அஸ்ஸாம் மதரஸாக்களை அரசு பள்ளிகளாக மாற்றும் முயற்சி
- அபிராமம் அப்துல் காதர்
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபையில், சமீபத்தில் ஒரு சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மதரஸா கல்வி (மாகாணமயமாக்கல்) சட்டம் 1995 சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு உத்தேசித்திருந்த வேளையில், எதிர்கட்சிகளின் கடும் போராட்டத்திற்குப் பின், சட்டசபையில் பதிலளித்த, நிதி மற்றும் கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா, மதரஸா அல்லது தனியார் கல்விக்கூடங்களை மூடும் எந்த நடவடிக்கையிலும் அரசு ஈடுபடவில்லை என உறுதியளித்துள்ளார்.
மதரஸாக்கள், கூடுதல் சம்பளமோ; பதவி உயர்வோ இல்லாமல், மேனிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளாகவும் மாற்றப்படுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அரசு முயற்சி எடுத்து வருகின்றது. எதிர்கட்சிகளின் ஆட்சேபணையைத்தொடர்ந்து, அமைச்சர், ” மதரஸா அல்லது தனியார் கல்விக்கூடங்களை மூடும் எந்த நடவடிக்கையிலும் அரசு ஈடுபடவில்லை ” என்று கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் சுமார் 600 மதராஸாக்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.