நீட் (NEET) கூட்டாச்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது - ஏன்?

புத்தகப் பூங்கா

NEET (National Eligibility and Entrance Test  எனப்படுகிற அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு +2 தேர்வை வெற்றிகரமாக முடித்திருக்கும் தமிழக மாணவர்களில் மருத்துவம் படிக்க விருப்பமுள்ள மாணவர்களை குழப்பத்திலும், பதற்றத்திலும் நிலைப்படுத்தியுள்ளது.

 இந்த தேர்வு 07.05.2017 அன்று மத்திய அரசால் ( ஒரே நாடு ஒரே தேர்வு) என்று முன்மொழிக்கப்பட்ட முழக்கத்தை  அரங்கேற்றும் வகையில் நடத்தப்படவுள்ளது.

NEET  தேர்வின் வரலாற்று பின்புலத்தை உரிய தரவுகளோடு எளிய முறையில் விளக்கும் இந்நூல் தொடந்து நீட்டை பற்றியான போலி பிம்பத்தை அரிய உதவுகிறது. ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. அரிபரந்தாமன், பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, மற்றும் மருத்துவ, அரசியல் துறைகளின் சிறந்த ஆளுமைகளால் இயற்ற பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

ஏப்ரல் 11.2016 அன்று நீதிபதி அனில் தவே தலைமையியலான அமர்வு ‘நீட் தேர்வு’  எந்த தடையில்லாமல் தேசம் முழுவதும் நடைபெற வேண்டும் என தீர்பளித்தார். இந்த வழக்கை முன்னின்று நடத்தியது ‘சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அரக்கட்டளை. ஆர்.எஸ். எஸ்யின்  கல்ல பிள்ளைகளில் ஒன்றுதான் இந்த அமைப்பு. உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும்  மத்திய அரசின் திட்டத்தின் ஒரு செயல் தந்திரம் தான் நீட் என்ற வடிவம்.

 தரம், தகுதி  என்ற பெயரில்  தாழ்த்தப்பட்ட, சிறுப்பான்மையின, விளிம்பு நிலையில்  இருக்கும் மாணவர்களை  இந்த சமமற்ற ஆடுகளத்தில்  ஆடவிட்டு அவர்களை ஓரம்கட்டும் பணியை தான் மனுநீதியை பின்பற்றும் ஆர்.எஸ். எஸ் அரசு செய்து வருகிறது என்ற உண்மையை வெளிச்சத்திற்க்கு கொண்டு வருகிறது இந்நூல். மாநில அரசின் உரிமையை பறித்து மத்திய அரசு தன் அதிகார வரம்புகளை விரிவுப்படுத்தும் திட்டத்தை புரிந்துக்கொள்ளவும், கல்விப்போரட்டத்தில் பயனித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

 

 நூல்: நீட் (NEET ) கூட்டாச்சிக்கும் சமுக நீதிக்கும் எதிரானது - ஏன் ? 

தொகுப்பு: பேரா. நா. மணி

பக்கம் 48 ரூ 30

வெளியீடு:

பாரதி புத்திகாலயம்

சென்னை& 600 018

தொலைபேசி: 044 -24332424.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.