இந்திய அரசின் ரொக்கப் பரிசுக்காக கொல்லப்படும் காஷ்மீர் அப்பாவிகள்.

தமிழில் : அபிராமம் அப்துல் காதர்

ந்திய அரசின் ரொக்கப் பரிசுக்காக கொல்லப்படும் காஷ்மீர் அப்பாவிகள்.

“காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்” என்கிற செய்திகள் எல்லாமே உண்மை இல்லை, என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி, அதன் அதிர்ச்சி மிக்க காரணமும் இப்பொழுது வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கொன்றால், இந்திய அரசு தருகின்ற, ரொக்கப்பரிசு வெகுமதி ரூபாய் 20 லட்சத்திற்க்கு ஆசைப்பட்டு, இந்திய ராணுவத்தின் RR ரெஜிமெண்டை சேர்ந்த கேப்டன் புபேந்தர்சிங், கடந்த 2020, ஜூலை 8 ஆம் தேதி, காஷ்மீரின் ஆப்பிள் பழத்தோட்டங்களில் பணிபுரியும் அப்பாவி தினக்கூலித் தொழிலாளர்கள் 3 பேரை, திட்டமிட்டு சுட்டுக்கொன்றுவிட்டு, “பாகிஸ்தான் பயங்கரவாதிகளோடு துப்பாக்கி சண்டையிட்டு என்கவுண்டர் மூலம் கொன்றதாய் நாடகம்” நடத்தி இருந்ததும், அதற்கான வெகுமதியான ரூ 20 லட்சம் ரொக்கத் தொகையை கோரியிருந்ததும், தற்போது இராணுவ விசாரணை நீதிமன்றமும், ஜம்மு & காஷ்மீர் போலீசாரும் இணைந்து நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கும் அதிர்ச்சி சம்பவமாக உள்ளது.

கடந்த 2020, ஜூலை 8ந்தேதி, 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சண்டையிட்டு என்கவுண்டர் மூலம் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றனர், என்ற செய்தியை அடுத்து, அன்றுமுதல் 3 காஷ்மீர் இளைஞர்களை காணவில்லை என்கிற குடும்பத்தாரின் கூக்குரல் காரணமாக, உடனே, காஷ்மீரில் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மற்றும் சில அறியப்பட்ட சமூக ஆர்வலர்களால், கொல்லப்பட்ட அந்த மூவரின் DNA வை சோதனை செய்வதன் மூலம், அவர்களை உரிமை கோரிய குடும்பத்து DNA உடன் ஒப்பிட்டு அவர்கள் ‘இங்குள்ளோர்தான்’ என நிரூபிக்க கோரிக்கை வைத்தனர். சிலர் காவல்துறையில் இதற்காக வழக்கும் போட்டனர். ஆனால், இராணுவமோ, ‘அடையாளம் தெரியாத பிணங்கள்’ என்று கூறி சடலங்களை உடனடியாக புதைத்து விட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையோ, புதைக்கப்பட்ட பிணங்களை 77 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து, அந்த அழுகிய சடலங்களில் இருந்து, டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட DNA வுடன் பொருந்தக்கூடிய டி.என்.ஏ.மேப்பிங் செயல்முறை சோதனையை நடத்தியது.
அந்த சோதனையில், “பாகிஸ்தான் பயங்கரவாதிகள்” என்ற பெயரில் ராணுவ என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாய் கூறப்பட்ட அந்த மூன்று ஆப்பிள் தோட்ட தினக்கூலித்தொழிளார்களும், உடலை கோரிய “அப்பாவி காஷ்மீர் குடும்பத்து இந்திய இளைஞர்கள்தான்” என்பது, DNA டெஸ்ட் மூலம் நிரூபணம் ஆனது.

முஹம்மது இப்ரார், வயது- 16, இம்தியாஸ் அஹமது, வயது- 20, அப்ரார் அஹமது, வயது 25. ஆகிய மூவரின் சடலங்களும், 2020 அக்டோபர் 3 ஆம் தேதியன்று, அவரவர் குடும்பத்தினரிடம், கொலை நடந்து 88 நாட்கள் கழித்து ஒப்படைக்கப்பட்டன. அவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு கொண்டுசென்று தங்கள் முறைப்படி மீண்டும் அடக்கம் செய்தனர்.

இதன்பின்னர், ‘எப்படி நிராயுதபாணியாக இருந்த அப்பாவிகளை இராணுவம் கொன்றுவிட்டு “பாகிஸ்தான் பயங்கரவாதிகள்” “துப்பாகிச்சண்டை” என்றெல்லாம் கூறியது?’ என்கிற விசாரணையை ஜம்மு காஷ்மீர் காவல்துறை இராணுவ உதவியுடன் நடத்தினர். அதில்தான், 20 லட்ச பரிசுக்கு ஆசைப்பட்டு ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகள்’ என்று பழிபோட்டு அப்பாவி இந்தியர்களை சுட்டுப்படுகொலை செய்த கொடூர உண்மை வெளியாகியுள்ளது. அந்த ராணுவ அதிகாரி மீது 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button