அர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:

புத்தகப் பூங்கா

அர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:


தமிழ்நாட்டின் கல்விப்புலம் நீண்ட நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. சுதந்திரத்திற்க்கு முன்பும்,பின்பும், இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம், காமராசரின் புதிய பள்ளிகள்திறப்பு, தொடர்ச்சியாக திராவிட இயக்க பின்னனியில் தமிழ்நாட்டு கல்வி அடித்தட்டு மக்களுக்கானதாக மாறிய வரலாறு பலராலும் கவனிக்கப்படாததாக மாற்றப்பட்டுக் கொண்டு வருகிறது.


நீட் தேர்வு பிரச்சனைக்குப் பின் முழுக்க முழுக்க கல்வி என் பது மேல்தட்டு அதிகார வர்கத்தின் காலடியில் குவிக் கப்பட்டிருக்கிறது. 1950 லிருந்து 1960 வரையிலான காலத்தில் ஒரு கிராமப்புற பள்ளியின் செயல்பாட்டை, களப்பணியை,சமூக கட்டமைப்பை விரிவாக விவரிக்கிறது பா.செயப்பிரகாசம் எழுதிய பள்ளிக்கூடம் எனும் நாவல். 13 சிறுகதை தொகுதிகள்,15 கட்டுரைத் நூல்கள்,2 கவிதை நூல்கள் என எழுதி குவித்துள்ள பா.செயப் பிரகாசத்திற்க்கு இது முதல் நாவல் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தின் ஒரு கடை க்கோடி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பக்கத்து கிராமங்களுக்கு சைக்கிளில் பயணம் செய்து மாணவர்களை சேர்க்க கோரும் ஆசிரியர்கள் குழு,அந்த பள்ளிக்கு ஊர் முக்கியஸ்தர்கள் செய்யும் இடையூறு, பள்ளிக் குள்ளும், ஊர்களுக்குள்ளும் நிலவும் சாதிய பிரச்சனைகள், வர்க்க வேற்றுமைகள், பள்ளி மாணவர்களிடையே நிலவும் நட்பு, பாலின ஈர்ப்பு, தனித்திறமைகள் போன்றவை நாட்டுப்புற கலைகள் தொடர்பான அறிமுகம், ஆசிரியர்களுக்கு ஊர் பெரிய மனிதர்கள் கொடுக் கும் நெருக்கடிகள் என்று பள்ளிக் கூடத்தை பின்புலமாகக் கொண்டு நகர்கிறது இந்த நீண்ட நாவல்.


ஏனைய எல்லா நாவல் களிலிருந்து இந்த நாவல் தனித்துவமாக நிற்க மிக முக்கியமான காரணம் அப்துல் கனி எனும் தலைமை ஆசிரியர் கதாபாத் திரமே. திரைப்படங் களிலும், தமிழ் புனைவு இலக்கிய தளத்திலும் முஸ்லிம்களை தவறான சித்தரிப்புகள் வாயிலாக சிறுமை படுத்திவரும் இச்சூழலில் அப்துல் கனியை அர்ப்பணிப்போடு ஆசிரியப்பணி செய்யும் நல்ல நபராக சித்தரித்திருப்பதன் வாயிலாக பா.செயப்பிரகாசம் எழுத்தின் வழி சமூக நல்லிணக் கத்தை பேணி உள்ளார். புத்தகத்தின் தொடக்கத்திலேயே சமர்ப் பணம் என்று அப்துல் கனி, ஜான், முத்துராக்குகளுக்கு என்று பதித்து சமூக நல்லிணக்கத்தையும் பறைசாற்றுகிறார். நாவலில் முஸ்லிம் களுக்கும் ஏனைய சமூக மக்களுக்கும் இருக்கும் உறவு முறை சொல்லி அழைத்து மகிழும் பழக்கத்தை பதிவு செய்துள்ளார் பா.செயப்பிரகாசம்.


நாவல் முழுக்க நாட்டுப்புற சொலவடைகள்,பேச்சு வழக்குகள் நிறைந்து கிடக்கிறது.உவமைகளும்.உருவகங்கள் வாயிலாக வாசகர் களை அந்த கிராமத்திற்க்கே அழைத்து செல்கிறார். நாவலை வாசித்து முடித்தப்பின் தற் போதைய கல்விநிலை நமக்கு கிட்டிட நமது முன்னோர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதனை உணர முடிகிறது.”படைப்பாளி என்பவன் பழங்கால ஞானி போல் சமூகத்தின் மனசாட்சியாக இயங்குபவன்” என்பதனை தமது எழுத்தின் வழி நிறுவி உள்ளார்.


இந்நாவல் வாசிப்பிற்கு பின் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தனி மரியாதை கூடும் என்பதில் ஐயமில்லை.

பக்கங்கள்:344
விலை:ரூ 300
பள்ளிக்கூடம்
பா.செயப்பிரகாசம்,
வம்சி புக்ஸ்,
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை-606 601
தொடர்புக்கு:9445870995.