விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32

வி.என்.சாமி

ஹாபிழ் முஹம்மது இப்ராஹீம்

சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல் வாதியுமான முஹம்மது இப்ராஹீம் உத்தரப் பிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த நகினா என்னும் ஊரில் 1889ஆம் ஆண்டு பிறந்தவர். தொடக்கத்தில் மத்ரஸாவில் கல்வி பயின்றார். அப்போது, புனித திருக்குர்ஆனை மனப்பாடம் செய்ததால் ‘ஹாபீஸ்’ என்னும் பட்டம் அவருக்கு கிடைத்தது.தொடக்கக் கல்வியும் உயர்நிலைக் கல்வியும் படித்தபின், மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கிய தொண்டு நிறுவனங்களின் நிதி உதவி பெற்று அலிகர் முஸ்லிம் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். அலிகர் பல்கலைகழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்து, வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்றார்.சிறைவாசம்

1919 முதல் விடுதலைப் போராட் டத்தில் தீவிரமாக பங்குக் கொண் டார் விடு தலைப் போராட்டத்தில் பங் குக் கொண்டமைக்காக இவர் ஆங்கிலேயர்களால் கைதுச் செய்யப்பட்டடு பத்தேகர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கறிஞர் தொழிலோடு அரசியலில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் அவர் தனது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். 1937ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் அங்கு மந்திரிசபை அமைக்கப்பட்ட போது, மந்திரிகள் பங்கீட்டில் முஸ்லிம் லீக் கட்சிக்கும் காங்கிரசுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ஆகவே, முஹம்மது இப்ராஹீம், முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தமது ஆயுட்காலம் வரை மாநிலத்திலும் மத்தியிலும் ஏதாவது ஒரு பதவி வகித்து வந்தார்.

இஸ்லாமிய ஆன்மீக வாதி

முஹம்மது இப்ராஹீம் பொதுவான கண் ணோட்டத்தில் காங்கிரஸ் காரராகக் கருதப் பட்டாலும் எப்போதுமே அவர் தன்னைப் புகழ்மிக்க இஸ்லாமிய ஆன்மீகவாதியாகவே காட்டிக் கொண்டார். அவருடைய முயற்சியினாலும் கிலாஃபத் இயக்கம் காரணமாகவும் அந்தக் காலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்கள். நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்ற இவர் பொதுப் பணித்துறை, நீர் பாசனத் துறை, வக்பு, உணவு ஆகிய துறைகளில் திறன்பட பணியாற்றினார். மத்திய அமைச்சராக இருந்த போது வக்ப் சட்டம் உருவாக்கப்படுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தார்.
1958ஆம் ஆண்டு மௌலானா அபுல்கலாம் ஆசாத் காலமான பின் முஹம்மது இப்ராஹீம், மத்திய அரசின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1963ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். அதன்பின் அவர் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆளுநர் பதவியேற்ற அவர், பஞ்சாப் மாநில அரசுக்குப் பலவகையான ஆலோசனைகளை வழங்கி, அந்த மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். அவர் உயர் பதவி வகித்தபோதிலும் தனிப்பட்ட வாழ்வில் எளிமை, தன்னடக்கம் போன்ற உயர்ந்த பண்புகளைக் கடைப்பிடித்தார். அவர் எளிமையான மனிதராக மட்டுமல்லாமல் ஏழ்மையான மனிதராகவே இவ்வுலகை விட்டு மறைந்தார்.ரூர்கரியில் உள்ள பொறியியல் கல்லூரி இவரது பெரும் முயற்சியால் பல்கலைகழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இவரது சேவைகளை பாராட்டி பத்ம விபூசன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

குறிப்புகள்:

N.N.Mitra(ed.), The Indian Annual Register, 1935-47.
Asia Who is Who, 1938, Hong Kong, 1958.
L. Bahadur, The Muslim League: Its History and Achievements.Natesan, Eminent Mussalmans, Madras. 1922.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button