வரலாற்றுச் சிறப்புமிகுந்த சென்னை மதரஸே யே ஆசம் பள்ளியை முஸ்லிம் சமூக கல்வி நிறுவங்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

சென்னையில் சுமார் 165 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதரஸே யே ஆசம் பள்ளியாகும். இந்தப் பள்ளிக்கூடம் கடந்த ஒரு சில ஆண்டுகளாக உரியப் பராமரிப்பின்றி வருகிறது.

மேற்கத்திய கல்வியை போதிப்பதற்காக ஆற்காடு நவாபு சென்னையின் இதய பகுதியில் உள்ள நிலங்களை அரசிடம் ஒப்படைத்தார். அந்த காலக்கட்டத்தில் மேற்கத்திய கல்வியை போதிக்கும் உரிமை அரசிடம் மட்டுமே இருந்ததால் இந்த நிலம் அரசுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பள்ளிக்கூடம் கடந்த ஒரு சில ஆண்டுகளாக உரியப் பராமரிப்பின்றி வருகிறது. மழையின் காரணமாக பள்ளிக் கட்டடம் இடிந்து விழுவதும், அதனால் சேதம் ஏற்படுவதும் வாடிக்கையாகி உள்ளது.

பள்ளியின் இந்த நிலைக்குத் தமிழக அரசும், பள்ளிக்கல்வி துறையும் இப்பள்ளியின் பராமரிப்பில் அலட்சியம் செலுத்தி வருவதே காரணமாக கருதப்படுகிறது. வெளி மற்றும் உள்கட்டமைப்பு விஷயங்களில் தமிழக அரசு இப்பள்ளியைப் புறக்கணித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்பள்ளிக் கட்டிடத்தின் முன் பகுதியின் வகுப்பறைகளில் ஒரு கூரை விழுந்தது. இதனால் இக்கட்டத்தின் உள்ள வகுப்புறைகளை பயன்படுத்தாமல் அருகே உள்ள கட்டத்திலும், வெட்ட வெளியிலும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் பாழடைந்த நிலையைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் ஆண்டுதோறும் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றல் ஆகும் சூழல் நிலவிவருகிறது. பாதுகாப்பற்ற கட்டங்களினால் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

இதனிடையே சமீபத்தில் இப்பள்ளியை ஆய்வுச் செய்ய வந்த தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் இந்த வளாகத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது உண்மையெனில் எந்த நோக்கத்திற்காக இந்த இடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டதோ அது பாழ்படும் நிலையை ஏற்படும்.

எனவே, பழைமையவாய்ந்த பராமரிய சின்னமான மதரஸே யே ஆசம் பள்ளிக்கூடத்தின் உள்மட்டும், வெளிகட்டமைப்புகளை சீரமைத்து, சிறந்த முறையில் நடத்திட அப்பள்ளிக்கூடத்தை தகுதிவாய்ந்த முஸ்லிம் சிறுபான்மையின நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.