரைவிங் ஸ்கூல்கள் நடத்த முடியும். சிறு தொழில் முனைவோர்கள் நினைத்தால் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்த முடியும் என்ற நம்பிக்கை தகர்க்கப்பட்டிருக்கிறது. 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி எளிதில் வாங்கமுடியாது கார்ப்பரேட் நிர்ணயிக்கும் கட்டணமே இறுதியானது, அரசு பஸ்கள் ரத்து செய்யப்படும் அதுமட்டுமல்ல ஆட்டோக்கள் தனியார் பேருந்துகள் கூட கார்ப்பரேட்டுக்களால் நடத்தப்படும். அதற்குத்தான் இந்த சட்டமே கொண்டு வரப்பட்டுள்ளது. வாகனங்கள் பழுதானால் கார்பரேட்டுகளிடம் தான் செல்லவேண்டும் . ரோட்டோர மெக்கானிக்குகள் சோற்றிலும் மண். ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்கவேண்டும் தொலைந்து போனால் புதிதாக வாங்குவது குதிரை கொம்பு வரப்போகும் நாட்கள் சாமானியர்களுக்கு அச்சே தீன் அல்ல. ஆபத்து தின்.