விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 28

வி.என்.சாமி

மவ்லவி லியாகத் ஹுஸைன்

மவ்லவி லியாகத் ஹுஸைனின் முற்பகுதி வாழ்க்கைப் பற்றிய விவரம் அவ்வளவாகத் தெரியவில்லை. 1905ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கப் பிரிவினையின் போது தான் அவர் பிரபலமானார். அப்போது கோல்கட்டாவில் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அதனால், வங்காள காங்கிரஸின் வலிமை மிக்க தலைவராக அவர் மதிக்கப்பட்டார்.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை வன்மையாக எதிர்த்த முஸ்லிம் தலைவர்களை ஒன்று திரட்டும் பணியில் அவர் வெற்றி கண்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சுதேசி இயக்கம் நல்ல பலனைத் தரும் என்று அவர் நம்பினார். ஆகவே, மாகாணம் முழுவதும் சுதேசி இயக்கத்தைப் பரப்ப தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலை நாட்டுக் கல்வி முறை இந்தியர்களை ஆங்கிலேயருக்கு அடிமைப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆகவே, தேசியக் கல்வி முறையை உருவாக்கி இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மவ்லவி லியாகத் ஹ§ஸைன் கூறியதோடு நின்றுவிடவில்லை.

தேசியக் கல்வி முறையை வகுத்து, போதிப்பதற்காக ‘பாரத் ஹிதைஷி சபா’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். விரைவிலேயே இதன் நட வடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டன.

ஜாதி, மத வேறுபாடின்றி வாழ்க்கையில் கஷ்டப்படு கிறவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர் செய்து வந்தார். நாளடைவில் அந்த சபாவின் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இந்த சபா பொருளுதவி செய்தது. இதனால் மவ்லவி லியாகத் ஹ§ஸைனின் செல்வாக்கு அதிகரித்தது.

இந்த சபாவின் நடவடிக்கைகளில் முக்கியமாகத் திகழ்ந்தது சுதந்திரப் போராட்ட உணர்வை மக்களிடையே தூண்டிவிட்டது தான். இதன் விளைவாக மக்கள் அணிஅணியாகத் திரண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டனர். பொது வாழ்வில் பல்வேறு துறைகளில் மவ்லவி லியாகத் ஹ§ஸைனின் பங்களிப்பு இருந்தாலும், வங்காள சுதேசி இயக்கத்தின் தந்தை என்றே அவர் போற்றப்பட்டார்.

குறிப்புகள்

B.S.Banerjea, Surendranath, A Nation in the Making, Oxford University Press, 1925.
Dutt, Paramananda, Memoirs of Motilal Ghouse, Calcutta, 1935.
Mukherjee, Haridas and Uma, India’s Fight for Freedom, Calcutta, 1958.
The Amrita Bazar Patrika, 18 January, 1916.
The Bengalee, 8 November 1906.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button