4 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாமிரபரணியில் நீர் பற்றாக்குறை காரணமாக ஆற்றில் இருந்து, எடுக்கப்பட்ட தண்ணீரை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கோக் பெப்சி குளிர் பான ஆலைகளுக்கு வழங்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன், தாமிரபரணி நதியின் உபரி நீரை மட்டுமே பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதால் நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற அறிக்கையின் விளைவாக தாமிரபரணி நதி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்க கூடாது எனும் தனது இடைக்கால தீர்ப்பை உயர்நீதி மன்றம் விளக்கி கொண்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே நிறுத்த கோரி தடையை மீறி பேரணி ஏப்ரல் 1ம் தேதி 2017ல் திருவாரூரில் காலை 10 மணியளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே நிறுத்த கோரி திருவாரூர் மாவட்டத்தின் நீர்நில அமைப்பு மற்றும் வணிகர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி தராததால் தடையை மீறி நடைப்பெற்ற கோரிக்கை பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்டன உரையாற்றி கைதானார்.

பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பு அணை கட்டும் கேரள அரசை கண்டித்து மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது.  

கதிர்வீச்சு சிகிச்சை மருத்துவ மனை   கோரி  கல்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.