காவிரி விடயத்தில் கை விரித்த மத்திய அரசின் மோசடி

புத்தகப் பூங்கா

காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய பா.ஜ.க அரசு எம்மாதிரியான நிலைப்பாடுகளை எடுத்து தமிழகத்தை வஞ்சித்துள்ளது என்பதனை சற்றே விரிவாக பதிவு செய்துள்ளது”காவிரி:பா.ஜ.க வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?” எனும் நூல். மொத்தம் 8கட்டுரைகள் பல்வேறு உபத்தலைப்புகளில் தமக்கே உரித்தான பகடி எழுத்துக்களினால் விளாசியுள்ளனர் ம.க.இ.க தோழர்கள்.

காவிரி பிரச்சனையில் தொடக்கம் முதல் தற்காலம் வரையிலான நிகழ்வுகள் அலசப்பட்டுள்ளன.கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் தொடங்கும் காவிரி உலகமயமாக்களுக்கு பிறகு வந்த 25 ஆண்டுகளில் காடுகள் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் டீ,காப்பி,ரப்பர்,தேக்கு தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் இம்மலையில் நீர்நிலைகள் அழிந்துகாவிரி வரண்டு போனதற்கு வித்திடப்பட்டது.கூடுதல் தகவலாக காவிரியிலிருந்து பெங்களூரு நகரத்திற்கு ஒரு நாளைக்கு 140 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. அதில் 52 சதவீதம் நீர் வீணாக்கப்படுகிறது.அதவது 72 கோடி லிட்டர் தண்ணீரை வீணடிக்கும் மெட்ரோ நகரங்களில் பெங்களூரு இரண்டாம் இடம் வகிக்கிறது.


நாற்பது ஆண்டுகளாக இப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்க்கு மத்தியஅரசே காரணம்.தேசிய இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு தமிழகத்திற்க்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. காரணம் தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபும்,திராவிட இயக்கமும் தான் . கர்நாடகாவில் காவிரி பிரச்சினைகளின் போது அப்பாவி விவசாயிகள் யாரும் தமிழர்களைத் தாக்கவில்லை. பேருந்தையும் கொளுத்தவில்லை.


இனவெறி பிடித்து கலவரத்தை தூண்டியே ஆட்சியை பிடிக்கும் கொள்கை கொண்ட பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் எனும் கருங்காலிகள்தான் கூலிக்கு ஆள் பிடித்து வந்து இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதனை விளக்கும் கட்டுரைகள் இந்நூலை அலங்கரிக்கினறன.


தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார்? தமிழக நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் யார்? ஜப்பானிடமிருந்து வாங்கிய 400 கோடி கடனுக்கு கணக்கு காட்டுவதற்க்காக ஓரிரு ஏரி குளங்களின் கரைகளை மட்டும் உயர்த்திவிட்டு தமிழக அரசு செயல்படாமல் உள்ளது என்பதனையும் விவரிக்கிறது இந்நூல்.அண்டை நாடான பாகிஸ்தனுடன் போர் நிலவும் போது வாகா எல்லை வழியாக 185 லாரிகளில் சரக்குகள் வந்து போனது .தமிழக-கர்நாடக் எல்லையில் தமிழக பேருந்துகளையோ லாரிகளையோ அனுமதிக்கவில்லை என்பதனை ஒப்பிட்டு கட்டுரைகள் நீள்கிறது. தடுப்பவர்கள் கன்னட அமைப்பு எனும் போர்வையில் உலவும் பா..ஜ.க காலிகள். ஒருமைப்பாடு பேசும் இந்த பிரிவினைவாதிகள் பாகிஸ்தானை காட்டிலும் கேவலமாக தமிழ்நட்டை நடத்துகின்றனர். என்று சாட்டையை சுழற்றுகின்றனர். காவிரி பிரச்சினையில் தி இந்து தமிழில் சமஸ் எழுதிய கட்டுரையை கடுமையாக விமர்சிக்கும் ஆக்கமும் உள்ளது.


தமிழர்களுக்கான பங்கு 58% நீர் அதனை பெற்றுத்தர மறுக்கும் மத்திய மாநில அரசுகளின் தகிடுதத்தங்களை தோளுரிக்கும் நல்ல நூல்.