விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 33

அகமதுல்லா

19ம் நூற்றாண்டில் சிறந்த மேதையாகத் திகழ்ந்தவர் அகமதுல்லா. வஹாபி இயக்கத் தலைவரான அவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய்ப் புரட்சியின் போது கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சதி செய்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு, அவர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார். 16 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அங்கு வாடியபின் அவர் காலமானார்.

1808ஆம் ஆண்டில் பாட்னாவில் கல்வியில் சிறந்த குடும்பத்தில் பிறந்தவர் அகமதுல்லா. அகமத் பக்ஷ் என்பது அவருக்குப் பெற்றோர் வைத்த பெயராகும். அவரது குடும்பத்தினர் நிலச்சுவான்தாரர்கள். அகமதுல்லா தனது ஆரம்பக் கல்வியைக் குடும்பத்துப் பெரியவரான விலாயத் அலியிடம் பயின்றார்.

சையத் அகமத் பரேல்வி

இந்தியாவில் வஹாபில் இயக்கத் தலைவராயிருந்த சையத் அகமத் பரேல்வி 1823-24ஆம் ஆண்டில் பாட்னாவுக்கு வந்திருந்தார். அப்போது அகமது பக்ஷ§ம் அவரது குடும்பத்தினரும் அவரைச் சந்தித்து, அவருக்கு சீடரானார்கள். அதன்பிறகு தான் அகமத் பக்ஷின் பெயர் அகமதுல்லா என்று மாற்றப்பட்டது.

நாடு கடத்தப்பட்டார்

வஹாபி இயக்கத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 1865ஆம் ஆண்டு 27ஆம் தேதியன்று அகமதுல்லா கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார் என்று அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து அகமதுல்லா மேல் முறையீடு செய்து கொண்டார். அதில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் 1865ஆம் ஆண்டு அவர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 16 ஆண்டுகள் தனிமைச் சிறையில் வாடிய பின் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதியன்று அங்கு காலமானார்.

பாட்னா நகரைச் சேர்ந்த பாசிரன் பீபியை 1824ஆம் ஆண்டு அகமதுல்லா திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இரண்டாவது மனைவியை அவர் மணந்து கொண்டார். அவர்களுக்கு ஏழு புதல்விகள் பிறந்தனர். சிறந்த அறிஞராகத் திகழ்ந்த அகமதுல்லா துணை கலெக்டர், வருமானவரித் துறையில் மதிப்பீட்டாளர், பாட்னா கல்வித் துறையின் உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர்.

சந்தேகப் பார்வை

வஹாபி இயக்கத்துடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால், ஆங்கிலேயர் சந்தேகக் கண்ணுடனேயே அவரைப் பார்த்தனர். அவர் போலீஸ் கண்காணிப்பு வலையத்தில் இருந்த சமயத்தில் 1857ஆம் ஆண்டு பீகாரில் கலகம் ஏற்பட்டது. பாட்னா நகர ஆணையர் டைலர் என்பவர் அப்போது அகமதுல்லாவைக் கைது செய்தார். அவருடன் ஷா முகம்மது ஹ§ஸைன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் வஹாபி இயக்கத்தில் சேருவதற்குப் பயந்து ஒதுங்கி விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே ஆங்கிலேயர் இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ரகசிய போலீசார் கொடுத்த தகவலின் பேரில் அகமதுல்லாவின் உறவினர்களான யஹ்யா அலி மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோரும் 1863ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கு விசாரணை 1864ஆம் ஆண்டு அம்பாலாவில் நடைபெற்றது. அதில் அகமதுல்லாவின் உறவினர்கள் யஹியா அலி, அப்துல் ரஹீம் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டனைப் பெற்றவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பாலா சதி வழக்கு விசாரணையின்போது, அகமதுல்லாவின் ஆங்கிலேய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி அரசுக்குத் தெரிய வந்தது. ஆகவே, அவர் மீது தனியாகச் சதி வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. ஆகவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை எதிர்த்து அகமதுல்லா பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் பேரில் அவரு டைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக் கப்பட்டு, அந்தமானுக்கு அனுப்பப்பட்டார். அகமது ல்லாவின் சொத்துக்கள் பறிமுதல் செய் யப்பட்டன. சதி வழக்கில் தண்டனைப் பெற்றவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. அந்தமானில் 16 ஆண்டுகள் தனிமைச் சிறையில் வாடிய அகமதுல்லா 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி அங்கு காலமானார்.

குறிப்புகள்

Ahmad, Q, Wahabi Movement in India, Calcutta, 1966.
Selections from the Records of the Government of Bengal, No, xiii, Papers connected with the Trial of Moulvie Ahmedullah of Patna, Calcutta, 1866.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button