தித்திப்பான திருப்புமுனைகள்: இஸ்லாம் தழுவிய ஆளுமைகளின் குரல்கள்

இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காலம் தொட்டு இஸ்லாம் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்து சத்திய மார்க்கத்தைத் தழுவ வழிகோலி உள்ளது. இஸ்லாம் குறித்த அவதூறுகளும் தவறான பரப்புரைகளும் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் வேலையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய ‘தித்திப்பான திருப்புமுனைகள்’ நூல் தக்க பதிலடியாகவும் எதார்த்தத்தை நிறுவுவதாகவும் அமைந்துள்ளது.

உலக அளவில் மதிப்புமிக்க ஆளுமைகளாகத் திகழும் 21 நபர்களின் இஸ்லாம் தழுவிய அனுபவம் புதிதாக இஸ்லாத்தை அறிய விரும்புபவர்களுக்கு நேரிய பரந்துபட்ட சிந்தனை தளத்தை அளிக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 21 நபர்களில் 14 ஆண்களும் 7 பெண் ஆளுமைகளும் அடங்குவர். அவர்களின் இஸ்லாம் தழுவிய காரணிகள் தமிழ் வாசிப்பு அனுபவத்திற்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. -தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறியபோது மக்கள் உரிமைக்கு வழங்கிய பேட்டி முழுவதும் தொகுக்கப்பட்டுள்ளது.
-பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் அவர்கள் சுரையா&வாக மாறியபின் தனது அனுபவத்தை நூலாசிரியருக்கு அளித்த நேர்காணல் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இவரது கருத்துக்கள் தற்போது பெண்ணியம் பேசும் நபர்களுக்கு நல்ல பதிலடியாக அமைந்துள்ளது. -எம்.டிவி&யின் கேளிக்கை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த கிருஸ்டியானி பேக்கர், கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் வாயிலாக இஸ்லாத்தை உணர்ந்து தற்பொழுது பரப்புரையாளராக மாறியுள்ளார்.

‘எம்.டிவி&யிலிருந்து மக்காவிற்கு’ என்ற நூலையும் உலகிற்கு வழங்கியுள்ளார். -திருக்குர்ஆனின் மொழிப்பெயர்ப்பை படித்தறிந்து இஸ்லாம் நுழைந்த பிரபல தமிழ் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ‘அப்துல் ஹாலிக்’ என்று மாறியதையும், கொடிக்கால் செல்லப்பா என்னும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் தெற்கு எல்லைப் போராட்ட வீரருமான போராளி, இஸ்லாம் தழுவிய நேர்காணலை வாசிக்கும் போது வாசகர்களின் கண்கள் பணிக்கும்.

-புர்கா அணிந்ததால் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தபின் நண்பர்கள் வாயிலாக விளக்கம் பெற்று நடிகையாக இருந்த மோனிக்கா ரஹீமாவாக மாறியது, பிரிட்டன் பத்திரிக்கையாளர் லாரன்பூத், இஸ்லாமிய நண்பர்களுடன் பழகி அவர்கள் வழியேயும், தீண்டாமைக் கொடுமை வழியே அம்பேத்கார் காட்டிய வழியில் மதம் மாறிய தலித் நீலப்புலிகள் அமைப்பின் நிறுவனர் டிஎம்.மணி, டி.எம்.உமர் பாரூக்காக மாறியது போன்றவை வாசகர்களின் மனதில் இறையச்சத்தை அதிகரிக்கக் கூடியவை. -கருப்பின மக்களுக்காகப் பாடுபட்ட பிலால் பிலிப்ஸ், பாப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த ஆங்கிலப் பாடகர் யூசுப் இஸ்லாம், பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரபல நடிகர் ராபின் பாடில்லா, சீன கிருஸ்தவ மதங்களுக்குப் பின் இஸ்லாத்தை ஆய்ந்தறிந்து ஏற்ற இஹ்ஸான் குஆ கிம் சாம், தமிழகத்திலிருந்து வேலைக்கு சவுதி சென்று நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் படித்து இஸ்லாம் தழுவிய அப்துல்லா, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் மார்க்கம் குறித்து ஆய்ந்து உள்நுழைந்த விவிலியர் ஆசிரியரான சமிரா கேன்டி கிளார்க் போன்ற ஆளுமைகளின் அனுபவங்கள் நம்மை சிலிர்க்க செய்கின்றன.-ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்து மதம் மாறிய ஆமினா அஸ்லமி, முஸ்லிம்கள் இடையே குழப்பங்களை உண்டாக்க வேண்டுமென்று திட்டம் தீட்டிய பின்பு சத்தியத்தில் மூழ்கியவர்.

இந்நூல் வாசித்து முடிக்கப்பட்டவுடன் இஸ்லாம் அல்லாதவர் மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே புது உத்வேகமும் தெளிவும் பிறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button