யோகியின் வார்டில் வென்ற சுயேச்சை வேட்பாளர் நாதிரா காத்தூன்

அபுசாலிஹ்

உள்ளாட்சி தேர்தலில் பெரு வெற்றி பெற்றதாக பொய்கதை பரப்பிக்கொண்டிருக்கும் பாஜக வினர் பெற்ற சொற்ப வெற்றிக்கு கூட மின்னணு வாக்குப்பதிவு எந்திரமே காரணம் என பல்வேறு தரப்பில் இருந்தும் நிறுவப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் அடுத்த மோடி என பூதாகரமாக காட்டப்படும் உபிமுதல்வர் ஆதிதயநாத் சாமியாரின் சொந்த தொகுதியில் அவர் வீடு அமைந்திருக்கும் வார்டில் அவர் வாக்களிக்கும் சாவடி இருக்கும் பகுதியில் அவர் கட்சியை அவரால் வெல்ல வைக்க முடியவில்லை என்பதை நினைக்கும்போது மோடி மற்றும் யோகி பக்தர்களுக்கு துக்கம் தொண்டையை அடைக்கக்கூடும்.

நாதிரா காத்தூன்

வார்டு எண் 68 இந்த நம்பரை யோகி மட்டுமல்ல பாஜக காரர்கள் யாருமே இனி மறக்க முடியாது பழைய கோரக்பூரில் அமைந்துள்ள இந்த வார்டில் வீராங்கனை நாதிரா வெற்றி பெற்றார் . நவம்பர் 22ம் தேதி முதலமைச்சர் ஆதித்யநாத் தனது வாக்கினை இதே வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் செலுத்தி விட்டு தம் கட்சிக்கு வெற்றி உறுதி என இரட்டை விரலை காட்டி உற்சாகத்துடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெபாசிட்டும் காலி

பாஜக வேட்பாளரான மாயா திரிபாதியை நாதிரா வீழ்த்தி அவரது கட்டுத்தொகையையும் பறி போகும் நிலையை ஏற் படுத்தினார். சுயேச்சை வேட் பாளரிடம் உலகத்திலேயே பெரிய கட்சியான பாஜக ( இப்படி அவங்க தான் சொல்ராங்க நம்பி னால் நம்புங்க) டெபாசிட் பறி கொடுத்ததை அதிர்ச்சியுடன் பரிமாறிக் கொள்கிறார்கள் போட் டியிட்டவர்களில் 6 பேரில் 4பேர் முஸ்லிம்கள்.
இது மகளிருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு ஆகும். முஸ்லிம் சமூக வாக்குகள் நான்காக பிரிந்திருந்த நிலையிலும் பாஜகவால் வெல்ல முடியாதது. பெரும் சோகம் தான் என கோரக்பூர் பகுதி முன்னணி ஊடகர் மனோஜ்குமார் சிங் தெரிவித்தார்.

மேம்படுத்துவதே முக்கிய பணி

எம் எல் ஏ , எம்பி , முதல்வர் எல்லாமே பாஜகவினர் இந்த நிலையில் எனது வார்டு பகுதி மக்களின் குறைகளை களைய மிகவும் சிரத்தை எடுத்து செயல்படுவேன் என்ற கவுன்சிலர் நாதிரா எங்கள் சந்துகளில் கழிவுநீர் பிரச்னைக்கு முதலில் தீர்வு காணவேண்டியுள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த கால் நூற்றாண்டுகளாக யோகி இந்த பகுதியின் எம்பியாக இருந்துள்ளார்.

தற்போது முதலமைச்சராக இருந்தும் அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்றாத ஓர் அரசியல் வாதியாக இருந்துள்ளார் என்பது நிச்சயம் அவலமான ஒன்று.

இறந்து போன சாமியார் பெயர்

உபி மாநிலம் முழுவதும் முஸ்லி மாவாக்களர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பழைய கோரக்பூரில் 68ம் வார்டில் 300 வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இல்லை .
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன யோகியின் குருவான சாமியார் மஹந்த் அவைத்யநாத் பெயர் அங்கு பட்டியலில் இடம்பெற்றுள்ளது இது முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள வார்டு எனினும் விடுபட்ட முஸ்லிம் வாக் காளர் களுக்காக மட்டுமல்ல ஹிந்து வாக்காளர்களும் தான் போராடி பட்டியலில் இடம் பெற செய்ததாக நாதிரா குறிப்பிடுகிறார்.

70 வயதான நாதிரா போட்டியிட சீட்டு கேட்டு எந்த அரசியல் கட்சியையும் அணுகவில்லை என அவரது புதல்வர் ஷமீம் அன்சாரி தெரிவித்தார். இவர் கடந்த தேர்தலில் 64 வாக்கு வித்தியாசத்தில் பாஜகவிடம் வெற்றியை தவறவிட்டவர்.

சட்டமன்ற தேர்தலின்போது பழைய கோரக்பூரில் செறிந்து வாழும் நெசவாளர்களின் துயர் தீர்க்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் சக்திகள் குறைகள் களையப்படும் என வாக்குறுதி அளித்து தேர்தல் புறக்கணிப்பை திரும்ப பெற செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

வெல்ல முடியாத கட்சி
தமிழகத்தில் ஒரு வார்டு கவுன்சிலராக கூட வர முடியாத ஒரு கட்சிக்கு தொலைக்காட்சி விவாதங்களில் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்ற கேள்வி தமிழகத்தில் அவ்வப்போது எழுப்பப்படுகிறது . உபியில் மட்டும் எனன வாழுதாம். முதல் அமைச்சருக்கே முட்டுச்சந்தில் கூட செல்வாக்கு இல்லையே என்ற பதில் அங்கே ஒலிக்கிறது . அய்யகோ வருங்கால மோடிக்கு வந்த சோதனை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button