நந்தினி வீட்டிற்கு சென்று பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆறுதல்

மமக செய்திகள்

பாலியில் கூட்டு பலத்காரத்திற்கு உள்ளாக்கி கொடூரமாக கொல்லப்ட்ட நந்தினியின குடும்பத்தினரை அவர்கள் இல்லத்தில் சந்தித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார்.

அவருடன் அரியலூர் மாவட்ட தமுமுக செயலாளர் சாகுல் ஹமீது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சவுக்கத், திருச்சி தெற்கு மாவட்ட மமக செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மண்டலப் பொறுப்பாளர் கிட்டுவும் உடன் வந்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா குஜராத்தில் முஸ்லிம் பெண்களின் வயிற்றில் உள்ள கருவை வெளியில் எடுத்து தாயும் சேயும் கொல்லப்பட்டனர். அதே பாணியில் நந்தினி கொல்லப்பட்டது  தமிழகத் திற்கே தலைகுனிவாக உள்ளது. நந்தினி படுகொலைக்கு திட்டமிட்டு உதவிய அரியலூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராஜேசேகர் இது வரை விசாரணைக்கு கூட அழைக்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நந்தினி படுகொலை வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு  மாற்றப்பட வேண்டும். 

அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

---

யார் இந்த ராஜசேகர்?

நந்தினி படுகொலைக்கு உறுதுணையாக இருந்த ராஜசேகர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

அண்மையில் ஒரு வார இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேறுள்ள சங் பரிவார் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவரின் , மிகப் பெரிய சப்போர்ட் ராஜசேகருக்கு இருக்கிறது.  

ராஜசேகருக்கு சிமெண்ட் ஆலையில் ஒப்பந்தகாரர் வாய்ப்பை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். அதேபோல், முக்கியக் குற்றவாளியான மணிகண்டனுக்கு ராஜசேகர், சப் காண்ட்ராக்ட் பணி எடுத்துக் கொடுத்துள்ளார்.

மேலும் ராஜசேகர் இந்து முன்னணியில் பொறுப்பேற்றதிலிருந்து, அரியலூர் மாவட்டத்தில் திட்டமிட்டு சிறுபான்மையினர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மஸ்ஜிதுகள், தேவாலயங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தி, சமய நல்லிணக்கத்தை கெடுத்து வருவதாக பல்வேறு புகார்கள் உள்ளது.

நந்தினி கொலை வழக்கில் மண்கண்டனுக்கு மிக உறுதுணையாக இருந்துள்ளார் ராஜசேகர். அவர்மீது குடும்பத்தினர் புகார் கொடுத்தும் போலீசார், ராஜசேகரை அழைத்து இதுவரை விசாரணை கூட நடத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.