வரலாற்றில் மரைக்கப்பட்ட மாவீரனின் தியாக வரலாறு

புத்தகப் பூங்கா

இந்திய சுதந்திரப்போரின் வரலாறு பல வீரம் செரிந்த ஆளுமைகளை உள்ளடக்கியது.ஆனால் அந்த ஆளுமைகளின் தியாகங்கள் எழுத்தில் போதிய அளவு வார்க்கப்படாமல் எதிர்கால தலைமுறைக்கு தெரிவிக்கப் படாமலேயே மறைக்கப்படுகிறது.

போலிகள் வீரச்சரித்திரம் பேசியும் எழுதியும் வருகின்றனர்.தமிழகத்தில் விடுதலை வேள்வியை வார்த்தவர்களில் மருதநாயகம் எனும் கான்சாஹிப் மிக முக்கியமானவர்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே வெள்ளையர்களால் தூக்கிலப்பட்ட வீர மறவர் இவர்.


இறை பக்தியும்,வீரமும், ஆளுமையும் மிக்க தீரர் கான் சாஹிப் குறித்த நாட்டுப்புற பாடல்கள் மதுரைப் பகுதிகளில் மிகவும் பிரபலம்.தற்போது நாட்டார் வழக்கியல் மறைந்து வரும் நவீன மய சூழலில் அவரது வரலாறு எழுத்து வடிவில் பதிவு செய்தல் என்பது மிக அவசியமான ஒன்று.அதனை செவ்வனே மதுரையார் செய்துள்ளார்.கமலஹாசன் திரைப்படமாக முயற்சித்த பின்பு மருதநாயகத்தின் வரலாறு முழு வீச்சில் அனைவராலும் கவணிக்கப்பட்டது.


சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைக்கான முதல் கிளர்ச்சியை செய்தவரின் வரலாறை தொகுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று.மதுரையார் அதனை மிகுந்த சிரத்தையோடும் தேடலோடும் சேகரித்து வாசகர்களுக்கு படைத்துள்ளார்.நாடோடிப் பாடல்களில் மகத்தான மாவீரராக,குடிமக்களின் அன்புத் தலைவராக சித்தரிக்கப்பட்டிருப்ப தன் வாயிலாக கான்சாஹிப் அனைத்து சமூக மக்களின் ஏகோபித்த கதாநாயகனாக, செங்கோல் செலுத்திய வீரனாக வாழ்ந்திருக்கிறார் என்பதனை உணரமுடிகிறது.நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய மன்னர் கான் சாஹிப் என்றால் அது மிகையல்ல.


ஒரு நாவல் போல வரலாறு விறுவிறுப்பாக படைக்கப் பட்டிருக்கிறது.நல்ல அழகிய தமிழ் நடையில் வாசிப்போர் கிளர்ச்சி பெறும் வகையில் எழுதியிருப்பதல் வாயிலாக கான் சாஹிப் நம் மனக்கண் முன் நிழலாடிச் செல்கிறார்.வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனத்தை போல் சற்றும் குறைவில்லாமல் உணர்ச்சிப் பெருக்கோடு உரையாடல்கள் இந்நூலை அலங்கரிக்கிறது. மதுரையார் மருதநாயகத்தின் வரலாறை படைக்க பயண்படுத்திய குறிப்புதவி நூல்களின் பட்டியலே நம்மை பிரமிக்க வைக்கின்றன.நாடக காட்சி போல் வசனங்கள் சிறப்பாக எழுதப்பட்டுளளன.1998 ல் முதல் பதிப்பை கண்ட இந்நூல் 2017ல் மூன்றாம் பதிப்பை எட்டியுள்ளது.வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மகத்தான் மனிதனின் வீரம் செறிந்த சரித்திரத்தை உயிரோட்டமாக மதுரையார் பாராட்டுக்குறியவர்.கான்சாஹிப் குறித்து பல்வேறு வெளிவந்திருந்தாலும் இந் நூல் தனித்துவத்துடன் ஒளி வீசுகிறது.சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கான் சாஹிப் சரித்திரம் எழுத்துக்களால் வாழ வைக்கப்பட்டுள்ளது.

பக்கங்கள் 96 விலை ரூ:50
மாவீரர் மருதநாயகம்
ஆசிரியர்: மதுரையார்
மின்னல் பதிப்பகம்
28 ஙி, காமாட்சி புரம்,
மதுரை-625009
தொடர்புக்கு: 7373510786..