தலாக்: சர்ச்சைகளுக்கு சீரிய விளக்கம்

புத்தகப் பூங்கா

தற்போது உச்சநீதிமன்றம் தலாக் விடயத்தில் வழங்கிய தீர்ப்பிற்க்கு பிறகு இந்திய அளவில் இப்பிரச்சினை மீண்டும் பேசுபொருளாக மாறி உள்ளது.முத்தலாக் குறித்த சரியான புரிதல் பொது சமூகத்திற்கு ஏற்பட வழிவகுக்கும் நல்ல நூலாக அமைந்திருக்கிறது அமீர் ஜவ்ஹர் எழுதிய “தலாக் சர்ச்சையும் - விளக்கமும்” எனும் நூல்.

ஷரியத் சட்டத்தின் படி இஸ்லாம் வழங்கும் தலாக் முறை குறித்தும்,திருக்குர் ஆன் தலாக் குறித்து கூறும் சட்ட நெறிமுறைகளையும் விரிவாக விளக்குகிறார்.மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் தலாக் முறை ஒரே சமயத்தில் வழங்குவதால் விமர்சனத்திற்க்கு ஆட்படுகிறது. குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையிலும் மார்க்க விளக்கங்களை நமக்கு வழங்குகிறார். தற்போது நடைமுறையில் உள்ள இந்திய இஸ்லாமிய சட்டம் எந்த காலத்தில் இயற்றப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது என்பதனை வரலாற்று பின்னனியிலிருந்து வாசகர்களுக்கு விளக்குகிறார்.முஸ்லிம்களுக்கான தனிநபர் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை பட்டியலிடுகிறார்.


முத்தலாக் வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தை அனுகிய விதத்தையும்,அதற்கு முஸ்லிம் தனி நபர் சட்டவாரியம் பதில் மனு தாக்கல் செய்ததனையும் நடுநிலையோடு அணுகி வாசகர்களுக்கு விளக்குகிறார். இவ்விஷயத்தில் மத்திய அரசின் கயமைத்தனத்தை கடுமையாக சாடுகிறார்.”தலாக் நடைமுறை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியதில்லை.தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.நாட்டில் இருபாலருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சனையை அணுக வேண்டும்” என்ற மத்திய அரசின் பதில் மனு தாக்கல் செய்ததை விமர்சிக்கிறார். இந்து மத வேதங்களிலும், இதிகாசங்களிலும் விவாகரத்து பற்றிய செய்தியே இல்லை.இந்து விவாகரத்து சட்டம் என்ற ஒன்றை இயற்றி வைத்துக்கொண்டு குர் ஆனின் வழி சொல்லப்பட்ட தலாக் முறையை மதநம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியது இல்லை என்று கூறும் மோடி அரசின் மோசடியை நிறுவுகிறார்.திருமணத்தை பதிவு செய்வதிலும் கூட இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டு கிறார். இந்து சட்டத்தில் உள்ள அநியாயங்களை களைய வேண்டும் என்று வாய்திறக்காத பா.ஜ.க முஸ்லிம்களின் தனி நபர் சட்டத்தில் மட்டும் கை வைக்கத்துடிப்பதை வாசிப்பின் வழி உணரலாம்.


பாகப்பிரிவினையில் பெண் களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்தும் இந்து - முஸ்லிம் சமய சட்டங்களை ஒப்பாய்வு செய்து நடைமுறைக்கு உகந்த சட்டம் எது என்பதனை அரிய வைக்கிறார்.அரசியல் அமைப்பு சட்டத்தில் வழிகாட்டும் நெறிமுறையில் 44 வது பிரிவில் உள்ள பொதுசிவில் சட்டம் பிரச்சனையை பேசும் சங்பரிவாரங்கள் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்ற 47 வது பிரிவை பற்றி வாய்திறப்பதே இல்லை.தலாக் குறித்து திருகுர் ஆன் வசனங்களை பிற்சேர்க்கையில் இணைத்து இறைச்சட்டத்தின் ஒளியில் நின்று இப்பிரச்சனையை அலசும் விவாத நூல் இது.


பக்கம்: 40 விலை:ரூ20
தலாக் சர்ச்சையும்-விளக்கமும்
ஆசிரியர்: எஸ். அமீர் ஜவ்ஹர்,
வெளியீடு:சாஜிதா புக் செண்டர்,
248, தம்பு செட்டி தெரு, சென்னை-&1
9840977758


புத்தகப்பூங்கா பகுதியில் தங்கள் நூல் விமர்சனம் இடம்பெற கீழ்கண்ட முகவரிக்கு 2 புத்தகங்கள் அனுப்பவும். அனுப்பவேண்டிய முகவரி:
மக்கள் உரிமை எண்: 7 வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை&600 001.