நொறுங்கும் கனவும்; நெருங்கும் களமும்

தலையங்கம்

இந்தியா 2020 இல் பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்த நெருக்கடியை கண்டித்து அதனை தீர்க்க, கோடிக்கணக்கான இந்தியர்கள் அரசை நெருக்கினார்கள். இந்த பிரச்சினைகள் அனைத்திலும் அரசின் பங்கு என்பது கள்ள மவுனம் மற்றும் அக்கறையற்ற நிலை என்பதேயாகும். நாட்டின் தலையாய பிரச்னையே, ஆள்வோர் தான் என்ற அவல நிலை, நிலவியதையும் மறுப்பதற்கில்லை .

பொருளாதார ஆபத்து என்பது, பண மதிப்பிழப்பில் இருந்து தொடங்கி, தவறான திட்டமிடப்பட்ட ஜிஎஸ்டி; முன் யோசனையற்ற லாக் டவுன் அறிவிப்பு வரை, இந்திய பொருளாதாரம் குற்றுயிரும் கொலையுயிருமாக மாற காரணமானது

பெரும்பான்மை  இனவாதம்: மோடி ஆட்சியின் கீழ் வலதுசாரி இந்துத்துவ சக்திகளின் பெரும் அச்சுறுத்தலில் நாடு அமைதியிழந்து தவித்தது. அரசியலமைப்பின் மதச்சார்பற்ற அம்சங்கள் கடுமையான தாக்குதல்களை சந்தித்தன மற்றும் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற  நிலையை  உணர்கிறார்கள்.

ஜனநாயக பண்புகளுக்கான வெளி சுருங்கி வருகிறது: ஜனநாயக அம்சத்தை சிதைப்பது குறித்த உணர்வு அதிகரித்து வருகிறது, இது நாட்டு மக்களுக்கு நிம்மதியற்ற நிலையை உருவாக்கியுள்ளது .

சமூக நல இயக்கங்களின் பங்கேற்பு பெருமெடுப்பில் மக்களின் ஒத்துழைப்புடன் போராட்டங்களை நடத்தும் உத்வேகத்தை வழங்கியுள்ளது. இது மக்கள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள்  தொடர்பான போர்க்குணத்தை  ஊக்கப்படுத்தியுள்ளது

கடந்த ஆண்டு ஒரு Cஆஆ எதிர்ப்பு அறப்போர் ஆள்வோரை அலற வைத்தது. இப்போது விவசாயிகள் எதிர்ப்பு, ஆளும் தரப்பை அதிர வைத்துள்ள்ளது. சமூக சீர்திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிற சிக்கல்கள் வெடித்துக்கிளம்ப காத்திருக்கின்றன..

விவசாயிகள் எதிர்ப்பு பல்வேறு செய்தியினை நாட்டுக்கு தெரிவித்திருக்கிறது: தற்போதைய எதிர்ப்புப் போராட்டமானது, உணவு பாதுகாப்பு; சுற்றுச்சூழல்; பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயம் குறித்த சில பரந்த கவலைகளை எழுப்புகிறது.

விவசாய நெருக்கடியைப் பொறுத்தவரை: இந்தியாவின் விவசாய பொருளாதாரம் கொந்தளிப்பில் உள்ளது. தற்கொலைகள்; கடன் சுமை; உற்பத்திகளின் விலை வீழ்ச்சி ஆகியவை விவசாய நெருக்கடியின் முக்கிய பகுதியாகும். விவசாயத் துறையில் 26 கோடி மக்கள் நேரடி பங்கேற்பில் உள்ளனர். மக்கள்தொகையில் சுமார் 55௫7 சதவீதம் பேர் விவசாயத் துறையைச்  சார்ந்தவர்கள்  என்று சொல்லலாம்.

வேலையின்மை மிக கடுமையாக நாட்டைப் பாதித்துள்ளது: இந்தியாவில் முறையாக பயிற்சி பெற்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார்.  கொரோனா பெருந்தொற்று  வேலையின்மைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்திய சமூகம் 1970 களின் கால கட்டத்தின் பின்னடைவுக்கு திரும்பியது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: பெண்களுக்கு எதிரான தீவிர வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகின்றன. செப்டம்பர் 30, 2020 அன்று நாட்டில் பெண்களுக்கு எதிரான  3,78,236 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இது 2019 ஆம் ஆண்டில் 62.4 சதவீதமாக இருந்தது, இது 2018 ஆம் ஆண்டின் 58.8 சதவீத எண்ணிக்கையிலிருந்து அதிகரித்துள்ளது. பெண்கள் பாலியல்  வன்முறை என்பது நாடெங்கும் தொடர்ச்சியாக  நடைபெறும் குற்ற செயலாகும். ஒவ்வொரு நாளும் 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன.

