ராகுல்காந்தி கார் மீது தாக்குதல்: மமக கண்டனம்

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளி யிடும் அறிக்கை:

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றிருந்தபோது,அவரது கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ராகுல் காந்தி கார் மீது படத்தவறி அவரது பாதுகாப்பு வாகனத்தில் மீது விழுந்ததில் அவரது பாதுகாப்பு அதிகாரி சிறுகாயங்களுடன் தப்பினர்.


இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குஜராத் மாநில பாஜக நிர்வாகிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.


மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், பேச்சுரிமை மற்றும் உயிர் வாழ்வதற்கான உரிமைகள் மீதான தாக்குதல் என அனைத்து தரப்பிலும் மக்கள் மீது நாடு தழுவிய அளவில் பாஜக ஆட்சியில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சாதாரண குடிமக்கள் முதல் நாட்டின் பிரதான எதிர்கட்சித் தலைவர் உட்பட பாஜக ஆட்சியில் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது இந்த ஆட்சியின் நோக்கம் நாட்டின் வளர்ச்சி அல்ல வன்செயல்களின் வளர்ச்சி என்ற நிலையை உரு வாக்கி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகமும், சட்டம் ஒழுங்கும் சீர்குலையும் நிலைக்கு தள்ளப் படும்.


எனவே, மத்திய அரசு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்து அவரது கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இத்தாக்குதலுக்கு பொறுப் பேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.