தேசப்பற்று என்ற பெயரால் நாடகம் ஆடும் தேசத்துரோக கும்பல் விரட்டப்படுவது எப்போது ?

தலையங்கம்

தேசப்பற்று என்ற பெயரால் நாடகம் ஆடும் தேசத்துரோக கும்பல்
விரட்டப்படுவது எப்போது ?

இந்தியா என்ற வெகு மக்களை பிரதிநிதி படுத்தும் மாபெரும் கட்டமைப்பை விரும்பாதவர்கள், தம் இதயத்தில் உள்ளார்ந்த ஆசையை மறைத்து ஒவ்வொரு அணுவிலும் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்கிறார்கள். அவர்கள், பொதுவாக அம்பலப்படுவதில்லை. அவர்களின் முகத்திரையை சமூக செயற்பாட்டாளர்கள், சமூக நீதி பேசும் அமைப்புகள் சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் கிழித்து தொங்க விட்டால் கூட, தங்களின் சித்து வேலைகளின் மூலம் அரசியல் பின்னணியில் தப்பித்து விடுகிறார்கள்.

கெடுமதி கொண்ட அந்த கும்பலின் முக்கிய பேர்வழி ஒருவன், “மீடியாக்காரன்” என்ற போர்வையில் உலவும் தலைமை சங்கி, அண்மையில் அம்பலப்பட்டு போன வரலாறு நடந்தேறியுள்ளது.
புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை, சரியான வாய்ப்பு என மகிழ்ச்சி குதூகலத்தில் ஆனந்த கூத்தாடி கொண்டாடிய அர்னாப் என்ற கருத்தியல் பயங்கரவாதி, அம்பலப்பட்டு நிற்கிறார்.

டிஆர்பி மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் பார்க்(BARC) க்கின் முன்னாள் சி.இ.ஓ. பார்த்தோ தாஸ்குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் பேசிய உரையாடல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. தேசத்தின் ராணுவ ரகசியங்கள் அத்தனையும் அறிந்து, அதை சர்வசாதாரணமாக வாட்ஸ் அப்பில் பேசியிருக்கிறார். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்ததைப் பற்றி கவலைப்படாமல் தமது ரிபப்ளிக் டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தக் கூடிய ஒரு வாய்ப்பாக சுட்டிக்காட்டி பார்த்தோ தாஸ்குப்தாவுடன் வாட்ஸ் அப்பில் பேசியிருக்கிறார் அர்னாப். Tகிச் அட்டcக் நெ கவெ நொன் லிகெ cஅர்ழ்ய் என அதாவது இந்த வாய்ப்பு வெறிபிடித்து காத்திருந்தவர்களுக்கான வெற்றி வாய்ப்பு என்கிற தொனியில் அர்னாப் உரையாடி இருக்கிறார். அதாவது புல்வாமாவில் சிந்தப்பட்ட ரத்தம் இவர்களுக்கு இனித்திருக்கிறது என்றால்  இவரின் வெறித்தனமும் சுயநலனும் வெளிப்படுகிறதன்றோ.

அத்துடன் விட்டாரா ?  மேலும் இந்த தாக்குதலை பயன்படுத்தி பில்டப் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். பிரதமர் மோடியின் உரையை பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்றும் அர்னாப் அந்த உரையாடலில் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. “20 நிமிடத்துக்கு முன்னர் காஷ்மீரில் மிகப் பெரிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரில் இந்த ஆண்டு நடந்த மிகப் பெரிய தாக்குதல். நம்முடைய ஒரே ஒரு சேனல்தான் களத்தில் இருந்தது” என குதூகலமாக குறிப்பிட்டிருக்கிறார்.

பாலகோட் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அர்னாப் கோஸ்வாமி ‘ஏதோ பெரிய அளவில் தாம் ஆசைப்பட்டது போல் நடக்கும்’ என்றும், பிரதமர் மோடியின் அலுவலகத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட பல விவகாரங்கள், கோஸ்வாமிக்கும் முன்னாள் பார்க் தலைவருக்கும் இடையில் நடந்த 500 பக்க வாட்ஸ்அப் அரட்டை டி.ஆர்.பி ஊழல் வழக்கில் மும்பை காவல்துறை தயாரித்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக அம்பலமாகியுள்ளது. இப்போது வைரலாகிவிட்ட இதனை “அர்னாப்புக்கு ஆப்பு வைக்கப்போகும் தெளிவான ஆதாரம்” என்று பலர் கூறுகின்றனர்.

பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாவின்  பதிலடியாக  இந்த தாக்குதல் விதிக்கப்பட்டது,

‘இது காண்டிவலி காவல்துறையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு’ என்ற ஒரு அறிவிப்புடன் மிகப்பெரிய அறிக்கை தொடங்குகிறது. உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி பற்றிய கருத்துகள் முதல், போட்டியாளர்களை விட ரிபப்ளிக் டி.வி எப்படி பிரேக்கிங் நியூஸ் கொடுக்கிறது என்பது குறித்த கருத்துகள் வரை அதில் பகிரப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை “பயனற்ற மனிதர் (useless)” என்று கோஸ்வாமி கூறும் ஒரு உரையாடலும், “அனைத்து மத்திய அமைச்சர்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்று கோஸ்வாமி மிரட்டும் வகையில் கூறும் உரையாடலும் இந்த பதிவுகளில் இடம் பெற்றுள்ளன. மம்தா பானர்ஜியை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்த இஸ்லாமியர் விவகாரத்தை எப்படி நுழைப்பது என்று தாஸ்குப்தாவுடன் கோஸ்வாமி மேற்கொண்ட உரையாடலும் பதிவாகி இருக்கிறது. போட்டி தொலைக்காட்சி சேனல்கள் மக்களிடம் செல்லவிடாமல் தடுப்பது பற்றியும், அதற்கு பிரதமர் அலுவலகத்தின் உதவியை பெறுவது பற்றியும், அர்னாப் கோஸ்வாமியும் பார்த்தோ தாஸ்குப்தாவும் பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் அம்பலமாகியுள்ளன…

புல்வாமா தாக்குதலும் சரி, அதற்கு பதிலடியாக நடந்த பால்கோட் தாக்குதலும் சரி பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் தொடக்கத்தில் இருந்தே எழுப்பி வருகின்ற நிலையில் ஆர்னாப்   போன்ற புல்லுருவிகள் செயல் அதை ஊர்ஜிதம் செய்கின்றன.

வாட்சப் உரையாடலின் ஒரு கட்டத்தில் இந்த தாக்குதலின் பின்னணியில் தாவூத்  இருக்கிறாரா ? என்று ஆர்னாபிடம் கேட்க அவர் மோடி அரசின் உள் அரசியல் மட்டுமல்ல பாகிஸ்தானின் அரசியல் ரகசியம் கூட அறிந்தவர் போல் பேசுகிறார். இரண்டு அரசுகளையும் சங்கிகள் பாசப்பார்வை எவ்வித வேறுபாடுகளும் இன்றி பார்ப்பதை காட்டுகிறது .

பாலகோட் தாக்குதல் தொடர்பான நாட்டின் இராணுவ இரகசியங்கள் மற்றும் உத்திகள் மத்திய அரசாங்கத்தில் யாரோ ஒருவர் தங்கள் நலனுக்காக செய்ய கசிய வைத்தால், அது ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடு அல்லவா ? குற்றவாளிகளை விசாரித்து வழக்குத் தொடர வேண்டும். இரகசிய இராணுவ தகவல்களை கசியவிடுவது தேசத்துரோகம். ஒரு பத்திரிகையாளர் என்று அழைக்கப்படுபவர் மிகவும் வகைப்படுத்தப்பட்ட தகவல்களாக இருப்பதைப் பற்றி அறிந்திருந்தார், மேலும் அதை பரப்புகிறார். இது மூர்க்கத்தனமானதாக இருப்பதால், தேசிய பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பதையும், பயங்கரவாத தாக்குதல்கள் அதிக சக்தியைப் பயன்படுத்துவதற்கான பிரச்சாரமாகப் பயன்படுத்தப்படுவதையும் இது அம்பலப்படுத்துகிறது.

பாஜகவில் இருந்து பிரிந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ட்விட்டரில்: “அர்னாப் வாட்ஸ்அப் அரட்டைகள் தேசிய பாதுகாப்பில் கடுமையான பலவீனத்தையும், வீழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன என்பதை நான் பிரசாந்த் பூஷனுடன் இணைந்தே முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இந்த விஷயத்தை ஒரு பக்கச்சார்பற்ற அதிகாரத்தால் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசாங்கமும் குற்றவாளியாகத் தோன்றுகிறது.என்று  ” மூத்த வழக்கறிஞரான பூஷன் கசிந்த அரட்டைகளை குறித்து  ட்வீட் செய்திருந்தார்.
ஆர்னாப் போன்ற சங்கிகள் காவி அரைக்கால் டவுசர் அணிந்து அதனை மறைக்க மேலாக கோட் சூட் அணிந்து பசப்பும் பசப்புகளை நம்பும் காலம் மலை ஏறி விட்டது. இவரையும் பார்த்துள்ளோம் இவரது முப்பாட்டன் உள்ளிட்ட மூதாதையர்களை பார்த்துள்ளோம்