ஊடக துறையால் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கேட்பதற்கு வினோதமாக இருப்பினும் இது உண்மையே. தவறான தகவல், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான பிரச்சாரம் ஆகியவை இந்திய பெரு வணிக ஊடகப்பணியின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டன. அரசாங்கமும் நீதிமன்றங்களும் பேனா விபச்சாரத்திற்கு தலைமை தாங்குகின்றன,

நீதி நிலுவையில் உள்ளது: நீதி தாமதமானது; நீதி மறுக்கப்படுகிறது; நீதிமன்றங்களில் வழக்குகளை மெதுவாக தீர்ப்பதோடு அதிகாரத்துவ சோம்பலும் இந்த நாட்டில் ஒரு துன்பமாக இருக்கிறது.
நாட்டின் பின்னடைவுக்கு காவல்துறையும் கணிசமான பங்களிப்பை செய்து வருகிறது என்றால் அது மிகையல்ல. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 138  காவல்  பணியாளர்கள் உள்ளனர். காவலர்கள் பொதுமக்களுடன் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதால் அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது .

நீர் மேலாண்மை போதாமையால் நெருக்கடி அதிகரிக்கிறது: புதிய நாடாளுமன்றத்தை அமைப்பதில் அரசாங்கம் மும்முரமாக இருக்கும்போது, இந்தியா மிக மோசமான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், குடிநீருக்கான தேவை 2030 க்குள்  பூதாகாரமாகி பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. 2030 க்குள் 21 பெரிய நகரங்கள் மிகப்பெரும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பருவமழை பொய்ப்பு: வெள்ளம் இரண்டின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கானோர் வெளியுறுகின்றனர். கணக்கற்றோர் இறந்தனர், வாழ்வாதாரங்கள் இழந்தனர், கிராமங்கள் மற்றும் குடியேற்றங்கள் மூழ்கின, அதிகார வர்க்கம் கடமை மறந்து களிப்பில் ஆழ்ந்தது என குற்றம் சாட்டப்படுகிறது

இந்தியாவில் பரவலாக பரவியுள்ள தொற்றுநோய் ஊழல் ஆகும், இது 2014 பொதுத் தேர்தல்களில் பெருவடிவம் எடுத்து இன்று நாடெங்கும் வியாபித்துள்ளது

அடிப்படை சுகாதாரம் இந்தியாவின் சவாலான ஒன்று; வீட்டில்  கழிப்பறைகள் இல்லாத சுமார் 700 மில்லியன் மக்கள் உள்ளனர்.

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, ஆனால் அதன் முழு மக்களுக்கும் சரியான சுகாதார வசதிகளை வழங்குவதில் அது வெற்றியை அடையவில்லை. சுகாதார உள்கட்டமைப்பை   மேம்படுத்த பெரும்  தொற்றுநோயான  கொரோனா ஒரு மறைமுக  காரணமாக இருந்து அதன்மூலம் அரசு போர்கால நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த மக்களின் நம்பிக்கை மூட நம்பிக்கையானது

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்தியாவின் மக்கள் தொகை பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. எனினும், பெரிய அளவில் குறையவில்லை, ஆம்  வறுமை நாட்டிலிருந்து அகற்றப்படவில்லை. ஐந்து இந்தியர்களில் ஒருவர் கடுமையான வறுமையில் வாழ்கிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாசுபாடு மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இந்தியாவுக்கு முன்னால் உள்ள மாபெரும் சவால்கள், ஆனால் நிலைமையை எதிர்கொள்ள அரசு அக்கறை காட்டவில்லை. உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறந்த சாலைகள், அனைவருக்கும்  வீடுகள் மற்றும் நீர், சுகாதாரம், முதன்மை சுகாதாரம் போன்ற சேவைகளை இந்திய ஆட்சியாளர்கள் கேள்விப்பட்டிருப்பார்களா என்பது கூட சந்தேகமே.

கடந்த பல பத்தாண்டுகளாக  இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. ஆனால் தேசத்தின் முன்னேற்றத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாக 6 ஆண்டுகளாக  ஓர் அரசு அமைந்து நூறாண்டு  வேதனைகளை வழங்கி வருகிறது. ஆட்சியாளர்களின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகின்றனர் .இது  சமூக நல  விரும்பிகளின் மனதில் மகிழ்ச்சியை விதைத்துள்ளது அதிகார வர்க்கம் செய்வதறியாது தவிக்கிறது . மக்களின் வருந்தும் நிலையை கண்டாவது அரசு திருந்தவேண்டும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button