தேசிய வெறி சக்திகளுக்கு வாக்களிக்காதீர்: குஜராத் பேராயர் வேண்டுகோள்!

ஜா. அராபத்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சார களத்தில் பல்வேறு விதங்களில் பாசிச சக்திகளுக்கெதிராக குரல்கள் எழுந்து வருகின்றன.

தேசத்தின் பன்முகத்தன்மையை விரும்பும் அனைவரும் ஓர் குரலாய் பாஜக வை எதிர்த்து வருகின்றனர். அதில் ஓர் அங்கமாக தற்போது குஜராத் காந்தி நகர் பேராயர் தாமஸ் மேக் வான் ‘தேசியவெறி கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஓர் கோரிக்கை கடிதத்தை இந்திய பேராயர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதில் இந்த தேசத்தின் சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்கள் என பல ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

தேசிய வெறி கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் பாசிச மதவாத சக்திகள் இந்தேசத்தின் பன்முகத்தன்மை, இறையாண்மை,மதச்சார்பின்மையை சிதைத்து வருகின்றனர். குஜராத் தேர்தல் முடிவுகள் இந்தியாவில் ஓர் வித்தியாசத்தை காட்ட வேண்டும், மதவாத சக்திகளுக்கு எதிராக இந்திய பேராயர்கள் அனைவரும் பிராத்தனை செய்யுமாறும் பேராயர் தாமஸ் மேக்லான் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனிதாபிமான தலைவர்களின் வெற்றிக்காக அனைவரும் பிரார்த்திக்கும் படியும், கடந்த காலங்களில் கம்யூனிச அரசாங்கங்களும், சர்வாதிகார அரசுகளும் கவிழ்கப்பட்ட வரலாறுகளை மேற்கோள் காட்டி தேசிய வெறி சக்திகளை எச்சரிப்பதாக தெரிவித்துள்ளார். கடிதத்தின் இறுதியில் இந்த கடிதம் சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கத்தில் எழுதவில்லையென்றும், இந்திய சமூகத்திற்கெதிரானவர்களை வீழ்த்துவதற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டியது கடமையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் மையக்கருத்திலிருந்து இந்திய தேசத்திற்கெதிராக செயல்படும் தேசிய வெறியர்களுக்கு பலதரபட்ட மக்களிடமிருந்தும் எதிர்ப்பலைகள் தொடர்கிறது என்பது தெளிவாகின்றது. ஆட்சி பொறுபேற்று மூன்றாண்டுகளிளேயே இவர்களின் உண்மை முகத்தை வெகு ஜனமக்கள் அறிந்து கொண்டனர். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத சம்பவமான தேச பிதா காந்தி தொடங்கி இன்று வரை பல்வேறு பயங்கரவாத செயல்கள் மூலம் தான் யார் என்பதை காட்டிவரும் பாசிச அரக்கர்களுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டனர். இந்தியாவில் சிறுபான்மையினராக வாழும், முஸ்லீம்களும், கிருத்தவர்களும் இன்னும் இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களும் திட்டமிட்டு அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைத்து ஊடகங்கள் மூலமும் நிதர்சனமாய் தினந்தோறும் காட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. தங்களுடைய ஆதகங்களை இதுபோன்ற கடிதங்கள் மூலம் தங்கள் வட்டாரங்களுக்குள் பகிர்பவர்கள் மீதும் பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதற்கு பேராயர் தாமஸ் மேக்ஸான் கடிதம் மட்டும் விதிவிலக்கல்ல. நாட்டை காப்பாற்ற தேசிய வெறி கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டு கோள் விடுத்ததிற்க்காக பேராயர் தாமஸ் மேக்ஸானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மிகமிக துவேசமான கருத்துக்களை பேசியும் எழுதியும் வருகின்ற பாசிச பயங்கரவாதிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு ‘‘தன்னுடைய மனைவிக்கு வாக்களிக்கவில்லை யென்றால், கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என பகிரங்க மிரட்டலைவிடுத்த பாஜக நிர்வாகியை கண்டிக்காத தேர்தல் ஆணையம்.
தொடர்ந்து விசம கருத்துக்களை பேசி வருகின்ற தலைக்கு விலை வைப்பவர்களை கண்டு கொள்ளாமல், பாசிச அரசின் உண்மை நிலையை எதிர்பவர்களை மட்டுமே அடக்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதரானது. இதனை தொடர்ந்து செய்து வரும் சங்பரிவார ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக வினர் மீது தேர்தல் ஆணையம் பாரப்பட்சமின்றி நடவடிக்கை எடுக்குமா?.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button