வர்தா புயல் களத்தில் தமுமுக மமக தொண்டர்கள்

மமக செய்திகள்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் கடந்த திங்கள் கிழமை அதி தீவிர புயலாக மாறி சென்னைநகர் மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கோரத்தாண்டவமாடி 3மாவட் டங்களிலும் லட்சக் கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தன.

சாலைகளிலும் தெருக்களிலும் வேறோடு சாய்ந்த மரங்களும் அதன் கிளைகளும், கட்டிடங்கள் மீதும் வாகனங்கள் மீதும் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

புயலைக் கண்டு மக்கள் நடுங்கிக் கொண்டிருந்த, வேலையில் வழக்கம் போல் தமுமுக பேரிடர் மீட்புக் குழு சென்னை நகர், புறநகர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் புயலை நோக்கி எதிர் கொண்டவர்களாக பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் தமுமுக மமக பேரிடர் மீட்புக்குழு மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டது.பல பகுதிகளிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.மத்திய,வட சென்னை பகுதியில் மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் சகோ கலீல் ரஹ்மான் தலைமையில் செயல்பட்ட குழு காலை 7 மணியிலிருந்து தனது பணிகளை துவக்கினார்கள்.

புளியந்தோப்பு பகுதியில் சாலையோரம் விழுந்தகிடந்த மரங்கள் அப்புறபடுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழி கிடைக்கச் செய்தனர்.

மூர்மார்கட் பகுதியில் கடைகளின் மீது விழுந்து கிடந்த மரங்களை அறுத்து எடுத்து எடுத்து வழிகள் சீர் செய்து கொடுக்கப்பட்டன. கழிவுநீர் கால்வாய் அடைபட்டு கிடந்ததை சரி செய்து கழிவு நீர் வெளியேற்ற வகை செய்யப்பட்டன. நோயாளிகளுக்கு நிலையஇயக்குனருடன் இணைந்து பிரட் கொடுக்கப்பட்டன.மருத்துவமனையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறபடுத்தப் பட்டன.நோயாளிகள் ,பொதுமக்கள் மருத்துவர்கள், அனைவரும் செல்லும் வகையில் பாதைகள் சரிசெய்யப்பட்டன. 

ராஜாஜி சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி போக்குவரத்து சரி செய்து  கொடுக்கப்பட்டது. 

மத்திய சென்னை தமுமுக மாவட்டச் செயலாளர் தாஹா நவீன் தலைமையில் வில்லிவாக்கம், சிட்கோ நகர் மற்றும் பாரதி நகர் பகுதிகளில்  பொது பொதுமக்களுக்கு இடையூராக கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வழிகள் சீர் செய்து கொடுக்கப்பட்டன. 

மத்திய சென்னை மமக மாவட்டச் செயலாளர் ரசூல் தலைமையில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்திக் கொடுக்கப்பட்டது.

தாம்பரம் பகுதிகளில், மாநிலச் செயலாளர் யாக்கூப் தலைமையில், கிழக்குத் தாம்பரம், கிருஷ்னா நகர், பெருங்குளத்தூர், நிஷிஜி ரோடு, தாம்பரம் ஜமாத் முஸ்லிம் மையவாடி போன்ற பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் தமுமுக மமக பேரிடர் மீட்புக் குழுவின் மூலம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. 

தாம்பரம் ஜெயின் கோவிலிலும், பாத்திமா சர்ச்சிலும் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுதுமாறு அவர்கள், தமுமுகவினரிடம்  வைத்த கோரிக்கையை ஏற்று அங்கு விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். 

இவைகள் அல்லாது நகரின் அனைத்து பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி மக்களுக்கு போக்குவரத்து வழிகளை சீர் செய்து கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். 

பேரிடர் காலங்களில் மக்கள் தொண்டாற்றுவதில் தமுமுக மமக தொண்டர்கள் எந்த நிலையிலும் சலைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். 

சமூகத்தளங்களில் மாற்று மத சகோதரர்களின் பாராட்டுக்களையும் பார்க்க முடிந்தது.