நாட்டின் எதார்த்த நிலையை பிரதிபலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும்

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை


உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த  நீதிபதிகள் 4 பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும் வழக்கு பகிர்ந்தளிப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.


இதுவரை நீதித்துறை வரலாற்றில் நிகழாத நிகழ்வாக உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிபதிகள் செல்லமேஸ்வர், குஜோசப் குரியன், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு இச்செய்தியைத் தெரிவித்துள்ளனர்.


உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதியின் செயல்பாடு சரியில்லை என்றும் நீதித்துறையில் உள்ள குறைகளை ஏற்கெனவே அவரிடம் கொண்டு சென்றும் பயனில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


சில ஆண்டுகளாக நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகம் தழைந்தோங்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த எதார்த்த நிலையைத்தான்  அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளார், நீதிபதிகள் முதல்முறையாக இதுபோன்ற தமக்கு மேல் உள்ள அதிகாரவர்கத்தின் ஒருதலைப் பட்ச செயல்பாடுகளை விமர்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. நீதித்துறையில் ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக நீதிபதிகள் மக்களை நாடியுள்ளனர். நீதிபதிகளின் இந்த நடவடிக்கையை இந்தியர்கள் என்ற முறையில் அனைவரும் பாராட்ட வேண்டும்.

எனவே, உச்சநீதிமன்ற நிதிபதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள தலைமை நீதிபதியை மத்திய அரசு உடனே  நாடாளுமன்றத்தில கண்டன தீர்மானம் கொண்டு வந்து Impeachment முறையில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கத் தவறினால், மோடி தலைமையிலான அரசுக்கும் நாட்டின் நடக்கும் ஜனநாயக படுகொலைகளின் சரிபங்கு உண்டு என்பது மீண்டும் உறுதியாகிவிடும்  என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.