இறப்புச் செய்திகள்..!

-ஆரூர்புதியவன்

அதிர வைக்கும்
வகையில்,
பதற வைக்கும்
வகையில்,
செவிகளைச்
சுடும் சில…
வந்து சேர்வதற்கு
ஓரிருநாள்
முன்பிருந்தே
மனச்சோர்வை
தந்திருக்கும் சில..!
அலட்சியமாகக்
கடக்க வைக்கும் சில…
உள்ளூர
மகிழ்ச்சி
தரக்கூடியவனவாகவும் சில…
உண்டு கொண்டிருக்கும்
போது
அதைக் கேட்டு
உருண்டு புரண்டவர்கள்
உண்டு…
பேருந்தில் அச்செய்தியை
அலைபேசி வழி கேட்டு
அறிமுகமற்ற கூட்டத்தின்
முன்பு
வாய் விட்டு
அழுதோரும் உண்டு…
தொலைதூர தேசத்தில்
பொருள்தேட வந்த நிலையில்
நிலைகுலைய வைத்திட்ட
ரத்த உறவுகளின்
இறப்புச்செய்தி போல்
உயிர்வதை வேறேதும் உண்டோ..?
இறப்புச்செய்தியை
ஒப்புக்குக் காதில்
வாங்கிவிட்டு
உணவில் குறைந்துவிட்ட
உப்புக்காக
வருந்தியோரும் உண்டு…
கொடும் அரற்றலைச்
சிலருக்கும்
கொண்டாட்டத்தை
சிலருக்கும்
கொண்டு வருகின்றன
இறப்புச் செய்திகள்…
நமது
இறப்புச் செய்தியைக்
கேட்கும்போது
யார்? யார்?
என்னென்ன
நிலையில் இருப்பார்களோ
என்றும்
இறப்புச்செய்திகள்
சிந்திக்க வைக்கின்றன…
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button