இந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்?

வட மரைக்காயர் பதில்கள்

இந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்? சாரலெஸ் பெர்னாண்டோ, திருச்செந்தூர்.

 வெகுஜன மக்களை,   உழைக்கும் வர்க்கத்தினரை  எப்படியாவது  கொச்சைப்படுத்துவதே அவாள்களின் வாடிக்கையாகும் . இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு  பிறகு  தமிழகத்தில் அவாள்களின் ஆதிக்கம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும்  அரசியல் அரங்கிலும்  மெல்ல மெல்ல  மங்க தொடங்கியது. உயர் கல்வி கற்ற தமிழர்கள் ஆங்கிலத்தில்  கற்று தேர்ந்தனர்.

ஐ ஏ எஸ்  உள்ளிட்ட ஆட்சி  பணித்துறைகளிலும் கூட  தமிழர்கள்  அதிகம் தேர்வு பெற்று கோலோச்சினர்   இனி நமது பருப்பு இனி இங்கு வேகாது என்று முடிவு கட்டி  தமிழர்களை  கரித்து கொட்டுவதையே முழு நேர தொழிலாக கொண்டலையும்  அவாள்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. அது ஆச்சு 50 ஆண்டுகள் . திராவிட ஆட்சிகள்,  கட்சிகள்  கொடுத்த அடியை அவர்களால் மறக்க முடியாமல் அவ்வப்போது அவர்கள் சற்று மூக்கை சிந்தி அழுகுணி ஆட்டம் ஆடுவார்கள் .விட்டுத்தள்ளுங்கள். இவரது சின்ன மாமனார் கமல் இஸ்லாமிய கூட்டமைப்பை  அமெரிக்காவில்  இருந்து  கொண்டு சிறு குழு என்றார் .

இவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில்  சிறு  குழு என்கிறார். பாவம் தமிழர்கள் அவர் படங்களை ஓட  செய்யாமல்  தியேட்டரை விட்டே ஓடவைத்தால் புலம்பாமல் என்ன செய்வார் ? 

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.