மனிதநேய போராளிக்கான மக்கள் விருது

மமக செய்திகள்

செங்கல்பட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ  மறைமாவட்டத்தின் கிறிஸ்தவ ஒன்றிணைப்பு மற்றும் பல்சமய உரையாடல் இயக்கம் இணைந்து நடத்திய சகோதரத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் பல்சமயக் கருத்தரங்கம் 21.12.2016 அன்று தாம்பரம் பாத்திமா அன்னை தேவாலய வளாகத்தில் நடைபெற்றது.

கிறிஸ்தவ ஒன்றிணைப்பு மற்றும் பல்சமய உரையாடல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை. ஜே.மைக்கேல் அலெக்சாண்டர் மிகச்சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் அ.நீதிநாதன் தலைமையில் (ணிசிமி) திருச்சபைகளின் பேராயர் எஸ்ரா. சற்குணம் (சிஷிமி) ஆயர்களின் பணிகர்கனை வாரியம் அருட்திரு.அசோக்குமார் முன்னிலையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

காங்கிரஸ் ஆட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினருமான, ச.பீட்டர் அல்போன்ஸ்.அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ரபி பெர்ணார்ட்,நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஹ.வசந்தகுமார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீகத் தொண்டியக் தலைவர் கோ.ப.அன்பழகன் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலகணையத் தலைவர் சுதீர்லோதா ஜெயின் அருட்தந்தை செல்வராஜ்,கனவாசிரியர் இயக்கம் தாமரை கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில்,இஸ்லாமியர் பார்வையில் ஈசாநபிகள் என்ற தலைப்பில் தமுமுக மாநில செயலாளர் பேரா,ஹாஜாகனி ஆற்றிய உரை பெரும் வரவேற்பை பெற்றது.

 

முதல் ஹிஜ்ரத்தின் போது கிறிஸ்தவ நஜ்சொஷி மன்னரின்  அவையில் நபித்தோழர்கள் சார்பில் உரையாற்றிய,ஜாஃபர்&பின்&அபிதாலிப் (ரலி) அவர்கள் கிறிஸ்தவ மன்னரின் சபையில் இஸ்லாத்தையும்,ஈசா நபி குறித்த நிலைபாட்டையும் துணிவோடு எடுத்து வைத்ததையும், அதை கிறிஸ்தவ மன்னர் கனிவோடு ஏற்றதையும் குறிப்பிட்ட பேரா.ஹாஜாகனி லுங்கிகளும்,அங்கிகளும் சங்கிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்த போது பலத்த வரவேற்பு கிட்டியது. இவ்விழாவில் டிச&2015 மழைவெள்ளப் பேரழிவின் போது தமுமுக ஆற்றிய மகத்தான மனிதநேயச் சேவைகளைப் பாராட்டி தாம்பரத்தில் அதைச் சிறப்பாக ஒருங்கிணைத்த  மமக வின் அமைப்பு செயலாளர் சகோ. எம்.யாகூப்பிற்கு மானுடத் தோழமை விருது வழங்கப்பட்டது.

 

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தலைவர் சுதீர்லோதா ஜெயின் ரூபி பில்டர்ஸ் ரூபி.ரா.மனோகர் ஆகியோருக்கும் சமூக சேவைக்கான மானுடத் தோழமை விருது வழங்கப்பட்டது. தமுமுகவின் தொண்டுகளை மிகச் சிறந்த குறுப்படமாக தயாரித்து, விருது வழங்குவதற்கு முன்னதாக தேவாலயத்தில் திரையிட்டது மிகவும் நெகிழ்ச்சியளித்தது. தொடர்ந்து மக்கள் பணியாற்ற இவ்விருது ஓர் ஊக்கமாக அமையும்.