பொறையார் போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வறை விபத்து 8 பேர் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் !!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நாகை மாவட்டம், பொறையார் அரசு போக்குவரத்து பணிமனைக் கழக ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறையின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட இந்த ஓய்வறை கட்டடம், வலுவிழந்து இருந்தபோதும், அதனை மராமத்து செய்யாமல் அக்கட்டடத்தை ஓய்வறையாக பயன்படுத்த அனுமதித்திருப்பது வேதனைக்குரியது.

மரணமடைந்துள்ளவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் நடைபெற்றுள்ள இந்த விபத்திற்கு பொறுப்பேற்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.