திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் கைவிடக் கோரி போராட்டம்

மமக போராட்டங்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே நிறுத்த கோரி தடையை மீறி பேரணி ஏப்ரல் 1ம் தேதி 2017ல் திருவாரூரில் காலை 10 மணியளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே நிறுத்த கோரி திருவாரூர் மாவட்டத்தின் நீர்நில அமைப்பு மற்றும் வணிகர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி தராததால் தடையை மீறி நடைப்பெற்ற கோரிக்கை பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்டன உரையாற்றி கைதானார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா, தமுமுக மாவட்ட செயலாளர் பாஜூல் ஹக் மமக மாவட்ட செயலாளர் தீன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்களும்  கலந்துக்கொண்டு கைதாயினர். ----நிர்வாகிகளுக்கான நல்லொழுக்க பயிற்சி -ஊட்டி நீலகிரி மாவட்ட தமுமுக சார்பாக மாவட்ட நகர கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நல்லொழுக்க பயிற்சி முகாம் மார்ச் 30 அன்று நடைபெற்றது. இதில் தமுமுக மாநில துணைத் தலைவர் மௌலவி ஜே.எஸ்.ரிபாயி, தமுமுக மாநில செயலாளர் கோவை உமர்,மிறிறி மாநில பொருலாளர் கோவை சாதிக் அலி, தலைமை கழக பேச்சாளர் கோவை முஜிப் ஆகியோர் வகுப்பு நடத்தினர்.

 

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.