தேசபக்திக்கு சொந்தம் கொண்டாடுகிற பாரதிய ஜனதா, அதற்கு முன் ஜனசங்கமாக இருந்தது. அதற்கு முன் ‘இந்து மகாசபை’யாக இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் ‘கருத்தியல்’ வழங்கும் மூல அமைப்பு, ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். அந்த அமைப்பு தேச விரோத அமைப்பு என்று மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு. காந்தி கொலை செய்யப்பட்டபோது ஒரு முறை; 1976 இல் இந்திரா காந்தி அவசர நிலையைக் கொண்டு வந்தபோது ஒரு முறை; பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஒரு முறை; இவர்களுக்கு தேசபக்தி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

இப்போதிருக்கும் தேசியக் கொடியை வடிவமைத்தபோது, காவிக் கொடிதான், நமது மூதாதையர் கொடி. இந்த மூவர்ணக் கொடி வேண்டாம் என்று கூறியதுதான் ஆர்.எஸ்.எஸ். அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் கோல்வாக்கர் என்ற மராட்டியப் பார்ப்பனர். அவர்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான கொள்கையை எழுத்து வடிவமாக்கித் தந்தவர். கிறிஸ்தவர்களுக்கு ‘பைபிள்’போல இஸ்லாமியர்களுக்கு குரான் போல ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான ‘பைபிள்’ இந்த நூல்தான். அதன் பெயர் ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ தமிழில் ‘சிந்தனைக் கொத்து’ என்று வெளியிட் டார்கள்.

அர்னாப் கள், தங்களை தேச பக்தர்களாக முத்திரை குத்திக் கொண்டு, ‘இந்தியா’வை எதிர்த்து பேசுவதே தேச விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளுக்கோ, அதன் அரசியல் கட்சிகளுக்கோ, ‘இந்தியா’ என்ற பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை? இதற்கு பதில் சொல்ல வேண்டும். ‘இந்திய ஜனதா கட்சி’ என்று பெயர் சூட்டாமல், ‘பாரதிய ஜனதா கட்சி’ என்று பெயர் சூட்டியிருப்பது ஏன்? அவர்களின் தொழிற்சங்க அமைப்பு உள்ளிட்ட அத்ததைன அமைப்புகளுக்கும் ‘பாரதிய’ என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துவது ஏன்? இந்தியா என்ற சொல்லையே முழுமையாகத் தவிர்ப்பது ஏன்? இதற்கு பதில் சொல்வார்களா?

ஆர்.எஸ்.எஸ். கொள்கை நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ நூலில் கோல்வாக்கர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
“பாரதியம் என்பது நம்முடைய பழமையான பெயர். நமக்கு நினைவு தெரியாத காலம் முதல், இந்தப் பெயர் இருக்கிறது. புராணத்திலும் வேதத்திலும் பாரத் – பாரதியம் என்றே கூறப்பட்டிருக்கிறது. ‘பாரத்’ என்பதும், ‘இந்து’ என்பதும் ஒன்றுதான்.

இன்று பாரதியம் பாரத் என்ற சொற்கள் கூட தவறான பொருளில் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியா – இந்தியன் என்ற சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்து கிறார்கள். ‘இந்தியன்’ என்ற சொல் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி போன்ற பல்வேறு சமூகத்தவரையும் சேர்த்துத் தான் குறிக்கிறது. ‘இந்து’வை மட்டும் குறிப்பதில்லை. சமூகத்தை மட்டும் குறிக்கும் ‘பாரதிய’ என்ற சொல்லை மற்ற சமூகத்தினரையும் இணைத்துக் கொள்ளும் சொல்லாகக் குறிப்பிடுகிறார்கள். இப்படி ‘இந்தியா’ என்ற சொல்லையே ஏற்க மறுப்பவர்கள்தான் இந்தியாவின் ‘ஏஜெண்டு’களாகியிருக் கிறார்கள்

தேசப்பற்றுக்கு மொத்த குத்தகைதாரர்களாக தங்களை கருத்திக்கொள்ளும் இவர்கள் அதிகார தரகர்களாக மாறி நாட்டின் உண்மை தேசப்பற்றாளர்களை கொச்சைப்படுத்துகிறார்கள். தரகுக்கூட்டத்தை தகர்க்க இந்திய மக்கள் தயாராகி வருகிறார்கள்.

போலி தேசிய வாதிகளிடம் இருந்து நாட்டை காக்க குடியரசு நாளில் உறுதி ஏற்போம் .

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button